2019

ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.


பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான்விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்;ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் இவைகள். சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்ற, நரகின் வாயில்கள் மூடப்படுகின்ற, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்ற, நரகத்திற்குரியவர்கள் ஒவ்வொரு இரவும் விடுதலை செய்யப்படுகின்ற, ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவுள்ள இப்படி அதிக பாக்கியங்கள் நிறைந்த சிறப்புமிகு ரமழானின் வருகை எப்படி ஒரு முஃமினுக்கு மகிழ்ச்சி தராமல் இருக்க முடியும்?முதல் பத்து ரஹ்மத்துடைய (அருள் நிறைந்த) பத்து
இரண்டாம் பத்து மஃபிரதுடையது (பாவமன்னிப்பு)
மூன்றாம் பத்து இத்குன் மினன் நார் (நரக விடுதலை)
ஸல்மான் அல்பாரிஸி (ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் செய்தி இப்னு ஹுஸைமாவில் 1887 ஆம் இலக்கத்திலும், அல் மஹாமிலி தனது அமாலீ எனும் கிரந்தத்தின் 293 ஆம் பக்கத்திலும், பைஹகி அவர்கள் ஷுஅபுல் ஈமானின் (7/216) இலும் இன்னும் சில அறிஞர்களும் இந்த செய்தியை பதிவு செய்துள்ளனர். என்றாலும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இரு குழறுபடிகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. 

1) அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸஈத் இப்னு முஸய்யிப் அவர்கள் ஸல்மானுல் பாரிஸி (ரழி) அவர்களிடம் இந்த செய்தியை கேட்டதாகப் பதியப்பட்டுள்ள போதிலும் ஸஈத் இப்னு முஸய்யிப் ஸல்மான் (ரழி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டதாக எந்த ஆதாரமும் கிடையாது.
2) இந்த அறிவிப்பாளர் வரிசையில் ‘அலி இப்னு செய்த் இப்னு ஜத்ஆன்’ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் ஹதீஸ் துறை அறிஞர்களுக்கு மத்தியில் பலகீனமானவராகக் கருதப்பட்டவர். இவர் பலகீனமானவர் என்பதை இமாம்களான அஹ்மத், இப்னு மயீன், இப்னு ஹுஸைமா, நஸாயி போன்றோர் சான்று பகிருகின்றனர். ஆதாரம் “ஸியர் அஃலாமுன் நுபலா” (5/207)

இமாம் அல்பானி அவர்களும் தனது “ஸில்ஸிலதுல் அஹாதிஸ் அல்லயீபா வல் மவ்லூஆ” என்ற கிரந்தத்தில் (871) இலக்கத்தில் இந்த செய்தி பலகீனமானது என்பதை உறுதி செய்கிறார்.
மேலும் இந்த செய்தியின் மதன் (கருப்பொருளிலும்) முறன் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். காரணம் ரமளான் மாதத்தை பொறுத்தவரை அதனுடைய எல்லா நாற்களிலும் அல்லாஹ்வின் ரஹ்மதாகிய அருளும், அவன் மன்னிப்பும் மேலும் எல்லா இரவுகளிலும் நரக விடுதலையும் இடம் பெறுவதாக ஸஹீஹான ஹதீஸ்களில் காண முடிகின்றது. இவ்வாறு முழு மாதத்திலும் அல்லாஹ்வின் அருள், மன்னிப்பு மற்றும் நரக விடுதலை இருக்கும் இந்த மாதத்தை இவ்வாறு மூன்றாகப் பிரிப்பது பிழையான வழிகாட்டலாகும் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
புனிதம் பூத்துக் குலுங்கும் புனித ரமளானின் சிறப்பு தொடர்பாக ஏகப்பட்ட ஸஹீஹான செய்திகள் இருக்க இவ்வாறான பலஹீனமான செய்திகளை பதிவதிலும், பகிர்வதிலும் இருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் புனித ரமளான் மாத்தில் நல்லரங்கள் செய்வதற்கான பாக்கியத்தை எம்மனைவருக்கும் ஏற்படுத்தி, எமது நோன்பையும் இரவு வணக்கத்தையும் ஏனைய வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வானாக!
அரபு மூலம்: islamqa.info/ar/answers/21364
தமிழில்: எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி

இக்குர்ஆன் நாளை மறுமையில் அதனை ஓதியவருக்காக பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கின்றது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ‘அல்குர்ஆனை ஓதுவீராக , நிச்சயமாக அது நாளை மறுமையில் அதனை ஓதியவருக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக வரும்.’ (ஆதாரம் : முஸ்லிம்)அன்றியும் உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால்இ ‘நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால்இ உம் நன்மைகள் (யாவும்) அழிந்துஇ நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). [சூரதுஸ் ஸுமர்:65]  அன்புள்ள சகோதர சகோதரிகளே! மனிதர்களாக பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. பாவத்தை விட்டும் பாவமன்னிப்பை விட்டும் அப்பாற் பட்டவர் எவருமில்லை. நாம் செய்த பாவத் திற்கு பச்சாதப்பட்டு, அழுது கண்ணீர் வடித்து அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்தவர்களாக மன்னிப்புக் கோரவேண்டும்.சகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள்
உட்பட செய்து கொண்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் 

நபிகளாரில் அழகிய முன்மாதிரி எமக்கிருக்க இத்தகைய சகவாழ்வின் முன்னோடிகள் யார்.? நபிகளாரின் மக்கா வாழ்வு இணைவைக்கும் பெரும்பான்மை சமூகத்துடனாக இருந்தது. அவர்கள் இஸ்லாத்துக்கு முரணான எந்த ஒரு நிகழ்விலாவது கலந்து கொண்டதுன்டா..?

சகவாழ்வு என்பது இஸ்லாத்தின் தனித்துவத்தை சிதைப்பதன்று. அவரவரின் மார்க நிலைப்பாடுகள் மற்றும் கலாசாரங்களை பேணி வாழ சுதந்திரமளிப்பதோடு பொது விடயங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் உதவி ஒத்தாசையோடு நடப்பதுமே சகவாழ்வு. இதை நபிகளாரின் மதீனா வாழ்வு எங்களுக்கு அழகிய பாடமாகச் சொல்கின்றது.

நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்த போது மதீனாவை சுற்றி இருந்த யூதர்களுடன் ஒர் ஒப்பந்தம் செய்தார்கள் அது என்ன ஒப்பந்தமெனில் மதீனாவுக்கு வெளியே உள்ள ஒரு கூட்டம் எங்களை தாக்க வந்தால் எங்களோடு இணைந்து நீங்களும் அவர்களை தாக்க வேண்டும். அது போல் உங்களை யாரேனும் தாக்க வந்தார்கள் என்றால் உங்களோடு இணைந்து அவர்களை நாமும் தாக்குவோம் என சகவாழ்வு அடிப்படையில் நாட்டின் தேசிய பாதுகாக்க நபிகளார் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தார்கள்.

