August 2019

இந்தக் கேள்வி எம்மில் அதிகமானவர்களிடம் இருந்து வருவதையும் இவ்வாறு ஒன்றாக உணவு உற்கொள்ளும் போது இடையில் எழுந்து செல்வது நபி வழிக்கு மாற்றமானது என்ற சந்தேகம் பொதுவாக நிகழ்வதைப் பரவலாக காணமுடிகின்றது. இதற்கு ஒரு அடிப்படை இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உணவுத் தட்டு வைக்கப்பட்டால், அந்த உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை (உண்டு முடிக்கும் வரை) எந்த மனிதரும் எழுந்துவிட வேண்டாம். மேலும் மற்றவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் கையை உயர்த்த வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்வதனால் உங்கள் பக்கத்தில் இருப்பவரும் அவருக்கு இன்னும் சாப்பிட வேண்டும் என்ற தேவை இருந்தும் வெட்கப்பட்டு கையை எடுத்துவிடலாம்.
ஆதாரம்: இப்னு மாஜா 3295, ஹுல்யதுல் அவ்லியா 3/74, பைஹகி – ஷுஅபுல் ஈமான் 5478 இந்தச் செய்தியை அப்துல் அஃலா இப்னு அஃயன் என்பர் யஹ்யா இப்னு கஸீரை தொட்டும் அறிவிக்கின்றார்.
இந்தச் செய்தி மிகக் கடுமையான பலவீனமான செய்தியாகும். காரணம் அப்துல் அஃலா என்பவர் யஹ்யா இப்னு கஸீரைத் தொட்டும் அவர் சொல்லாதவற்றை அறிவிப்பதாகவும், இந்த அப்துல் அஃலா என்பவரை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் தனது ‘அல் மஜ்ரூஹீன்” என்ற புத்தகத்தின் 773 பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
மேலும் இந்தச் செய்தியை இமாம் இப்னுல் கைஸரானி மற்றும் இமாம் அல்பானி ஆகியோர் கடுமையான பலவீனமான செய்தி என தீர்ப்பளித்துள்ளார்கள்.(ஸில்ஸிலதுல் அஹாதீஸுல் லஈபாஃ 238) 
இதே கருத்தை வழியுறுத்தும் வகையில் இன்னுமொரு செய்தி பதியப்பட்டுள்ளது. அந்த செய்தியும் பலவீனமான செய்தியாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: (உணவு உற்கொண்டு முடிந்து) உணவுத்தட்டு உயர்த்தப்படும் வரை எழுந்திடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.ஆதாரம் இப்னு மாஜா 3294 இந்த செய்தியும் மிகப் பலவீனமான செய்தியாகும் என்று இமாம் அல்பானி அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஸில்ஸிலதுல் அஹாதீஸுல் லஈபாஃ 239) 
இது தொடர்பாக வந்திருக்கும் இரண்டு செய்திகளும் மிகப் பலவீனமான செய்தி என்பதனால் இந்த நடைமுறையை நபியவர்களோடு இணைத்து அவர்களது வழிமுறையாக காண்பிக் கூடாது.
என்றாலும் பொதுவாக இந்த நடைமுறை ஒன்றாகச் சாப்பிடுவதன் ஒழுங்குகளில் பேணப்பட வேண்டிய ஒரு நல்ல நடைமுறையாகும் என பல அறிஞர்கள் விளக்கியுள்ளனர். இமாம் இப்னு ஹஜர் அல் ஹைஸமி, இமாம் ஸன்ஆனி போன்றோர் சாப்பிடுவதன் ஒழுங்கு முறையைக் குறிப்பிடுகையில் ஒன்றாகச் சாப்பிடும் போது இடை நடுவே எழுந்திடுவது மற்றவர்களுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இந்த ஒழுங்கு முறையை பொதுவான ஒழுங்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நபிவழியாக நினைத்து ஒருவருக்கு எழுந்து செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும் போதும் நபிவழிக்கு மாற்றம் செய்யாதீர்கள் என்று அவரைக் கட்டாயப்படுத்தி உட்கார வைக்கக் கூடாது என்பதனை விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
                                                                                                    அஷ்சேஹ் றிஸ்கான் முஸ்தீன் மதனி 

காபிர்களை கண்ட இடத்தில் நீங்கள் கொல்லுங்கள்.(2:191) என்று குறிப்பிடுவதாக கூறும் இவ்வசனத்தினை கவனிப்போம்.


உண்மையில் இஸ்லாத்தை ஏற்காத மக்களை கொல்லும் படி கூறும் வசனமல்ல இது. நீண்ட தொடருடைய வசனங்களில் ஒரு சொற்றொடரை மட்டும் எடுத்துக் கொண்டு இவர்கள் தப்பான விளக்கம் தருகிறார்கள். இவர்கள் காண்பிக்கும் வசனம் 2:191ம் வசனமாக இருந்தாலும் அதன் தொடர் 2:190ம் வசனத்திலிருந்து துவங்கி 2:193 வசனங்கள் வரை நீண்டுச் செல்கிறது. இந்த வசனங்களை முழுமையாகப் படித்து விட்டே முடிவுக்கு வர வேண்டும் இதுவே அறிவாளிகளின் அழகிய அணுகுமுறையாகும்
2:190 வசனத்திலிருந்து 193ம் வசனம் வரையுள்ள முழுமையான வசனங்களை முதலில் அமைதியாகப் படியுங்கள் 
அல்குர்ஆன் இப்படி கூறுகிறது 'எவர்கள் உங்களுடன் போராடுகின்றார்களோ அவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்புமீறுபவர்களை நேசிக்க மாட்டான். (போரின் போது களத்தில்) அவர்களை நீங்கள் கண்ட இடத்தில் கொல்லுங்கள். இன்னும் உங்களை அவர்கள் வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது.
மஸ்ஜிதுல் ஹராமில் உங்களுடன் அவர்கள் போராடும்வரை நீங்கள் அவர்களுடன் போரிட வேண்டாம். ஆனால் உங்களுடன் அவர்கள் போரிட்டால் அவர்களை நீங்கள் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும். எனினும் அவர்கள் போரிடாது விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்.
குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள் ஆனால் அவர்கள் போரிலிருந்து விலகிக் கொள்வார்களேயானால் அநியாயக்காரர்கள் மீதே தவிர எந்த வரம்பு மீறுதலும் கூடாது. (2: 190: 191: 192.193)
இந்த வசனங்களை நிதானமாக படிப்பவர்கள் இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் குறித்து நல்லதொரு முடிவுக்கு வருவார்கள்.
``உங்களை எதிர்த்து போரிட வருகின்றவர்களுடன் போரிடுமாறு'' வசனம் ஆரம்பிக்கின்றது. நிச்சயமாக இவ்வசனம் போருடன் தொடர்ப்பான வசனமாகும். நபி முஹம்மத் (ஸல்) அவர்களை எதிர்த்து முஸ்லிம்கைள இல்லாதொழிக்க முஸ்லிம்களின் நாடானான மதீனா மீது போர் தொடுக்க மக்காவிலிருந்து வரும் எதிரிகளை எதிர்த்து போரிடுமாறு அனுமதி வழங்கி அருளப்பட்ட வசனமாகும்.
நபி(ஸல்) அவர்கள பிறந்து வளர்ந்த நாடான மக்காவில் தமது 40 வது வயதில் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். ஏக இறை கொள்கையை முன்வைத்து மக்களை ஒழுக்க ரீதியாக பண்பாட்டு ரீதியாக செம்மைப்படுத்தும் பணியில் ஈடுப்படடார்கள். இந்நிலையில் மக்கத்து மக்கள் இறை கொள்கைக்கு எதிராக கடுமையான எதிர்புக்களை காண்பித்து வன்முறைகளில் ஈடுப்படடார்கள்.
நபிகளாரையும் அவருடன் இருந்த முஸ்லிம்களையும் துன்புறுத்தி சித்திரவதைகளுக்கு உட்படுத்தினார்கள். உடமைகளை பறித்து அட்டூழியங் கள் புரிந்தார்கள். சமூகப்பகிஷ்கரிப்புக்கு ஆளாக்கி பசி பட்டினியில் வதைத் தார்கள். சிலரை கொலையும் செய்தார்கள். இக்கொடுமைகள் 13 வருடங்கள் தொடராக நிகழ்ந் தன.இக்காலக் கட்டங்களில் ஷஷஅல்லாஹ்வை காலை மாலை துதிக்கும் படியும் அவனைச் சார்ந்திருக்கும்படியும் நிராகரிப்பாளர்கள் அழகிய முறையில் வெறுத்து விடும் படியும்'' அல்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.
பொறுமையை கைகொள்ளுமாறும் நற்கூலியில் நல்லெண்ணம் வைக்குமாறும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தம்தோழர்களுக்கு அறிவுறுத்தினார்கள். முடிந்தவரை அகிம்வழியில் தான் பயணித்தார்கள்.
ஆனால் எதிரிகள் விட்டபாடில்லலை. இறுதியில் நபி(ஸல்) அவர்களை கொலை செய்யவும் முனைந்தார்கள். தம் தோழர்களை நாட்டை விட்டு வெளியேறும் படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள். பக்கத்து நாடான மதீனா, நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களை வரவேற்று அடைக்களம் கொடுத்து இஸ்லாத்திற்கு ஆதரவுதெரிவித்தது.
இந்நிலையில்,இஸ்லாம் மதீனாவில் வளரக்கூடாது முஸ்லிம்களை விட்டு விடக் கூடாது கருவறுக்க வேண்டும் என்று மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்; மதீனா மீது போர் தொடுக்க விளைகிறார்கள். மதீனாவை ஆக்கிரமிக்க வரும் எதிரிகளை எதிர்த்து- மக்காவிலிருந்து உங்களை வெளியேற்றியது போல் மதீனா மண்ணிலிருந்து அவர்களை நீங்களும் வெளி யேற்றிட வேண்டும் என்றும் போர் களத்தில் கண்ட இடத்தில் அவர்களை கொன்று விட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் கட்டளை வந்தது.
இந்த வசனத்தில் அவர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்ற கட்டளை போர்களத்தில் எதிரிகளுடன் புரியும் சண்டையைப் பற்றி குறிப்பிடுவதாகும்.

விளக்கம் தொடரும் இன்ஷாஅல்லாஹ்

                                                                            அஷ்சேஹ் இம்தியாஸ் யூசுப் ஸலபி 

சுவனத்துக் கண்ணழகிகளை எந்தக் கண்ணுமே கண்டிராத பெண்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அது அவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சிறப்பு. இவ்வுலகத்துப் பெண்கள் அவர்களின் அழகையோ சிறப்பையோ குணத்தையோ எட்டிவிட முடியாது. ஆனாலும் சுவனத்துப் பெண்களைப் போன்று தன் கணவன் மட்டுமே என்னைப் பார்க்க வேண்டும். வேறு அண்ணிய ஆண்கள் தன்னைப் பார்த்து விடக்கூடாது என்று அந்த சுவனத்துக் கண்ணழகிகளைப் போன்று வாழ நினைப்பபதில் தவறேதுமில்லை.
அன்னிய ஆண்கள் தன்னைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய இயல்பையே மாற்றிக் கொள்ளக்கூடிய இந்தக் காலத்து பெண்களுக்கு மத்தியில் தன்னை யாருமே பார்த்து விடக்கூடாது என தன்னை மறைத்துக்கொள்ள விரும்பும் பெண்கள் அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களே.
விதம் விதமாக தன்னை அலங்கரித்து எல்லா அங்கங்களின் அளவும் தெளிவாகத் தெரியும் அளவுக்கு இருக்கமான ஆடையணிந்து நபிகளார் நரகவாதி எனவும் சுவனத்தின் வாடையைக்கூட நுகர முடியாது என்றும் கூறிய பெண்கள் போலல்லாமல் எத்துனை எதிர்ப்புகள் அவமானம் தடைகள் வந்தாலும் கற்பைப்பேனி வாழப் போராட்டம் நடத்த சுவனத்துப் பெண்களாளே தவிர வேறு யாரலும் முடியாது.?
பெண்னின் அழகு அவளின் முகத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது இதை யாரும் மறுக்க முடியாது அந்த முகம் என்ற அலங்காரப்படைப்பு தன் கற்புக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை மறைத்துக் கொள்ளும் பெண் திறைக்கு பின்னிருந்தே அன்னிய ஆண்களுக்கு பதில் கூறுங்கள் என்ற இறைவசனத்துக்கு கட்டுப்பட்ட நபிகளாரின் மனைவியரை முன்மாதிரியாக கொண்டவள்.
அழகான பெண்ணோ அழகற்ற பெண்ணோ ஓர் ஆண் அவளைக் கண்டால் காதலோ காமமோ ஆசையோ அவன் மணதில் உதித்து விடும் இதை இல்லையென்று எந்த ஆணாலும் மறுக்க முடியாது. இதை மறுப்பவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப் பட்டவர்களே. அப்படியிருக்க தன்மூலம் ஒர் ஆண் வழி தவறிவிடக்கூடாது என தன்னையும்' பிறறையும் தவறு செய்யாமல் பாதுகாக்க அல்லாஹ்வின் அருள் பெற்றவர்களாளே தவிர வேறு யாராலும் சாத்தியமாகாத ஒன்றே.
பெண்ணானவள் உலகத்தில் ஒர் அழங்காரப் பொருளாகவே படைக்கப் பட்டிருக்கிறாள். அதனால் தானோ எல்லா இடங்களிலும் தன் அழகை வெளிக்காட்டுதை சில மாணங்கெட்ட தந்தைமாறும் ரோஷம் இல்லாத சகோதரர்களும் வீரத்தை இழந்த கணவன்மாறும் மௌனிகளாக நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றியதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று நினைத்து தன் அவ்ரத்துக்களை மட்டுமல்லாது தன் அங்க அடையாளங்களையும் மறைத்து கற்பைப்பேணும் பெண்களை அவமானப் படுத்தியும் அர்களின் பேணுதலை ஏளனப்படுத்தியும் பேசுகின்ற எழுத்துக்களால் வசைபாடுகின்ற ஒவ்வொருவரும் நாளை மறுமை நாளில் புறம் பேசி அவதூறு கூறியதற்கான தண்டனையை எதிர்பார்த்துக் கொள்ளட்டும்.
முகத்தை மூடும் பெண்கள் வெறும் துறவிகளாகப் படைக்கப்படவில்லை அவர்களும் காதல் காமம் ஆசை என்பவற்றுடனே படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஈமானோடும் இறையச்சத்தோடும் தன் கற்ப்பையும் பார்வையையும் அதிகமாகவே கட்டுப்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். அதனால் தான் முன்சென்ற இமாம்கள் கூறினார்கள் வெட்கம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஆடை அதிகரிக்கும் என்று இன்று ஆடைக்குறைப்பு ஒழுக்கமாக பார்கப்படுகின்றது.

குறிப்பு:
முகம் மூடும் பெண்கள் தான் சிறந்தவர்கள் ஸாலிஹானவர்கள் என்று பத்வா கூறவில்லை. அவர்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கின்றனர். முகத்தை மூடாமலே தன்னை அண்ணிய ஆண்களின் கண்ககளிலிருந்து மறைத்து ஒழுக்கமாக வாழக்கூடியவர்கள் அதிகமாகவே உள்ளனர். எனவே விமர்சிப்பவர்கள் அணிந்த ஆடைகளைக் களைய வைத்து பித்னாக்களை உருவாக்க முயற்சி செய்யாமல் ஆடையின்றி நிர்வாணிகளாக வளம் வருபவர்களுக்கு ஆடை அணிவிக்க முயற்சி செய்து உங்களதும் எனதும் எதிர்கால சந்ததிகளை பித்னாக்களில் இருந்து பாதுகாப்போம்.
இன்ஷாஅல்லாஹ்

                                               ஆக்கம் : ஷிபானா நவாஸ்தீன் (உஸைமீனிய்யா)

இஸ்லாம் மார்க்கம் குறித்து பலவகையான விமர்சனங்களும் தாக்குதல்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அதில் ஒன்று தான் 'காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுமாறு' குர்ஆன் தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டாகும்.   
இக்குற்றச் சாட்டின் மூலம் இஸ்லாத்தை பயங்கரவாத மிலேச்சத்தனமான மார்க்கமாக சித்தரிப்பதும் குர்ஆனை பயங்கரவாத போதனையாக காண்பிப்பதும் இவர்களது நோக் கமாகும்.
ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கண்டு சகிக்காதவர்கள் இக்குற்றச்சாட்டை பலங்காலமாக கூறி வருகின்றனர். அமெரிக்காவின் மீது தொடுக்கப்பட்ட 9 \11பயங்கரவாதச் செயலை நினைவூட்டல் நிகழ்வுக்கான ஏற்பாட்டின் போது ஒரு கிறிஸ்தவ போதகர் குர்ஆனை எரிக்க வேண்டும் இது பயங்கரவாதத்தை போதிக்கிறது என்று கூறினார். நெதர்லாந்து பாராளுமன்ற அமைச்சர் ஒருவரும் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினார். இப்படி பலரும் கூறியதுண்டு.
இவர்களது இவ்வாறான பிரச்சார நடவடிக்கைகள் கட்ட விழ்த்து விடப்பட்டிருந்த போதும்- அதிக விளம்பரங்கள் செய்த போதும்- கூட ஐரோப்பாவில் நாளுக்கு நாள் இஸ்லாம் வளர்கிறது. மக்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் எந்த காபிரையும் கொல்லவுமில்லை பயமுறுத்தி இஸ்லாத்திற்குள் அழைக்கவுமில்லை.
ஒன்றுக்கும் உதவாமல்போன இப்பிரச்சாரத்தையே இப்போது எமது நாட்டிலுள்ள ஒருசிலர் பரப்பிவருகின்றனர். குர்ஆனை தடை செய்யவேண்டும் என்றும் கோஷ மிடுகிறார்கள்.
இஸ்லாம், 
எதிர்க்கப்டும போது மக்களின் உள்ளங்களில் விதைக்கப்படுகின்றது.
தடுக்கப்படுகின்ற போது வளர்க்கப்படுகின்றது.
அடக்கப்படுகின்றபோது ஆராயப்படுகின்றது
விமர்சிக்கப்படுகின்ற போது அலசப்படுகின்றது.
பயமுறுத்தப்படுகின்ற போது வாசிக்கப்படுகின்றது.
ஓரம் கட்டப்பட வேண்டும் எனும் போது ஒத்துக் கொள்ளப்படுகின்றது.
இது தான் வரலாற்று உண்மை. மேலும் எவர்கள் எதிர்ப்பலைகளை அசைத்து விட்டர்களோ இறுதியில் அவர்களே மனம் மாறி இஸ்லாத்தை தழுவிவிடுகிறார்கள்.
நாம் வாழும் நாட்டில் முஸ்லிமல்லாத நண்பர்களின் எந்தவொரு வீட்டுக்கும் இதுகாலவரை இஸ்லாத்தை கொண்டுப் போய் சேர்ததில்லை. அவர்களுடன் சகஜமாக பழகினோம் சக வாழ்வை மேற்கொண்டோமே தவிர இஸ்லாத்தை எத்திவைக்க வில்லை. அது பற்றி கலந்துரையாட வில்லை.
தற்போது அந்த ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இஸ்லாம் மற்றும் குர்ஆன் சம்பந்தமான உரையாடலுக்கான வாய்ப்பு திறந்து விடப் பட்டுள்ளது. இவர்களின் எதிர்பிரச்சாரத்தின் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளது. மக்கள் குர்ஆனை படிக்கவும் விளக்கம் கேட்கவும் தொடங்கி விட்டார்கள். இப்படி தான் இஸ்லாம் பேசும் பொருளாக ஆளும் மார்க்கமாகவும் மாறியது.
இஸ்லாம் பலாத்காரத்தை பிரயோகிக்கும் மார்க்கமல்ல முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு வேற்றுமை பாராட்டுமாறு போதிக்கும் மார்க்கமுமல்ல. மாறாக அவர்களது மதக் கொள்கைகளை மதித்து அன்பு கருணைக் காட்டி நீதி நியாயத்துடன் நடந்து கொள்ளுமாறு பணிக்கின்றது. குர்ஆனின் இப்போதனைகளை கவனத்தில் கொள்ளாது ‘’காபிர்களை கண்ட இடத்தில் கொல்ல சொல்லும் '' வேதமாக குர்ஆனை விமர்சிக்கின்றார்கள்.
இந்த உலகில் குர்ஆன் 1400 வருடங்களுக்கு மேலாக மக்களின் பாவனையில் உள்ளது கோடிக்கணக்கான மக்கள் குர்ஆனை படிக்கிறார்கள். பின்பற்றுகிறார்கள். இஸ்லாத்தின் வாழ்வுமுறையை குர்ஆனிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். குர்ஆனின் போதனை களுக்கு அப்பால் எந்த முஸ்லிமும் வாழ்வதில்லை.

உண்மை இவ்வாறு இருக்கையில் முஸ்லிமல்லாதவர்களுடன் வஞ்சனையுடன் நடந்த கொள்ளுங்கள். அவர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று குர்ஆன் கூறுவதாகக் கூறும் செய்தி இவர்களுக்கு எப்படி வந்தது?
இலங்கை திருநாட்டுக்கு வியாபாரிகளாக முஸ்லிம்கள் வந்தார்கள் மன்னர்களின் மனம் வென்றார்கள் போர்களிலும் பங்கெடுத்தார்கள். இங்குள்ள பெண்களை மணந்தார்கள். நாட்டின் பலபகுதிகளிலும் குடியேறினார்கள். சுதந்திரத்திற்காக உழைத்தார்கள். அன்று முதல் இன்றுவரை நல்லிணக்கத்துடன் அல்லவா வாழ்கிறார்கள். காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்ற ஆணைஇருந்திருந்தால் அதற்கேற்றவகையில் அல்லவா உலகம் பூராவுமுள்ள முஸ்லிம்கள் செயற்பட்டிருப்பார்கள்.
இஸ்லாம் பலாத்காரத்தை பிரயோகிக்கும் மார்க்கமல்ல முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு வேற்றுமை பாராட்டுமாறு போதிக்கும் மார்க்கமுமல்ல. மாறாக அவர்களது மதக் கொள்கைகளை மதித்து அன்பு கருணைக் காட்டி நீதி நியாயத்துடன் நடந்து கொள்ளுமாறு பணிக்கின்றது.
உண்மையில் இஸ்லாத்தை ஏற்காத காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டளையிடும் எந்ததொரு வசனமும் குர்ஆனில் எங்கும் இல்லை. இவர்கள் தங்களது கூற்றை நிரூபிக்க-

குர்ஆனின் 2ம் அத்தியாயத்தின் 191ம் வசனத்தையும்
4ம் அத்தியாயத்தின் 89 வசனத்தையும்
9ம் அத்தியாயத்தின் 5ம் வசனத்தையும் காண்பிக்கிறார்கள்.
இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை புரிந்து கொள்ள முன் குர்ஆன் பற்றிய ஒரு குறிப்பபை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும்.
குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து 23 வருடங்கள் இறங்கியது. கால சூழ்நிலமைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப ஓரிரு வசனங்களாக இறங்கியதே தவிர மொத்தமாக ஒரே சந்தர்ப்பத்தில் இறங்கியவையல்ல. அந்த வசனங்களை ஒழுங்குப்படுத்தி தொகுத்து ஒவ்வொரு அத்தியாயமாக நபி(ஸல்) அவர்கள் அமைத்துத் தந்தார்கள்.
ஒரு அத்தியாயத்தில் குறிப்பிடும் செய்தி முன்னுள்ள வசனத்தின் தொடராகவும் பின்னால் வரும் வசனங்களின்தொடராகவும் அமையும் அதுபோல் அவ்வசனத்தின் குறிப்பு அதே அத்தியாயத்தின் இன்னுமொரு இடத்தில் அல்லது வேறொரு அத்தியாயத்தின் மற்று மொரு பகுதியில் விரிவாக இடம் பெறும்.
குர்ஆனின் வசனங்களை புரிந்து கொள்ள முற்படும் போது அந்த வசனங்கள் எங்கே எப் போது எந்தச் சூழலில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டன. அந்த வசனம் குறிப்பிட்ட நிகழ்வுக்கு அல்லது சமூகத்திற்கு மாத்திரம் அருளப்படடதா அல்லது எல்லா சமூகத்திற்குரியதாக அருளப்பட்டதா? வசனத்தில்இடம் பெறும் வார்த்iதைகள் மற்றும் வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த வியாக்கியானம் என்ன? நடைமுறைப் படுத்திய முறை என்ன? குர்ஆனை நடைமுறைப்படுத்திய நபித்தோழர்கள் அந்த செய்திகளை (வசனங்களை) எப்படி புரிந்து கொண்டார்கள்.
மேலும் இதில் முதலில் இறங்கிய வசனம் எது? அதற்கு மேலதிக விளக்கமாக இறங்கிய வசனம் எது? முதலில் வந்த சட்டத்தை மாற்றி விட்டு கடைசியாக வந்த சட்ட வசனம் எது? என்பன போன்ற அடிப்படைகளை அறிந்து தான் குர்ஆனை அணுகவேண்டும். மே லோட்டமாகப் பார்த்து புரிந்து கொள்ள முற்பட்டால் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இதனை மனதில் கொண்டு இவர்கள் முன்வைக்கும் வசனங்களுக்கான விளக்கங்களை பார்ப்போம்.

                                                விளக்கம் தொடரும் இன்ஷாஅல்லாஹ்

           அஷ்சேஹ் எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget