வருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிருப்பதனை காணலாம். ஆனால் அவர் அங்கு அடங்கப்படிருக்கிறாரா? என்றால் இல்லவே இல்லை அன்னார் இந்தியாவின் நாகூர் எனும் ஊரில் அடங்கப்பட்டிருக்கிறார் இன்றும் அவருடைய கப்ர் அங்கேதான் நாகூர் தர்ஹாவில் இருக்கின்றது.
விடையம் இப்படி இருக்க எப்படி இந்த ஆளில்லாத கப்ரை மக்களால் கல்முனையில் ஸியாரத்து செய்ய முடியும்?? இங்கு நடப்பது கப்ர் வணக்கமல்ல ஷாஹுல் ஹமீதின் பெயரில் கல் வணக்கம் என்பதே உண்மை. ஒருவருக்கு இரு கப்ர்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
எப்படி இது கப்ரானது தெரியுமா.?
கல்முனையில் உள்ள கடற்கரைப் பள்ளி (கொடியேற்றப் பள்ளியை) பொருத்த வரை அது உருவான வரலாறு தெரிந்திருக்க அவசியமான ஒன்றாகும். "கல்முனையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது தம்பி லெவ்வை என்பவரை அவரின் நோயின் காரணமாக தற்பொழுது கடற்கரைப் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் ஒரு குடிசையை அமைத்து அவர் கடல் காற்றைப் பெற்று குணமடையும் பொருட்டு மக்கள் தங்க வைத்திருக்கிறார்கள்.
இவர் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவுத் தொழுகையை தொழுதுவிட்டு தூங்கிய பொழுது இவரது கனவில் பச்சை தலைப்பாகை அணிந்து வாட்டசாட்டமான உடலோடும் சந்திரனை ஒத்த முகத்தோடும் ஒருவர் தோன்றி உனது குடிசையின் கிழக்கே சுமார் 100 யார் தூரத்தில் கடற்கரை மண் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றது அந்த மண் முகட்டில் ஒரு அழகான தேசிப்பழமும் கான மயில் இறகும் வைத்திருக்கிறேன் நீ அவ்விடம் சென்று என் நினைவாக ஒரு இறையில்லத்தை அமைத்து விடு இன்றோடு உனது உடல் நோய் காணாமல் போய்விடும் எனது பெயர் ஸாஹுல் ஹமீத் எனக் கூறிவிட்டு மறைந்து விட்டாராம்."
இவர் கண்னை விழித்ததும் உடலில் நோய் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாதளவிற்கு நோய் குணமடைந்திருந்ததாம் குடிசையின் கிழக்கே 100 யார் தூரத்தில் சென்று பார்தாராம் மண்குவியலும் அதன் மேல் தேசிப்பழமும் மயிலிறகும் இரும்பதைக் கண்டு அங்குள்ள மரங்களை முறித்து அவ்விடம் ஒரு பந்தலை அமைத்துவிட்டு அன்று ஜும்ஆவிற்க்கு பிறகு மக்களிடம் போய் நடந்தவற்றை கூறி இருக்கிறார் மக்களும் வந்து பார்த்துவிட்டு அந்த பந்தலை அலங்கரித்து ஸாஹுல் ஹமீது நாயகத்தின் பெயரால் மவ்லிது ஓதவும் வருடா வருடம் ரபியுல் ஆகிர் முதல் பிறையோடு கொடியேற்றி கந்தூரி அன்னதானம் வழங்கவும் அரம்பித்தார்களாம்." (வீரகேசரி பத்திரிகை நவம்பர்-07-1994)
இப்படி ஒரு நோயாளி அங்கு தங்கவைக்கப்பட்டது உண்மை வரலாறுதான் ஆனால் அவர் கண்ட கனவும், அதில் உள்ளடங்கயிருப்பவைகளும் இஸ்லாத்திற்க்கு நேரெதிரானதும் மகா மடமை பொய் கட்டுக்கதைகளுமாகும். கனவில் வந்தவர் எப்படி மண்குவியலையும், தேசிப்பழத்தையும், கான மயில் இறகையும் நிஞத்தில் கொண்டுவந்தார்?? இப்படி ஒரு அற்புதம் நடக்க இந்த ஷாஹுல் ஹமீத் யார் நபியா?? இதற்க்கு மார்கத்தில் ஒரு ஆதாரமேனும் உண்டா?? கிடையவே கிடையாது.
அடுத்து "கனவில் வந்தவர் பச்சை தலைப்பாகையோடு வந்தார்" அது ஏன் பச்சை?? மக்களை நம்ப வைக்கவா?? பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா?? "நீ பள்ளிவாசல் ஒன்றை என் ஞாபகார்தமாக அமைத்தால் உன் தீரா நோய் நீங்கிவிடும்"
நோயை நீக்கும் அதிகாரம் பெற்றவன் ஒரே அல்லாஹ்வாக இருக்கும் பொழுது ஷாகூல் ஹமீது அந்த அதிகாரத்தை எப்பொழுது பெற்றார்?? இது தெளிவான இணைவைப்பு இல்லையா??
பள்ளியை அமைத்தால்தான் நோய் நீங்கும் என்றார் ஆனால் கனவிலிருந்து கண் விளித்த போதே நோய் குணமடைந்தது எப்படி?? இதுவொன்றே போதும் இது பொய்ப் பித்தலாட்ட சாமியார்களால் வயித்து பிழைப்புக்காக கட்டப்பட்ட கதையென்று.
அஷ்சேஹ் ஸாபித் ஷரஈ
Post a Comment