சகவாழ்வு என்பது இந்த அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே ஒழிய இஸ்லாமிய கொள்கைக் கோற்பாடுகளை சிதைப்பதாக இருக்க கூடாது.

இன்று நிர்பந்தம் எனும் சூழல் இல்லாது இருக்க நிர்பந்தம் எனும் சூழலை சகவாழ்வு என்ற பெயரில் நம் தலைமைகள் உருவாக்கி விடுவார்களோ என அச்சம் கொள்கின்றேன் . இன்று சகவாழ்வின் பெயரால் செய்யப்படும் வரம்பு மீறல்கள் நாளைய எம் சந்ததியினருக்கு தினிக்கப்படலாம் என்பதை மறந்து விட வேண்டாம்.

கொள்கையை இழந்து உரிமைகளையோ உடமைகளையோ பெறவேண்டிய அவசியம் நமக்கில்லை .

وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏
(இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்களும் அவர்களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் : 3:146)

சோதனைகள் இறைவனை நொருங்குவதற்கே அன்றி இஸ்லாத்தை விட்டு வெளியேற அல்ல. அல்லாஹ் யாரை விரும்புகின்றானோ அவரை சோதிப்பான் இந்த உலகில் அதிகம் சோதிக்கப்பட்டோர் மனிதப்புனிதர்களான நபிமார்கள்.

நாம் வளைந்து கொடுக்க வேண்டும்எ ன்றே அவர்களும் விரும்புகின்றனர்
وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
(முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர் திருக்குர்ஆன் 68:9

(நபியே) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்க்கி கொஞ்சம் சாய்ந்திருப்பீர். அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையை சுவைக்க செய்திருபோம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காணமாட்டீர். (சூரா பனூ இஸ்ராஈல் - 17:74,75)

இதன் முடிவு இஸ்லாத்தை விட்டே வெளியேற வேண்டி நிற்கும் . அப்போது தான் இறை மறுப்பாளர்களை இவர்கள் திருப்திபடுத்த முடியும்.
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ‌ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ وَلَٮِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ الَّذِىْ جَآءَكَ مِنَ الْعِلْمِ‌ۙ مَا لَـكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍؔ‏

(நபியே!) யூதர்களும் கிறிஸ்தவர்களும், அவர்களுடைய வழி முறையை நீர் பின்பற்றாத வரை உம்மைப் பற்றி மன நிறைவடையவே மாட்டார்கள். “அல்லாஹ் காட்டிய வழியே நேர்வழியாகும்” என்று அவர்களிடம் நீர் தெளிவாகச் சொல்லி விடும். மேலும் இந்த ஞானம் உம்மிடம் வந்த பிறகும், அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றுவீராயின் அல்லாஹ்வின் பிடியிலிருந்து காப்பாற்றும் நண்பரோ உதவியாளரோ எவரும் உமக்கு இருக்கமாட்டார். அல்குர்ஆன் :

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!” (அல்குர்ஆன் : 3:147)

முஸ்லிம்கள் கோழைகள் அல்ல. நல்லிணக்கம் என்ற போர்வையில் பயத்தின் உச்சகட்டம்! அல்லாஹ்வின் உதவியில் சந்தேகப்பட்டவர்கள்! 

இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது. அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு. எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு. நல்லிணக்கம் என்ற பெயரிலேயே அல்லாஹ்வுக்கு இணை வைப்பது அவர்களுடைய மத வழிபாடுகளில் ஈடுபடுவதை இஸ்லாம் எந்த இடத்திலே அனுமதித்துள்ளது ?முஸ்லிம்கள் வெசாக் கொடியை கட்டி நல்லுறவை ஏற்படுத்துகிறார்களாம்?
இதற்குதான் நபிகளார் சொன்னார்கள் வஹ்ன் என்று
-உலக ஆசை, மரண பயம் 2:107
2:107 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَا لَـکُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِىٍّ وَّلَا نَصِيْرٍ‏
நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
இனியும் முஸ்லிம்கள் அமைதியாக இருந்தால் இந்த தலைவர்கள் நடுத்தெருவில் விட்டு விடுவார்கள். எனவே முஸ்லிம்கள் சிந்திக்காவிட்டால் பலவந்தமாக உங்களுக்கு அவர்கள் மார்க்கத்தை திணிப்பார்கள்.

                                                                             அஷ்சேஹ்  இன்திகாப் உமரி

தக்க காரணம் இல்லாமல் நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்.. அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) கூறினார்கள்: “நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் இருவர் வந்து என்னை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அந்த மலை மேல் ஏறுமாறு ஏவினார்கள். நான் அதில் ஏற சக்தி பெற மாட்டேன் என்றேன். இல்லை ஏறுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்றனர். நான் மலையில் எறியதும் கடுமையான சத்தத்தை கேட்டு இது என்ன சத்தம் என்று அவர்களிடம் வினவினேன். இது நரக வாசிகள் ஊலையிடும் சத்தம் என்று கூறிவிட்டு என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றனர்.
அப்போது தலை கீழாக தொங்கவிடப்பட்டு தமது வாய்கள் அறுக்கப்பட்டு வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தைப் பார்த்து யார் இவர்கள் என்று அந்த இருவரிடமும் கேட்டேன்.
அப்போது இவர்கள் தான் நோன்பு காலங்களில் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பைத் திறந்து கொண்டவர்கள் என்று சொல்லப்பட்டது.
ஆதாரம்: முஸ்தத்ரகுல் ஹாகிம் 1609. இமாம் ஹாகிம் , இமாம் தஹபி ஆகியோர் ஸஹீஹ் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன் நோன்பை திறப்பதற்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சோம்பேறித்தனமாக நோன்பை விட்டு விடுபவர்கள் அல்லாஹ்விடம் எப்படி பதில் சொல்ல முடியும்?
எனவே தக்க காரணமின்றி நோன்பை விடுபவர்களுக்கு இந்த கடும் எச்சரிக்கைகளை நாம் சொல்லியாக வேண்டும். அப்படிப்பட்டவர்கள் எமது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் (மனைவி, வயது வந்த பிள்ளைகள்) அவர்கள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது எமது கடமை என்பதையும் மறந்துவிடலாகது. அப்படி மறந்து விட்டால் நாமும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டிவரும்..
மேலும் இமாம் தஹபி அவர்கள் தனது ‘அல்கபாஇர்’ (பெரும் பாவங்கள்) என்ற புத்தகத்தில் பத்தாவது பெரும் பாவமாக ரமழான் நோன்பை தக்க காரணமின்றி விடுவதை குறிப்பிட்டுள்ளார்கள். அல்கபாஇர் பக்கம் 62
எல்லாம் வல்ல அல்லாஹ் புனித ரமழான் மாத்தில் அவனால் கடமையாக்கப்பட்ட நோன்பை பாழ்படுத்திவிடாமல் நல்ல முறையில் நோற்று நாளை மறுமையில் ரய்யான் என்ற வாசலினால் சுவர்க்கத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தை எம்மனைவருக்கும் தந்தருள்வானாக!
யா அல்லாஹ் எமது நோன்பையும் இதர கடைமைகளையும் நீ பொருந்திக் கொள்வாயாக!
                                                                                       அஷ்சேஹ் எம். றிஸ்கான் முஸ்தீன் மதனி

சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.(புகாரி 3257)இறைவனின் மீதான நம்பிக்கையும் அச்சமும், இறுதித் தீர்ப்பு நாளொன்றின் மீதான நம்பிக் கையும் அச்சமும்தான் ஒரு முஸ்லிமை நல்லவனாகவும், பிறர் நலம் நாடுபவனாகவும் இருக்கச் செய்கின்றன, தீமைகளை விட்டு தொலைதூரத்திற்கு அவனை விலக்கி வைக்கின்றன. சட்டங்கள், சம உரிமை கோரும் பிரச்சாரப் போராட்டங்கள் போன்றை சாதித்ததைக் காட்டிலும் பெருமளவு மாற்றங்கள் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்டதற்குப் பின்னணியில் இக்காரணிகளே அச்சாரமாய் விளங்கின.எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் நோன்பில் வழங்கி இருக்கும் சலுகையை நாமும் வழங்க வேண்டும் அவர்கள் நோன்பு நோற்பது கடமை இல்லை என நபிகளார் தெளிவாகவே கூறி உள்ளார்கள் இதிலே மாற்று கருத்து கூறுவோர் நான் மேலே முன்வைத்த அல் குரானின் வசனத்தை நன்கு படித்து வஹியை மாத்திரம் பின்பற்றி நாளை மறுமையில் வெற்றி பெரும் கூட்டத்தில் சேர முயற்சிக்க வேண்டும்.நோன்பாளி பகல் நேரத்தில் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து தவறானதாகும். பொதுவாக இஸ்லாம் அடிக்கடி பல் துலக்குவதை வரவேற்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு தொழுகைக்காகவும் பல் துலக்குவது கட்டாய ஸுன்னத்துக்களில் ஒன்றாகும். எனவே, நோன்போடு இருக்கும் போது பல் துலக்குவதில் எந்த தடையும் இல்லை.


உலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமளானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். வீடுகளை சுத்தப்படுத்துவது, தொலைக்காட்சி பெட்டிகளை அகற்றுவது, பள்ளிவாயல்களை அலங்கரிப்பது என அவை தொடர்கின்றன. புற ரீதியான வரவேற்பை விட அக ரீதியான வரவேற்பையே ரமளான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமளானையும் அத்தகைய விரிந்த பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா? என்ற கேள்வி எம்மை நோக்கி எழுகின்றது.
ரமளான் அது கண்ணியமான மாதம். அதில்தான் புனிதமிகு இறை வேதமான அல்-குர்ஆன் அருளப்பட்டது. அதில்தான் ஆயிரம் மாதங்களை விட சங்கைமிக்க லைலதுர் கத்ர் எனப்படும் இரவு அமைந்துள்ளது. அதன் பகற் பொழுது நோன்பிலும் இராப் பொழுது வணக்கத்திலும் செலவிடப்படுகின்றது. அது பரஸ்பரம் அன்பும் பாசமும் பரிமாறப்படும் மாதம். அது பொறுமையையும் தக்வா என்கின்ற இறையச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் உன்னதமான மாதமாகும்.
ரமளான் பல நன்மைகளை வழங்குகின்றது. அவை தனிமனிதர்களையும் குடும்பங்களையும் தழுவியதாக காணப்படுகின்றது. ரமளான் மாதம் ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் தனித்துவமானவை.
தினமும் 12-14 மணித்தியாலங்கள் என ஒரு மாத காலம் சுமார் 368 மணித்தியாலங்கள் நோன்பு நோற்பதில் ஒரு அடியானால் கழிக்கப்படுகின்றது. இதனால்தான் நோன்பு ஒரு மனிதனின் ஆன்மாவை நெறிப்படுத்தி நன்மை அடிபணிவு பொறுமை போன்ற பண்புகளை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக அனைத்து வணக்கங்களும் வெளிப்படையாக நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக தொழுகையில் அடியான் எழுந்து நிற்பதும் உட்காருவதும் குனிவதும் சிரம் தாழ்த்துவதும் போன்ற அசைவுகள் மக்கள் பார்வைக்கு எட்டுகின்றது. தவிர ஹஜ் ஸகாத் போன்ற வணக்கங்களும் ஏதோ ஒரு வகையில் வெளிரங்கமானவை. ஆனால் நோன்பு இதற்கு முற்றிலும் மாற்றமானது. இது இறைவனுக்கும் அவனது அடியானுக்கும் மாத்திரம் தெரியுமான இரகசிய இபாதத்தாகும். இதனால்தான் நோன்பிற்குரிய கூலியை அல்லாஹ்வே உறுதிப்படுத்துகிறான். ‘‘நோன்பைத் தவிர மனிதனது அனைத்து செயற்பாடுகளும் அவனுக்குரியவை. அது எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். (புஹாரி)
ரமளான் அல்-குர்ஆனின் மாதமாகும். அதனை ஓதுவதற்கும் விளங்குவதற்கும் அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்பதற்கும் ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது. ரமளானுடைய மாதத்தில் முழுமையாக ஒரு முறையாவது அல்-குர்ஆனை ஓதி முடித்து விட வேண்டும் என்ற மனோ நிலை பொதுவாக எல்லோரின் உள்ளத்திலும் ஏற்படும். இம்மாத்தில் அல்-குர்ஆனின் கருத்துக்களை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் முயல்கின்ற போது அது எமது ஆன்மாவை ஒரு படி மேலே உயர்த்தி விடுகின்றது. மனோரீதியான அமைதியும் நிம்மதியும் அதனால் கிடைக்கின்றன. ஏனெனில் அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.
ரமளான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.. .. .. (2:185)
ரமளான் முஸ்லிமிடத்தில் நற்பண்புகளையும் சீறிய ஒழுக்கத்தையும் உருவாக்குகின்றது. அவற்றுல் அல்லாஹ்வை திக்ர் செய்தல் குர்ஆன் ஓதுதல் தவிர வேறு விடயங்களில் நாவை ஈடுபடுத்தாது மௌனம் காத்தல் தேவை ஏற்படும் போது நல்லதை மாத்திரம் பேசுதல் பொய் கூறுதல் புறம் பேசுதல் கோள் சொல்லுதல் போன்ற துர்குணங்களிலிருந்து நாவைப் பேணுதல் நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் போன்ற பண்பாடுகள் மிக முக்கியமானவையாகும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி பிரஸ்தாபித்தார்கள். பொய்யுரைத்து அதன் அடிப்படையில் செயற்படுவதை விட்டு விடாதவர் உணவையும் குடிப்பதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. (புகாரி)
ரமளானின் பகற்பொழுதில் உணவு குடிபானம் உடலுறவு போன்றவற்றை தடுத்துக் கொள்வதன் மூலம் மனோ இச்சையை கட்டுப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. தனக்கு முன்னால் அறு சுவை உணவும் இனிய பானமும் ஹலாலான மனைவியும் இருந்த போதிலும் இறை கட்டளைக்குப் பயந்து அவற்றை அனுபவிக்காமல் மனிதன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான். பொதுவாக மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கிறது. 
அது உலக இருப்புக்கும் உயிரினங்களின் பரவலுக்கும் தேவைப்படுகின்றது. எனினும் இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த வகையில் ஒரு நோன்பாளியை பொருத்தமட்டில் ஹலாலான செயற்பாடுகளையே அல்லாஹ்வின் கட்டளைக்காக தவிர்த்துக் கொள்ள முனையும் போது ஹராமானவற்றிலிருந்து தனது உள்ளத்தை தற்காத்துக் கொள்ளவும் மனோ இச்சைகளை நெறிப்படுத்தவும் முடியுமான நிலையை பெற முடிகின்றது. ஒரு வகையில் இப்படியான செயற்பாடுகள் மனிதர்களை மலக்குகளின் நிலைக்கே கொண்டு செல்கிறது. ஏனெனில் அவர்கள் உணவு குடிபானம் உடலுறவு போன்ற உடல் ரீதியான தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். முழுமையாக அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள்.
ரமளானின் இராக்காலம் முஸ்லிமின் ஆன்மீக மேம்பாட்டுக்கு அதிகம் இடம் கொடுக்கும் காலப் பகுதியாகும். அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருந்து இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டு அவனைத் துதித்து புகழ்ந்து அவனிடமே தஞ்சமடைந்து தன் இயலாமையை அவனிடம் ஒப்புவித்து பாவமன்னிப்புக் கேட்டு மீளும் செயற்பாடுகள் அப்பொழுதுகளில் இடம்பெறும். அதே போல் குர்ஆன் திலாவத்துக்களாலும் தராவீஹ் தொழுகைகளாலும் இஃதிகாப்களாலும் நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகின்றது. 
எனவேதான் எமது இராப்பொழுதுகள் அமல்களால் விழிப்படைகின்றன. அதேபோல் ரமளானின் இரவுகளை வீண் கேளிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் கழிக்கும் ஒரு சிலரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தொழுகையிலும் திக்ரிலும் இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமளானின் இரவுகள் தெருக்கள் தோரும் கும்மாளமிட்டு திரியும் சில இளைஞர்களால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெறுகின்றன. உண்மையில் சொல்லப் போனால் அநேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமளானின் இரவுகளை வீணாக கழித்துக் கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை.
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக பெற்றுக்கொண்டது பசியையும் தாகத்தையும் விட்டதை தவிர வேறேதும் இல்லை (புஹாரி)
நோன்பு பிறரின் உணர்வுகளை மதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றது. இம்மாதத்தில் நியாயமான சில காரணங்களுக்காக நோன்பு நோற்பதை விட்டவர்கள் நோன்பாளிகளின் பார்வைக்கு அப்பால் மறைவாக உணவு உட்கொள்ளுதல் அருந்துதல் அசௌகரியம் தொல்லை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் என்பன போன்ற செயற்பாடுகள் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிப்பதன் சிறந்த வெளிப்பாடாகும். இது நோன்பாளியின் உணர்வை மதிப்பதற்காகவே செய்யப்படுகின்றது. எனவேதான் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் சுயநலம் தன்னலம் போன்ற துர் மனப்பாங்குகளிலிருந்து அவனது ஆத்மாவை சுத்திகரித்து பிறர் நலம் பேணுதல் என்ற சிறப்பான பயிற்சியை நோன்பு தருகிறது.
பொதுவாக ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் மத்தியிலேயே சர்வ சாதாரணமான காரணங்களுக்காக சண்டைகளும் முரண்பாடுகளும் வந்துவிடுகின்றன. எனவேதான் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியில் முரண்பாடுகள் பிணக்குகள் எழுவதையொட்டி ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் சமூகத்தில் சண்டையையும் சச்சரவையும் பிணக்குகளையும் அத்துமீறலையும் தடுத்துவிடுகின்ற ஒரு காலமாக ரமளான் காணப்படுகின்றது. ஒருவன் உன்னோடு சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி நான் நோன்பாளி எனக் கூறட்டும். (புகாரி) என்ற நபி (ஸல்) அவர்களின் போதனை முஸ்லிம் சமூகத்திற்குள் பிரச்சினைகளற்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதோடு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த சூழலை உருவாக்குகின்றது.
ரமளான் சமூக ரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாக குறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்பு வாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது. ஏனெனில் கண்ணியம் எடை போடப்படும் அளவுகோல் பொருளாதார வசதியோ சமூக அந்தஸ்தோ கிடையாது மாறாக..
.. .. .. அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் உங்களில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே! (49:13)
ரமளானின் இறுதியில் நோன்பு காலம் முடிவடைந்து பெருநாள் தினத்தில் கோபதாபங்களை மறந்து பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதனாலும் கைலாகு கொடுத்து ஆரத்தழுவிக் கொள்வதனாலும் முஸ்லிம்கள் மத்தியில் சகோதரத்துவ வாஞ்சையும் அன்னியொன்னியமும் ஏற்படுகிறது. இது சமூகம் மனோ நிம்மதியுடன் வாழ்வதற்கு துணை செய்கிறது. மகிழ்ச்சியும் மன நிறைவையும் உள்ளத்தை ஆட்கொண்டு அதே மகிழ்ச்சியும் மன நிறைவும் குடும்ப அங்கத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்ற மனப்பாங்கு ஏற்படுகின்றது. எனவே ஒட்டு மொத்தமாக முழு முஸ்லிம் சமூகமும் உள மகிழ்ச்சியோடு கழிக்கின்ற ஒரு நாளாக பெருநாள் அமைகின்றது.
எனவே ரமளான் புனிதமான மாதம் மனிதனின் ஆன்மாவைச் சீர்படுத்தி கசடுகளையும் துருக்களையும் நீக்கி இறை நேசத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி மனித வாழ்வைச் சீர்படுத்தி சமூக உணர்வுகளையும் ஏற்படுத்தவருகின்ற ஒரு மாதமாகும். எனவே அதனது உண்மையான தத்துவங்களைப் புரிந்து அதனை முழு அளவில் பயன்படுத்தி இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ள முனைவோமாக!
                                                                                                                     மௌலவி  M.I. அன்வர் (ஸலபி)   

இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.  
மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்
ஹைல், நிபாஸ் எனப்படும் நிலைகளில் பெண்கள் தவிர்க்க வேண்டியவைகளில் தொழுகை, நோன்பு, உடலுறவு கொள்ளல், கஃபாவைத் தவாப் செய்தல் என்பன அடங்கும். மற்றப்படி அவர்கள் திக்ரும் ஸலவாத்தும் ஓதலாம். மற்றவர்களுடன் ஒன்றாக உண்ணலாம், உறவாடலாம். இஸ்லாம் இவற்றை ஏனைய மதங்கள் கூறுவது போல் தீட்டாகக் கருதவில்லை. தமிழ் மொழியில் ஹைல், நிபாஸ் என்பன மாதத் தீட்டு, பிரசவத் தீட்டு என்று குறிப்பிடப்படுவதனாலேயே நாமும் குறிப்பிட்டு வருகின்றோம்.
இந்நிலையில் இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கலாகாது. ஆனால், இதனால் விடுபட்ட நோன்புகளை பின்னர் கழாச் சொய்ய வேண்டும்.
‘நபி(ஸல்) அவர்களது காலத்தில் நாம் மாதவிடாய்க்கு உட்பட்;டால் நோன்பைக் கழாச் செய்யுமாறு எமக்கு ஏவினார்கள். தொழுகையைக் கழாச் செய்யுமாறு ஏவமாட்டார்கள்;’ என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரி, முஸ்லிம்)
நோன்புடன் ஒரு பெண் இருக்கையில் இந்நிலையை அடைந்தால் நோன்பு முறிந்து விடும். மஃரிபுடைய வேளைக்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் இந்நிலை ஏற்பட்டாலும் அவர் அந்த நோன்பை கழாச் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இருக்கும் சில பெண்கள் வீட்டில் மற்றவர்கள் நோன்புடன் இருக்கும் போது தாம் உண்பது கூடாது என்று கருதி தம்மைக் கஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். பிறர் அறிய உண்பதில் சங்கடங்கள் இருந்தால் தனிமையில் அவர்கள் வழமை போல் உண்பதிலோ அல்லது பருகுவதிலோ எந்தக் குற்றமுமில்லை.
சில படித்த பெண்கள் நோன்பு காலங்களில் அதிக அமல்கள் செய்யும் ஆர்வத்திலும், விடுபட்ட நோன்புகளைப் பின்னர் கழாச் செய்வதிலுமுள்ள அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டும் மாதத்தீட்டைத் தடை செய்யும் மாத்திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து நேரடியாக எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் இயற்கைக்கு மாற்றமான இவ்வழிமுறையைக் கைவிடுதலே சிறந்ததாகும். ஏனெனில், இதனல் நோன்பைக் கழாச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை. தொழுகை அவர்கள் மீது கடமையில்லை.
திக்ர், ஸலவாத்து, அல்குர்ஆனை ஓதுதல் போன்ற வழமையான இபாதத்துக்களில் அவர்கள் ஈடுபடலாம். நோன்பை மட்டும் தவிர்க்க வேண்டியது தான் பாக்கி. அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படப் போவதுமில்லை. குற்றம் பிடிக்கப் போவதுமில்லை. எனவே, இவ்வழிமுறையை நாம் கைவிட்டு இயற்கை வழியிலேயே செயற்படுவோமாக.
விடுபட்ட நோன்புகளை அடுத்த றமழான் வருவதற்கு முன்னர் கழாச் செய்திட வேண்டும். அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும் என்ற அவசியமுமில்லை. தனித்தனியாக வசதிப்படி நோற்றுக் கொள்ளலாம். அப்படி நோற்பதாயின் வெள்ளிக் கிழமை மட்டும் தனியாக நோற்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஹைல் நிபாஸுடன் இருக்கும் ஒரு பெண் ஸஹருடைய நேரத்தை அடையும் முன் சுத்தமாகி விட்டால் அவர் நோன்பு நோற்பது கடமையாகும். உதாரணமாக சுப்ஹுடைய அதானுக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஹைல் நின்று விட்டால் ஸஹர் செய்து நோன்பு நோற்க வேண்டும். தொழுகைக்காக் குளித்துக் கொள்ள வேண்டும்.
ஸஹருடைய நேரம் சுபஹுடைய அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே முடிவடைந்து விடுவதாக நம்பப்படுகிறது. அது தவறானதாகும். இதனைப் பின்வரும் நபிமொழிகள் உணர்த்துகின்றன.
நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் றமழான் மாதத்தில் ஸஹருடைய ஒரு அதானும் சுபஹுடைய ஒரு அதானும் கூறப்படும். இது குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள் உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள் எனக் கூறினார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), ஆதாரம்: இப்னு குஸைலமா-1932)
மேற்படி ஹதீஸ் சுப்ஹுடைய அதான்வரை ஸஹருடைய நேரம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது. எனவே, ஸஹருடைய நேரத்திற்கு முன் சுத்தமாகும் பெண் மீது நோன்பு கடமையாகும். ஆனால் உடனே குளித்து விட்டுத்தான் நோன்பை நோற்க வேண்டும் என்பதில்லை. ‘நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பு நோற்றார்கள்’ என நபிகளாரின் துணைவியர்களான உம்மு ஸலமா (ரழி), ஆயிஷா(ரழி) இருவரும் கூறுகின்றார். (தாரமி-1725, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா-1704, முஅத்தா-644,645) மேற்படி நபிமொழிக்கு அமைய ஸஹருடைய நேரம் முடிவடைவதற்குள் மாதத்தீட்டிலிருந்து விடுபடும் பெண்கள் அதே நிலையில் நோன்பை நோற்கலாம். தொழுகைக்காக குளித்துக் கொள்ள வேண்டும்.
பயணத்தில் பெண்கள்
பயணம் செய்யும் பெண்கள் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் அதனைக் கழாச் செய்து கொள்ளலாம். இது பெண்களுக்கு மட்டுமுரியதல்ல. இதனை அறியாத பல பெண்கள் தம்மைத் தாமே வருத்திக் கொள்கின்றனர்.
‘எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அவர் (அந்தச் சமயத்தில் நோன்பு நோற்காமல்) வேறு நாட்களில் (விடுபட்டுப் போன) அதைக் கணக்கிட்டு (நோற்றுக் கொள்வ(து அவர் மீது கடமையானதாகும்’… (2:165)
இவ்வகையில் பயணத்தில் இருக்கும் அல்லது நோயுடன் இருக்கும் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பின்னர் கழாச் செய்து கொள்வதற்கு அனுமதியுள்ளது. வீணே தன்னைத் தானே சிரமப்படுத்திக் கொள்ள இஸ்லாம் கூறவில்லை.
கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களும், மூதாட்டிகளும்
கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தமக்கோ, தமது குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சும் நிலையிருந்தால் நோன்பை விடலாம். அவ்வாறே வயோதிப ஆண், பெண் இரு சாராரும்கூட நோன்பை விடலாம். தாம் நோற்காக ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இவர்கள் பித்யா வழங்கப்பட்ட இந்த நோன்பை மீண்டும் கழாச் செய்ய வேண்டியதில்லை.
இந்த சலுகையை அறியாத பலர் தம்மைத் தாமே சிரமப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் பலர் சிரமத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதனால் நோன்பை விட்டு விடுகின்றனர். ஆனால் சட்டம் தெரியாததால் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவு என்ற பரிகாரத்தை நிறைவு செய்வதுமில்லை.
வயோதிபர்களும் பெண்களும் பித்யா கொடுக்கும் இவ் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினால் இதன் மூலம் நோன்பு காலத்தில் அனேக ஏழைகளுக்கு உணவு போய்ச்சேர வழிபிறக்கும்.
சமையலில் சுவை பார்த்தல்
பெண்கள் நோன்பு கால சமையலில் உப்பு, காரம் போன்றவையைக் கூட்டிக் குறைத்து அசடு வழிவதுண்டு. உணவை சுவைபார்க்க முடியாது என்பதால் தான் இந்நிலையென தன்னிலை விளக்கம் கூறுவர். இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன்(ரழி), ஆயிஷா(ரழி) போன்ற நபித் தோழர்கள் இதனைச் சரி கண்டுள்ளனர். எனவே, பெண்கள் ஆணம், கஞ்சி போன்றவற்றை நாவின் நுணியில் வைத்து சுவைபார்க்கலாம் அதனைப் பின்னர் உமிழ்ந்துவிட வேண்டும்.
இல்லறத்தில் ஈடுபடுதல்
நோன்புடன் இருக்கும் போது தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்றால் முத்தமிடுவது குற்றமில்லை. இரவு நேரத்தில் இல்லறத்தில் ஈடுபடுவதிலும் எந்தத் தவறும் இல்லை. இதனை ‘நபி(ஸல்) அவர்கள் நோன்புடன் இருக்கும் போது (தமது மனைவியை) முத்தமிடுவார்கள்’ (புஹரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, தாரமி) என்ற நபிமொழியும் ‘நோன்புடைய இரவில் உங்கள் மனைவியருடன் (வீடு) கூடுவது உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது’ (2:187) என்ற வசனமும் உணர்த்துகின்றது. 

இல்லறத்தில் ஈடுபட்டாலும் இது தவறாகுமோ என்ற அச்சம் அல்லது இதனால் நோன்பின் பயன் குறைந்து விடுமோ என்ற கவலையும் பெண்களிடம் உள்ளது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதனால் குளிப்புக் கடமையான நிலையில் விழிப்போர் அதே நிலையில் நோன்பைக் கூட நோற்கலாம். தொழுகைக்காகத்தான் அவர்கள் குளித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நபிமொழிகளின் மூலம் உணரலாம்.
மார்க்கச் சட்டங்களைச் சரிவர அறிந்து கொள்ளாததால் மக்கள் மார்க்கத்தைச் சிரமமானதாக எடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாமிய சட்டங்களை சரிவர அறிந்து இலகு மார்க்கம் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வோமாக.
                                                                                                            அஷ்சேஹ்  இஸ்மாயில் (ஸலபி) 

பிறையினுடைய விவகாரம் உண்மையில் குர்ஆன் சுன்னாவில் தெளிவான ஓர் விடையமே. இருந்தபோதிலும் இம் மஸ்அலாவில் சர்வதேசப் பிறை என்றும் நாட்டுக்கு நாடு உள்ளூர் பிறை என்றும் பிரதானமான இரண்டு கருத்துக்கள் இருந்துவருகின்றது.அபூபக்கர்(வ), உமர்(ரழி) ஆகிய இருவருமே காபிர்கள். இஸ்லாத்தின் எதிரிகள் என்பது ஷீஆக்களின் நம்பிக்கையாகும். ஒரு முஸ்லிம் மரணித்தால் அவரைக் காபிர்களுடன் அடக்கம் செய்வதை நாம்மில் யாருமே விரும்ப மாட்டோம். இப்படி இருக்க, அகிலத்தின் அருட்கொடை நபி(ஸல்) அவர்களை இரண்டு காபிர்களுக்கு மத்தியில் (நஊதுபில்லாஹ்) அடக்கம் செய்யும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பானா?ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்)மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிகஉரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம்.அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“பொறுமையின் மூன்று வகைகளையும் நோன்பு உள்ளடக்கியிருக்கிறது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
1- அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காக பொறுமை காத்தல்: (இது, நோன்பில் இருக்கிறது!)
2 – (பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல். (இதுவும் நோன்பில் இருக்கிறது!)
3 – அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி ‘கழா கத்ர்’ பிரகாரம் நடக்கும் சோதனைகளுக்காகப் பொறுமையாக இருத்தல். (நோன்பில் இதுவும் இருக்கின்றது!)
அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற சிரமங்களுக்காகப் பொறுமை காத்தல்: நோன்பு என்ற வழிபாட்டின் மீது நோன்பாளி தன்னைச் சிரமப்படுத்தி, கஷ்டப்படுத்திக்கொள்கிறார். சில வேளைகளில் தனக்கு அது வெறுப்பாக இருந்தாலும் இப்படி அவர் செய்கிறார். அப்படி அவர் வெறுப்பது அதிலுள்ள சிரமத்தைத்தான்!.
(பாவங்கள் மூலம்) அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டு விடுகின்ற போது ஏற்படும் அசெளகரியங்களுக்காகப் பொறுமையாக இருத்தல்:
பொறுமையின் இரண்டாவது வகையான இதுவும் நோன்பாளியின் விடயத்தில் நடக்கிறது! எவ்வாறெனில், அல்லாஹ்வுக்கு மாறு செய்து நடப்பதை விட்டும் நோன்பாளி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்; எனவேதான் அவர் வீண் விடயங்கள், மனைவியுடனான (பகல் நேர) உடலுறவு, அசிங்கமான பேச்சு, பொய் போன்ற அல்லாஹ் தடுத்திருக்கும் ஹராமான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்கிறார்.
அல்லாஹ் நிர்ணயித்துள்ளபடி ‘கழா கத்ர்’ பிரகாரம் நடக்கும் சோதனைகளுக்காகப் பொறுமையாக இருத்தல்:
இது எப்படியெனில், நோன்பு நாட்களில் நோன்பாளிக்கு ஏற்படும் சோதனைகளுக்காக அவர் பொறுமை காப்பதாகும்! குறிப்பாக உஷ்ணமான நாட்களிலும், நேரங்கள் நீண்டுள்ள நாட்களிலும் சோம்பல், சோர்வு மற்றும் களைப்புகளால் அவர் வேதனையடைந்து தொந்தரவுப்படுவார். என்றாலும், அவர் பொறுமையோடு இருப்பார். காரணம், இது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்ளும் முகமாக நடந்ததாகும்!.
இவ்வாறு, மூன்று வகையான பொறுமையும் நோன்பாளியிடம் உள்ளடங்கியிருப்பதால்தான் அவருக்கான கூலியும் கணக்கின்றி வரையரையில்லாமல் இருக்கின்றது. அல்லாஹ் கூறுகிறான்: ‘பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி கணக்கின்றி வழங்கப்படும்!’ (அல்குர்ஆன், 39:10)
{ நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 05/267 }

           قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
             [قال أهل العلم: ولأن الصوم إشتمل على أنواع الصبر الثلاثة:-
الأول: ففيه صبر على طاعة الله.
الثاني: وصبر عن معصية الله.
الثالث: وصبر على أقدار الله.
  • أما الصبر على طاعة الله: فلأن الإنسان يحمل نفسه على الصيام مع كراهته له أحيانا، يكرهه لمشقته…
  • الصبر عن معصية الله: وهذا حاصل للصائم؛ فإنه يصبّر نفسه عن معصية الله عزّ وجلّ، فيتجنّب الّلغو والرّفث والزّور وغير ذلك من محارم الله.
  • الصبر على أقدار الله: وذلك أن الإنسان يصيبه في أيام الصوم، ولاسيما في الأيام الحارّة والطّويلة من الكسل والملل والعطش ما يتألّم ويتأذّى به، ولكنّه صابر؛ لأن ذلك في مرضاة الله.
        فلما اشتمل على أنواع الصبر الثلاثة كان أجره بغير حساب؛ قال الله تعالى: « إنّما يوفّى الصابرون أجرهم بغير حساب » (سورة الزّمر : ١٠)
{ شرح رياض الصالحين ، ٥/٢٦٧ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத் (காஸிமி,மதனி)

ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளை பாடசாலை செல்லும் வயது வரும் முன்னே எந்தப் பாடசாலையில் சிறப்பான கல்வித்தகைமையோடு நல்லொழுக்கம், பண்பாடு கற்பிக்கப்படுகின்றது என்றே பார்க்கின்றனர். ஏனென்றால் இன்று அதிகமான பாடசாலைகளில் ஒழுக்கம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களைத் தேடுவதென்பது மிகவும் கஷ்டமாகவே உள்ளது.

எல்லாப் பெற்றோர்களின் மணதிலுமே இருக்கக்கூடிய பயம் என்ன தெரியுமா? என் பிள்ளையை ஒழுக்கமாக கௌரவமாக ஸாலிஹான பிள்ளைகளாக வளர்க்க முடியுமா? என்பது தான். 
இதே பயம் ஏன் அறிவை ஊட்டி நிறையப் புள்ளிகள் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெறுமை சேர்த்து பல பட்டங்கள் பெற்று நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காக எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு வழி நடாத்தும் ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை?
இந்த நாகரீக உலகில் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஒழுக்கத்தை, பண்பாட்டை, மரியாதையை பல சிரமத்தோடு விதைக்கின்றனர். ஆனால் எங்கு ஒழுக்கம் பண்பாடு கற்பிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறதோ அங்கே ஒழுக்க விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
ஏனென்றால் இன்று பாடசாலைக் கூட்டங்களுக்கோ, இல்லவிளையாட்டுப் போட்டிகளுக்கோ, பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கவோ சென்று ஆசிரியைகளின் ஆடையின் நிலையைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவும் பயமாகவுமே உள்ளது. கண்களைக் கவரக்கூடிய நிறங்களில் டெனிம் ஹபாயா என்றும் படப்லெய் ஹபாயா என்றும் ஒரு சிறிய துணியை தலைக்கு மாத்திரம் சுற்றி உடலின் முன் பின் அங்கங்கள், மார்பின் அளவு என்று அனைத்தையும் படம் பிடித்துக் காட்டக்கூடிய அமைப்பிலேயே அவர்கள் ஆடை முறை இருக்கின்றது.
அண்ணிய ஆண் ஆசிரியர்கள் , வளர்ந்த ஆண் பிள்ளைகள் என்று தங்கள் அழகையும் மறைவிடங்களையும் யாரிடம் ஒரு பெண் மறைக்க வேண்டுமோ அவ்வாரான அஜ்னபியான, ஒவ்வொரு அங்கத்தினதும் வித்தியாசத்தை அறியக்கூடிய வயதிலுள்ளவர்கள் தான் அங்கே இருக்கின்றனர். ஆனால் ஆசிரியைகள் தங்களை எந்தளவு அழகு படுத்த முடியுமோ அந்தளவு அழகை வெளிப்படுத்தி யாரும் தன்னை ரசிக்கலாம் என்று தான் பாடசாலைக்கு வருகை தருகிறார்கள். ஒழுக்கத்தோடு இருக்கும் ஆசிரியர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.
சில ஆசிரியைகளின் இருக்கமான, கவர்ச்சியான, ஒழுக்கம் இல்லாத ஆடையையும், ஒழுக்கமற்ற நடைகளையும், கண்ணுக்கும், முகத்துக்கும் போடும் மேக்கப்களையும் உங்கள் மாணவ மாணவிகளான சமூகத்தின் கண்களான எங்கள் பிள்ளைகள் பேசிக்கொள்ளும் வார்த்தைகளைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது.
இன்றைய காலத்தில் எந்த ஒரு மாணவருக்கும் தன் ஆசிரியரைப் பற்றி நல்லெண்ணமோ , மரியாதையோ இல்லை. இதற்குக் காரணம் ஒவ்வொரு ஆசிரியையினதும் நடத்தையே!! ஒழுக்கம் இல்லாத கல்வியும் ,அந்தஸ்த்தும் பதவியும், தகைமையும் ஒரு மனிதனை எந்த வகையிலும் முழுமைப் படுத்தமாட்டாது. எனவே பீ.ஏ, எம்.ஏ என எந்தப் பல்கலைக்கலகங்களில் கற்ற மௌலவி ஆசிரியை என்ற பட்டத்தோடு உலா வந்தாலும் அது வெறுமையான காகிதத்துண்டுதான்.
நாளை உங்களிடம் கற்ற மாணவிகள் ஒழுக்கமற்ற ஆடைகளை அணியும் போது உங்களால் தைரியமாக தட்டிக்கேட்க முடியுமா.? மார்க்கத்துக்கு முரணாக நடக்கும் போது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா.? நிச்சயமாக முடியவே முடியாது. ஏனென்றால் தன்னிடம் குறையிருக்கும் போது தன் பிள்ளைகளை எச்சரிக்கை செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு ஆசிரியையும் தன் ஆடை விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தன்னை முழுமையாக மறைக்கக்கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் பாடசாலை விடுமுறையின் போதும் பிள்ளைகள் எப்படி சீறுடையை அகலமாகவும், நீட்டமாகவும் உடல் முழுதுமாக எல்லா அங்கங்களும் மறைந்து இருக்க வேண்டும் என்று சீறுடைக்கு அளவு எடுத்துக் கொடுக்கும் பாடசாலை ஓழுக்காற்றுக் குழுத் தலைவரான அதிபர் உற்பட ஆசிரியர்கள் ஏன் ஆசிரியைகளின் ஆடை முறையைக் கவனிக்கத் தறுகின்றனர்.?
காதில் நீண்ட தோடு போடுவதைக் கண்டிக்கும் ஆசிரியைக்கு ஏன் நீண்ட ஷோல் அல்லது பர்தா அணிய முடியாது.?
இரண்டு பிண்ணல் இல்லாதவர்களைக் கண்டிக்கும் ஆசிரியைகளுக்கு ஏன் ஹபாயாக்களை அகலமாக உடுக்க முடியாது??
சீறுடையின் அளவை சோதிக்கும் ஆசிரியைகளுக்கு ஏன் மேக்கப் இல்லாமல் வரமுடியாது.? ஒழுக்கமான பிள்ளைகளை சமூகத்துக்குக் வளர்த்துக் கொடுப்பதில் பெற்றோறுக்குக் கடமை இருப்பது போலவே ஆசிரியர்களுக்கும் அதிகமான பங்கு இருக்கின்றது. என்பததை ஒவ்வொரு ஆசிரியையும் மறந்துவிடக் கூடாது.
அதே போன்று கற்பித்தல் முறையில் ஏதும் குறையிருந்தால் வகுப்பாசிரியரை மாற்றுகின்ற பெற்றோர்கள் ஒழுக்கமற்ற ஆடைகளை அணிந்துகொண்டு வருகின்ற பண்பாடற்ற ஆசிரியைகளையும் மாற்றுவதற்கு ஏன் முன்வறுவதில்லை.? 
இவர்களுடைய இந்த நிலையை மாற்றியமைக்க பாடசாலையின் அதிபர் உட்பட பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

                                                                         உம்மு முஸ்அப் உஸைமீனிய்யா

“லா தஹ்ஸன் இன்னல்லாஃ மஅனா” கவலைப்படாதே, அல்லாஹ் எம்முடன் உள்ளான். இந்த வார்த்தை யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பது தெரியுமா தம்பி தங்கைகளே! வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மக்காவில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை ஆரம்பித்த போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை முஸ்லிம்கள்
சந்தித்தனர். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றில் நீந்தி எரிமலைகளைக் கடந்து செல்வது போலிருந்தது. இறை நிராகரிப்பாளர்களின் வதைகள் வரம்பு மீறிப்
போன போது நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் சிலரை அபீசீனியாவுக்கு அனுப்பினார்கள். அதன்பின் சிலரை மதீனாவுக்கு அனுப்பினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் என்று கூறப்படும். நபி(ஸல்) அவர்கள் தோழர்களை அனுப்பிவிட்டு மக்காவிலேயே இருந்தார்கள்.
மக்கத்து காபிர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். எல்லா கோத்திரத்தில் இருந்தும் ஒவ்வொரு இளைஞனை எடுத்து அவர்கள்
மூலமாக நபியைக் கொல்ல வேண்டும். அப்படிச் செய்தால் தான் முஹம்மது நபியின் குடும்பத்தால் பழிவாங்க முடியாது போகும் எனத் திட்டம் தீட்டினர்.
இதன்படி மக்கத்து காபிர்கள் முஹம்மது நபியின் வீட்டை முற்றுகையிட்டனர். 
அவர் தமது படுக்கையில் தமது ஒன்றுவிட்ட தம்பி அலி(ரலி) அவர்களை உறங்க வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். நபி(ஸல்) அவர்கள் தமது உயிர்த் தோழர் அபுபக்கர்(ரலி) வீட்டுக்கு வந்தார்கள். இரவு நேரத்தில் தன் தோழரைக் கண்ட அபுபக்கர், நிலைமையை உணர்ந்து கொண்டார். நாடு துறக்க நபிக்கு கட்டளை வந்துவிட்டது என்பது அவருக்குப் புரிந்து விட்டது. ஏற்கனவே தயார் நிலையில் இருந்த இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
மக்காவாசிகள் சிறந்த குதிரை வீரர்கள். எனவே அவர்கள் விரட்டிப் பிடிப்பதில் வீரர்கள். அதனால் முஹம்மது நபி தொடர்ந்து பயணம் செய்யாமல்
எதிரிகளைத் தேடி அலையவிட்டு, அவர்கள் ஓய்ந்த பின்னர் பயணத்தைத் தொடர முடிவு செய்தார்கள். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ‘தவ்ர்’ எனும்
குகையில் இருவரும் ஒளிந்து கொண்டனர். தமக்கு உணவு தருவதற்கும் மக்காவின் தகவல்களைத் தருவதற்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். 
அந்தக் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். முஹம்மதையும் அபுபக்கரையும் உயிருடனோ, மரணித்த நிலையிலோ கொண்டு சென்றால் ஒட்டகங்கள் பரிசாகக் கிடைக்கும் எனும் அறிவிப்பால் மக்கா இறைநிராகரிப்பாளர்கள் அவரைத் தேடி அலைந்தனர். ஒரு கூட்டம் ‘தவ்ர்’ குகைப் பக்கம் வந்து விட்டனர். குகைக்குள் இருப்பவர்களுக்கு மேலே இருப்பவர்களின் கால்கள் தெரிகின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் தான் எதிரிகள் கண்டு விடுவார்களோ… இறைத்தூதரைக் கொன்று விடுவார்களோ… என்ற கவலையும் கலக்கமும் அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது அவர், “இறைத்தூதரே! அவர்களில் ஒருவர் தனது பாதங்களைப் பார்த்தால் கூட எம்மைக் கண்டு விடுவார்களே! நாம் இருவர் தானே உள்ளோம். அவர்கள் பலர் உள்ளனரே! என்ன செய்வது?” என்று தனது கவலையை வெளியிட்டார். அப்போது அபுபக்கரைப் பார்த்த இறைத்தூதர், “நாம்
இருவர் இருக்கின்றோம் என்று கவலையா? நாம் இருவர் இல்லை; மூவர் உள்ளோம். அல்லாஹ்வும் எம்முடன் இருக்கின்றான்.
“லா தஹ்ஸன் ( கவலைலப்படாதே! ) இன்னல்லாஹ மஅனா (நிச்சயமாக அல்லாஹ் எம்முடன் உள்ளான்) என ஆறுதல் கூறி உறுதிப்படுத்தினார். குகையில் இருக்கும் நிலையிலும் எதிரிகள் கொலை வெறியுடன் சூழ்ந்திருந்த சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு அல்லாஹ் தனது அமைதியை இறக்கினான். காபிர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. அந்த இடத்தில் தேடாமல் சென்று விட்டனர். இதனால் உத்தம நபியும் அவரது உயிர்த்தோழர் அபுபக்கர்(ரலி)யும் பாதுகாக்கப்பட்டனர்.
அல்லாஹ் பாதுகாக்க நினைத்தால் எந்தச் சூழ்நிலையிலும் பாதுகாப்பான் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்ல சான்றாக அமைந்தது. இது குறித்த வசனத்தை சூறா ‘அத்தவ்பா’ 9ஆம் அத்தியாயம் 40ஆம் வசனத்தில் காணலாம்.
                                                                                                அஷ்சேஹ்:- S.H.M. இஸ்மாயில் ஸலபி

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget