January 2018

சூரிய, சந்திர கிரகணங்களின் போது கூட்டாகத் தொழப்படும் தொழுகைக்கே கிரகணத் தொழுகை என்று கூறப்படும்.
சூரிய, சந்திர கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியில் ஒரு காரணம் கூறப்படும். சூரிய, சந்திர கிரகணங்கள் மூலம் அல்லாஹுதஆலா மனித சமூகத்தை எச்சரிப்பதுடன், அல்லாஹ்வின் அருட் கொடையை எண்ணிப் பார்க்கவும் வைக்கின்றான். ஜாஹிலிய்யாக் காலத்தில் யாராவது ஒரு முக்கிய நபர் மரணித்துவிட்டால் அதற்காக சூரியனும், சந்திரனும் துக்கம் கொண்டாடுவதால் ஏற்படுவதே சூரிய, சந்திர கிரகணங்கள் என்ற அறிவீனமான நம்பிக்கை இருந்தது.

நபி(ஸல்) அவர்களுக்கு மாரியதுல் கிப்திய்யா என்ற அடிமைப்பெண் மூலம் கிடைத்த ஒரு குழந்தை இருந்தது. இப்றாஹீம் எனும் பெயர் கொண்ட இந்தக் குழந்தை இறந்த தினத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்றாஹீமின் மரணத்திற்காக சூரியன் துக்கம் கொண்டாடு வதாக மக்கள் பேசிக் கொண்டனர். தன் மகன் மரணித்த துக்கத்தில் இருந்த நபி(ஸல்) அதையும் பொருட்படுத்தாமல் இந்த அறியாமைச் சிந்தனையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள்.
‘முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத் திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். ” (புஹாரி: 1043)
கட்டாய சுன்னத்தாகும்:
சூரிய, சந்திர கிரகணங்களின் போது தொழுவது கட்டாய சுன்னாவாகும். இமாம் இப்னுல் கையூம்(ரஹ்), ஷெய்க் பின்பாஸ்(ரஹ்) போன்ற அறிஞர்கள் கிரகணத் தொழுகையைத் தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பதாலும் அவர்கள் அதனை செய்திருப்பதாலும் கட்டாயமாகத் தொழுதாக வேண்டும் என்று கூறுகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
தொழுகையின் நேரம்:
சூரிய, சந்திர கிரகணம் ஆரம்பித்து முடிவதற்கிடைப்பட்ட நேரம் தொழுகைக்குரிய நேரமாகும்.
‘நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள், அது நீங்கும் வரை தொழுங்கள்” என்று வரும் ஹதீஸ்கள் (புஹாரி 1060, முஸ்லிம்: 904) இதற்கான ஆதாரமாகும். கிரகணம் முற்றாக நீங்கிவிட்டால் தொழுகையின் நேரம் முடிந்து விடும். கொஞ்சம் நீங்கி கொஞ்சம் இருந்தாலும் அது தொழுகைக்குரிய நேரமாகும்.
கிரகணத்தைக் கண்டால்:
01. அதிகமாக திக்ர் செய்தல்:
கிரகணம் ஏற்படும் போது அதிகமாக திக்ர் செய்வதுடன் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும். அத்துடன் தர்மம் செய்வதும் ஏற்றமானதாகும். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
‘கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை யாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அவனைப் பெருமைப் படுத்துங்கள், தொழுங்கள், தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும் போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள்.” (புஹாரி1044)
02. அடிமைகளை விடுதலை செய்தல்:
‘அஸ்மா(ரழி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின் போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.” (புஹாரி: 1054)
இதன் மூலம் சூரிய, சந்திர கிரகணங்களின் போது அல்லாஹ்வுக்கு விருப்பமான காரியங்களை அதிகம் செய்தல் சிறப்பானது என்பதை அறியலாம்.
03. ‘அஸ்ஸலாத்து ஜாமிஆ” என அழைப்பு விடுப்பது:
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்: ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகைக்குத் தயாராகுங்கள்!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.” (புஹாரி: 1045)
இந்த ஹதீஸ் மூலம் கிரகணத் தொழுகை ஜமாஅத்தாகத் தொழப்படும் என்பதை அறியலாம்.
04. பள்ளியில் தொழப்படும்:
நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையை மஸ்ஜிதில் தொழுது வந்ததாக ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று (தொழுகையில்) நின்று ‘தக்பீர்” கூறினார்கள்.” (முஸ்லிம்: 1645)
பொதுவாக மழை வேண்டித் தொழுதல், பெருநாள் தொழுகை போன்றவற்றை நபி (ஸல்) அவர்கள் திடலில் தொழுதிருந்தாலும் கிரகணத் தொழுகையை மஸ்ஜிதில் தொழுதுள்ளார்கள் என இந்த ஹதீஸ் கூறுவதால் அதை மஸ்ஜிதில் தொழுவதே சுன்னாவாகும்.
05. பெண்கள் சமுகமளித்தல்:
கிரகணத் தொழுகையில் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆயிஷா(ரலி), அஸ்மா(ரலி) ஆகியோர் நபி(ஸல்) அவர்களுடன் கிரகணத் தொழுகையில் பங்கு கொண்டமை பற்றி அநேக அறிவிப்புக்கள் பேசுகின்றன.
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்: ‘ஒரு சூரிய கிரகணத்தின் போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து ‘ஸுப்ஹா னல்லாஹ்” என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். ‘ஆம்” என்பது போல் சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன்…..” (புஹாரி: 1053)
06. தொழும் முறை:
கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர். ஆனால், தொழும் முறையில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.
ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு நிலைகள், இரண்டு கிராஅத்துக்கள் இரண்டு ருக்கூஃகள், இரண்டு சுஜூதுகள்… என்ற கருத்தில் இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) ஆகியோர் உள்ளனர்.
பின்வரும் ஹதீஸ்களை இவர்கள் தமது கருத்துக்குரிய ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
ஆயிஷா(ரழி) அறிவித்தார்: ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பின்னர், ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா” என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள்.

பிறகு, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹதிமா ரப்பனா வ லகல் ஹம்து” என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றைய ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர; ‘இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து சென்று தொழுங்கள்” என்று கூறினார்கள்.
நான் உர்வாவிடம் உங்கள் சகோதரர் மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்! அவர் நபி வழிக்கு மாற்றம் செய்துவிட்டார்” என்று விடையளித்தார் என கஸீர் இப்னு அப்பாஸ் குறிப்பிட்டார்.”
(புஹாரி: 1046)
‘ஆயிஷா(ரழி) அறிவித்தார்: சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். நின்று தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி, ‘ஸமிஅல்லாஹு லிமன்ஹமிதா” என்றார்கள். எழுந்து முன்போன்றே நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ஓதினார்கள். இது முன்பு ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முந்தைய ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். 

அடுத்த ரக்அத்களிலும் இது போன்றே செய்தார்கள். சூரிய கிரகணம் விலகியபோது ஸலாம் கொடுத்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்” என்று கூறினார்கள்.”(புஹாரி: 1047), (முஸ்லிம்: 901)
ஏனைய தொழுகை போன்று இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.
இரண்டு ருகூஃ, இரண்டு நிலை (கியாம்) என்றில்லாமல் சாதாரணமாக ஏனைய தொழுகை போன்று இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என்ற கருத்தை இமாம் அபூஹனீபா மற்றும் இப்னு ஹஸ்ம்(ரஹ்) போன்றோர் கொண்டுள்ளார்கள். பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கூறுகின்றார்கள்.  
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்: ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையை இழுத்தவர்களாகப் பள்ளிக்குச் சென்றார்கள். மக்களும் அவர்களை நோக்கி விரைந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். கிரகணம் விலகியதும் ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத் திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்ப தில்லை. எனவே கிரகணம் பிடித்தால் அது விலகும் வரை தொழுங்கள்;, பிரார்த்தியுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களின் மகன் மரணித்தபோது மக்கள் பேசியதற்கு மறுப்பாகவே இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ” (புஹாரி: 1063)
இந்த ஹதீஸில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள் என்று பொதுவாக வந்துள்ளதையே இத்தரப்பினர் ஆதார மாகக் கொள்கின்றனர். இருப்பினும் மற்றும் பல அறிவிப்புக்களில் அந்த இரண்டு ரக்அத்துக்களிலும் நான்கு நிலை, நான்கு ருகூஃ, நான்கு சுஜூத் இருந்ததாக ஹதீஸ்கள் வந்துள்ளதால் முதல் சாராரின் கருத்தே மிகச் சரியானதாகும். இந்த அடிப்படையில் கிரகணத் தொழுகையின் அமைப்பை சுருக்கமாக இப்படிக் கூறலாம்.
1. முதல் தக்பீர் கூறி ஆரம்ப துஆவை ஓதுதல், அஊது பிஸ்மி ஓதுதல், பின்னர் சூறதுல் பாத்திஹாவை ஓதி, நீண்ட ஒரு சூறாவை ஓதுதல்.
2. நீண்ட நேரம் ருகூஃ செய்தல்.
3. ருகூஃவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல்.
4. சுஜூது செய்யாமல் சூறதுல் பாதிஹா வையும் முன்னர் ஓதியதை விட சற்று குறைவாக வேறு ஒரு சூறாவையோ குர்ஆனின் சில பகுதியையோ ஓதுதல்.
5. மீண்டும் ருகூஃ செய்தல். அந்த ருகூஃவில் நீண்ட நேரம் இருத்தல். ஆனால், முன்னைய ருகூஃவை விட சற்று நேரம் குறைந்ததாக இரண்டாம் ருகூஃவை அமைத்துக் கொள்ளல்.
6. மீண்டும் ருகூஃவிலிருந்து எழுதல்.
7. பின்னர் நீண்ட நேரம் சுஜூது செய்தல். நடு இருப்புக்கு வந்து மீண்டும் சுஜூது செய்தல்.
8. பின்னர் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்து இதே போன்று அந்த ரக்அத்திலும் செய்தல்.
தொழுகையின் பின்னர் குத்பா:
கிரகணத் தொழுகையின் பின்னர் குத்பா உரை இடம்பெற வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்த அனைத்து ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் பின்னர் குத்பா உரை நிகழ்த்தி யுள்ளார்கள். எனவே, கிரகணத் தொழுகையில் குத்பாவும் ஒரு அங்கம் என்பது இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை நடாத்திய தினத்தில் அவரது மகன் மரணித்தார். மக்கள் அவரது மகன் மரணித்த காரணத்தினால் தான் கிரகணம் ஏற்பட்டதாகக் கூறினர். அது தவறானது என்று உணர்த்தவே நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அஃதல்லாமல் கிரகணத் தொழுகையின் ஒரு அங்கமாக குத்பா அமையாது என்பது அபூ ஹனீபா(ரஹ்), அஹ்மத் மாலிக்(ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.
இருப்பினும் குறித்த குத்பா உரையில் நபி(ஸல்) அவர்கள் தனிநபர் பிறப்பு, இறப்புக்களால் கிரகணம் ஏற்படுவதில்லை என்பதை மட்டும் கூறவில்லை. துஆ, திக்ர் செய்யுமாறும் கூறியுள்ளார்கள். கப்ருடைய வேதனை பற்றியும் கூறியுள்ளார்கள். சுவர்க்கம் மற்றும் நரகம், விபச்சாரம் பற்றியெல்லாம் பேசியுள்ளார்கள்.
எனவே, சூழ்நிலை காரணமாகவே குத்பா செய்தார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அத்துடன் வெறும் அறிவித்தலாக இல்லாமல் ஹம்து ஸலவாத்து சொல்லி தனிச் சிறப்புடன் குத்பாவைச் செய்துள்ளார்கள். இப்றாஹீமின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட தப்பபிப்பிராயத்தைக் களைவதற்காகத்தான் குத்பா செய்தார்கள் என்று தனிப்பட்ட எந்த ஆதாரமும் இல்லாமல் யூகம் செய்ய முடியாது. இது விடயத்தில் ‘இத்திபாஃ” பின்பற்றுதலே எமது கடமையாகும். எனவே, கிரகணத் தொழுகையின் ஒரு அங்கமாக குத்பா உரை உள்ளது என்பதே சரியான முடிவாகும்.
கிராஅத்தை சப்தமிட்டு ஓதுதல்:

கிரகணத் தொழுகையில் கிராஅத்தை சப்தமிட்டு ஓதுவதா? மௌனமாக ஓதுவதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
சூரியக் கிரகணமாக இருந்தால் கிராஅத்தை சப்தமாக ஓதலாகாது. ஏனெனில், அது பகலில் தொழப்படும் தொழுகை. பகல் தொழுகைகளில் கிராஅத் மௌனமாகத்தான் ஓதப்பட வேண்டும். சந்திர கிரகணமாக இருந்தால் கிராஅத்தை சப்தமாக ஓத வேண்டும். ஏனெனில், இரவில் தொழப்படும் தொழுகைகளில் கிராஅத் சப்தமாக ஓதப்படும் என்று இதற்கு காரணம் கூறப்படுகின்றது.
ஜும்ஆத் தொழுகை, பெருநாள் தொழுகை என்பன பகலில்தான் தொழப்படுகின்றன. ஆனால், அவற்றில் கிராஅத்தை சப்தமாக ஓதுவதற்கே மார்க்கம் வழிகாட்டியுள்ளது. எனவே, இந்த யூகத்தின் அடிப்படையில் விடை காண முடியாது.
ஆயிஷா(ரழி) அறிவித்தார்: ‘நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வ லகல் ஹம்து” என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்துக்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்”(புஹாரி: 1065)
இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகவே கிரகணத் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதியதாகக் கூறுவதால் அதுவே சரியான வழிமுறையாகும்.
வேறு பிரச்சினைகளுக்குத் தொழலாமா?:
கிரகணம் அல்லாமல் பூமியதிர்ச்சி, கடும் காற்று, இடி முழக்கம்… போன்றவை ஏற்பட்டால் தொழலாமா? என்ற சந்தேகம் எழலாம். இது குறித்து அறிஞர்கள் மத்தியில் நான்கு கருத்துக்கள் நிலவுகின்றன.
01. பூமியதிர்ச்சி, புயல் போன்ற எந்த ஆபத்தான அத்தாட்சிகளின் போதும் தொழுவது முஸ்தஹப்பானதாகும். இமாம் அபூஹனீபா (ரஹ்) மற்றும் இப்னு ஹஸ்ம்(ரஹ்) போன் றோர் இக்கருத்தில் உள்ளனர்.
02. கிரகணம் தவிர்ந்த வேறு எதற்காகவும் தொழக் கூடாது என்பது இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் அபிப்பிராயமாகும்.
03. கிரகணம் மற்றும் பூமியதிர்ச்சி தவிர்ந்த ஏனையவற்றுக்காகத் தொழக் கூடாது என்பது ஹன்பலி மத்ஹபின் ஒரு சாராரின் கருத்தாகும்.
04. கிரகணம் தவிர்ந்த ஏனைய எதற்காகவும் ஜமாஅத் தொழுகை இல்லை. ஆனால், ஆபத்துக்கள், அதிர்ச்சிகள் ஏற்படும் போது பணிவை வெளிப்படுத்த விரும்பியவர்கள் தனித்தனியாகத் தொழுது கொள்ளலாம் என்பது ஷாபிஈ மத்ஹபின் கருத்தாகும். இதுவே பொருத்தமான கருத்துமாகும். அல்லாஹு அஃலம்.

                                                                                மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகாத்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே இருந்ததினாலுமாகும்.” (3:112)


யூதர்கள் மீது இழிவும் வறுமையும் சாட்டப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.
யூதர்கள் மீது இழிவு விதியாக்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள். ஆனால், அவர்கள் மீது வறுமை விதியாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றானே அவர்கள் வறுமையில் இல்லையே! அவர்கள் செல்வச் செழிப்புடன்தானே இருக்கின்றனர். குர்ஆனின் கூற்று பொய்யாகிவிட்டதே என்ற எண்ணம் ஏற்படலாம்.
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாகவே இருக்கின்றது. யூதர்கள் மீது இழிவும் வறுமையும் விதியாக்கப்பட்டது என்ற கூற்று ஆயிரம் வருடங்களாக உண்மைப்படுத்தப் பட்டது. இழிவுற்றவர்களாக, நாடோடிகளாக உலகமெல்லாம் அலைந்து திரிந்தனர். இந்த வகையில் குர்ஆனின் கூற்று உண்மையாக்கப்பட்டது. குர்ஆன் இறைவேதம் என்பதை யூத இனம் அனுபவித்து வந்த இழிவின் மூலம் உறுதியானது.
சரி, இப்போது யூதர்கள் வறுமையில் இல்லையே என்ற எண்ணம் எழலாம். இங்கு அல்லாஹ் யூதர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டாலும் அவர்கள் அதில் இருந்து மீள இரு வழிகள் சொல்லப்படுகின்றன.
ஒன்று, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் உதவியைப் பெறுவது. அத்துடன் இரண்டாவது, ஒரு வழி உண்டு. அதுதான் பிற மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் மூலமும் அவர்கள் தம்மை வறுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என இந்த வசனம் கூறுகின்றது.
யூதர்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரித்தானியா, அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பின் தமது நிலையை மாற்றிக் கொண்டனர். அவர்கள் தமக்கென தனியான நாட்டை உருவாக்கிக் கொண்டனர். மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் யூதர்கள் தமது வறுமையை நீக்கிக் கொள்ளலாம் என குர்ஆன் கூறுகின்றது. அது நடந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு இந்த வசனம் நிதர்சனமான சான்றாகத் திகழ்கின்றது.
இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் இழிவையும் ஒப்பந்ததத்தின் மூலம் அவர்கள் இழிவிலிருந்து விடுபடலாம் என்ற முன்னறிவிப்பையும் செய்து இஸ்லாத்தின் எதிரிகளையே இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதற்கான சான்றாக ஆக்கிய அல்லாஹ் பரிசுத்தமானவனாவான்.
உஹதில் ஏற்பட்ட தளர்வு:
“(நயவஞ்சகர்களின் சதியினால்) அப்போது உங்களில் இரு சாரார் கோழைகளாகி பின் வாங்கிட நாடியதை (நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக!) அல்லாஹ்வே அவ்விரு சாராரின் பாதுகாவலனாவான். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைக்கட்டும்.” (3:122)
உஹதுப் போர் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில் 3000 பேர் கொண்ட ஒரு படை மதீனா நோக்கி வெறியுடன் வரும் செய்தி நபியவர்களுக்கு எட்டியது.
போரை எப்படி எதிர் கொள்வது என்று நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். சிலர் மதீனா உள்ளே இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்றனர். மற்றும் சிலர் மதீனாவின் எல்லையில் எதிரிகளைச் சந்திப்போம் என்றனர். முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மதீனாவுக்குள் இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்ற கருத்தைக் கூறினான். நபி(ஸல்) அவர்களின் முடிவு மாற்றமாக இருந்தது.
இதனால் வெறுப்புடன் உஹதுக்குச் சென்ற அவன் தன்னுடன் ஒரு கூட்டத்தை கழற்றிக் கொண்டு போரில் இருந்து பின்வாங்கினான். அவனது தலைமையில் 300 பேர் போரை விட்டும் விலகினர். பின்னர் நபித்தோழர்களில் ஒரு கூட்டம் எதிரிகளுடன் சண்டை செய்வதற்கு முன்னர் இவர்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு உள்ளானார்கள்.
முனாபிக்குகளின் விலகல் முஃமின்களுக்கு மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத்தான் இந்த வசனம் பேசுகின்றது. இதற்கு அடுத்த வசனத்தில் பத்ரில் இதை விட கொஞ்சமாக நீங்கள் இருந்த போது, ‘குறைந்த எண்ணிக்கையில் அல்லாஹ் உங்களுக்கு உதவினான்” என்று கூறி முஃமின்களை அல்லாஹ் உற்சாகப்படுத்தினான். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது நபித்தோழர்களில் சிலர் விரண்டு ஓட முற்பட்டார்கள்.
உஹதின் இந்த நிலையை இந்த வசனம் கூறும் செய்தி என்பவற்றைப் பார்க்கும் போது நபித்தோழர்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் குறையலாம். ஆனால் உஹது யுத்தத்தின் முடிவு பற்றி அல்லாஹ் பேசும் போது நபித்தோழர்களை மன்னித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.
“இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத் தன்மை உடையவன்.” (3:155)
எனவே, உஹதில் ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து படிப்பினைக்காக எடுத்துச் சொல்லலாம். ஆனால் அவற்றை வைத்து நபித்தோழர்களை விமர்சிக்க முடியாது!
அல்லாஹ்வே மன்னித்த பின் அதை வைத்துக் குறை கூறக் கூடாது! இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

                                                                                           மௌலவி :-  S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இஸ்லாத்தின் பெயரிலே வயிறு வளர்க்கின்ற சில வேஷதாரி மௌலவிகளின் பித்தலாட்டத்தின் காரணத்தாலும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி ஷேக்மார்களின் சதிமோசத்தாலும் சமுதாயத்திற்குள் ஏராளமான ஷிர்க்கான செயல்கள் ஊடுருவி உருமாறி காட்சியளிக்கின்றன.



மார்க்கத்துக்கு முரண்பாடான செய்யலை செய்தால் அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்குமா ? அந்த அமல்கள் அங்கீகரிக்கப்படுமா? என்பதை நாம் விளங்க வேண்டும்! அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லி கொண்டு காலத்தை கடத்தி செல்வதினால் என்ன பலன் கிடைக்க போகிறது?



அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள்
ஸூரதுல் பத்ஹ் பற்றிய சிறப்புகள்


عَنْ أَنَسٍ، أَنَّهَا نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَأَصْحَابُهُ مُخَالِطُونَ (2) الْحُزْنَ وَالْكَآبَةَ، وَقَدْ حِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَنَاسِكِهِمْ (3) ، وَنَحَرُوا الْهَدْيَ بِالْحُدَيْبِيَةِ، {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1] إِلَى قَوْلِهِ: {صِرَاطًا مُسْتَقِيمًا} [النساء: 68] قَالَ: ” لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ آيَتَانِ، هُمَا أَحَبُّ إِلَيَّ مِنَ الدُّنْيَا جَمِيعًا “. قَالَ: فَلَمَّا تَلَاهُمَا قَالَ رَجُلٌ: هَنِيئًا مَرِيئًا يَا نَبِيَّ اللهِ، قَدْ بَيَّنَ اللهُ لَكَ مَا يَفْعَلُ بِكَ، فَمَا يَفْعَلُ بِنَا، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ الْآيَةَ الَّتِي بَعْدَهَا: {لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ} [الفتح: 5] حَتَّى خَتَمَ الْآيَةَ (4)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: ” إِنَّ سُورَةً مِنَ الْقُرْآنِ، ثَلَاثُونَ آيَةً، شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ، وَهِيَ: {تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ} [الملك: 1] “
عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ بِتَنْزِيلُ السَّجْدَةِ، وَبِتَبَارَكَ “
عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ عَلِّمْنِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَوَيْتُ إِلَى فِرَاشِي، قَالَ: اقْرَأْ: قُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ فَإِنَّهَا بَرَاءَةٌ مِنَ الشِّرْكِ
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا زُلْزِلَتْ تَعْدِلُ نِصْفَ القُرْآنِ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ القُرْآنِ، وَقُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ تَعْدِلُ رُبُعَ القُرْآنِ.
أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ رُبُعُ الْقُرْآنِ، وَإِذَا زُلْزِلَتِ الْأَرْضُ رُبُعُ الْقُرْآنِ، وَإِذَا جَاءَ نَصْرُ اللهِ رُبُعُ الْقُرْآنِ “
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ»
عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ ثُلُثَ القُرْآنِ فِي لَيْلَةٍ؟» فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «اللَّهُ الوَاحِدُ الصَّمَدُ ثُلُثُ القُرْآنِ»
عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ قَالَ: «قُلْ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ حِينَ تُمْسِي، وَحِينَ تُصْبِحُ، ثَلَاثَ مَرَّاتٍ تَكْفِيكَ مِنْ كُلِّ شَيْءٍ»
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلاً يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَجَبَتْ. قُلْتُ: مَا وَجَبَتْ؟ قَالَ: الجَنَّةُ.
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ….. لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي: ” يَا عُقْبَةُ بْنَ عَامِرٍ، أَلَا أُعَلِّمُكَ سُوَرًا مَا أُنْزِلَتْ فِي التَّوْرَاةِ وَلَا فِي الزَّبُورِ وَلَا فِي الْإِنْجِيلِ وَلَا فِي الْفُرْقَانِ مِثْلُهُنَّ، لَا يَأْتِيَنَّ عَلَيْكَ لَيْلَةٌ إِلَّا قَرَأْتَهُنَّ فِيهَا: قُلْ هُوَ اللهُ أَحَدٌ وَقُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ “
مُعَاذِ بْنِ أَنَسٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَرَأَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ، بَنَى اللهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ “
 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أُحِبُّ هَذِهِ السُّورَةَ: قُلْ هُوَ اللهُ أَحَدٌ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” حُبُّكَ إِيَّاهَا أَدْخَلَكَ الْجَنَّةَ “
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ، أَوْ أُنْزِلَتْ عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، الْمُعَوِّذَتَيْنِ».
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ عَيْنِ الْجَانِّ، وَعَيْنِ الْإِنْسِ، فَلَمَّا نَزَلَتِ الْمُعَوِّذَتَانِ أَخَذَ بِهِمَا، وَتَرَكَ مَا سِوَى ذَلِكَ “
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى يَقْرَأُ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَيَنْفُثُ، فَلَمَّا اشْتَدَّ وَجَعُهُ كُنْتُ أَقْرَأُ عَلَيْهِ وَأَمْسَحُ بِيَدِهِ رَجَاءَ بَرَكَتِهَا»
عَنْ عَائِشَةَ: ” أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ كُلَّ لَيْلَةٍ جَمَعَ كَفَّيْهِ، ثُمَّ نَفَثَ فِيهِمَا فَقَرَأَ فِيهِمَا: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ وَقُلْ أَعُوذُ بِرَبِّ الفَلَقِ وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، ثُمَّ يَمْسَحُ بِهِمَا مَا اسْتَطَاعَ مِنْ جَسَدِهِ، يَبْدَأُ بِهِمَا عَلَى رَأْسِهِ وَوَجْهِهِ وَمَا أَقْبَلَ مِنْ جَسَدِهِ يَفْعَلُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்; நபியவர்கள் ஹுதைபியாவிலிருந்து திறும்பும் போது ஸூரதுல் பத்ஹ் அத்தியாயம் முதல் இரு வசனங்களும் இறங்கியது, அந்த நேரம் நபித் தோழர்கள்,உம்ரா கடமை தடுக்கப்பட்டதற்காக மிருகத்தை அறுத்துப் பலியிட்ட நிலையில், கவலையோடும், கைசேதத்தோடும் இருந்தனர். நபியவர்கள் கூறினார்கள்: என் மீது இரு வசனங்கள் இறங்கியிருக்கின்றன, அவை முலு உலகத்தை விடவும் எனக்கு விருப்பமானதாகும். நபியவர்கள் அவற்றை ஓதிக்காட்டிய போது, ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு என்ன செய்வான் என்பதையும், எங்களுக்கு என்ன செய்வான் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டான். என்று கூற, அல்லாஹ் அதற்கு பின்னுள்ள  (ஐந்தாவது) வசனத்தை இறக்கிவைத்தான்.  (அஹ்மத்: 12374)
ஸூரா முல்க் பற்றிய சிறப்புகள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்குர்ஆனில் ஒரு ஸுரா இருக்கின்றது, அது ஒரு மனிதனின் பாவம் மன்னிக்கப்படும் வரை பரிந்துரை செய்யும், அதுதான் ‘தபாரகல்லதீ பியதிஹில் முல்க்’ எனும் ஸூரா. (அஹ்மத்:7975, அபூதாவுத்:1400, திர்மிதீ: 2891)
இந்த ஹதீஸை சில அறிஞர்கள் ஸஹீஹ் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அதன் அறிவிப்பாளரான அப்பாஸ் அல்ஜுஷமீ’ என்பவர் விமர்சிக்கப்பட்டவரே. அவர் அபூஹுரைராவிடம் கேட்டதாகவோ, அவரிடமிருந்து கதாதா கேட்டதற்கோ சான்றுகள் இல்லை என்பதே காரணம். அதே நேரம் அல்குர்ஆன் சிபாரிஸ் செய்யும் என்ற பொது ஹாதீஸின் அடிப்படையில் பலர் ஹஸனாக்கியுள்ளனர். (அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், தன்Zஸீலுஸ் சஜ்தாவையும், (32) தபாரகல்லதீ ஸூராவையும் (67) ஓதும் வரை தூங்கமாட்டார்கள்.  (அஹ்மத்:14659 , திர்மிதீ:2892)
இந்த ஹதீஸும் விமர்சனத்திற்கு உற்பட்டதே, ‘லைஸ் இப்னு அபீ ஸுலைம்’ என்பவர் பலவீனமானவராக இருக்கின்றார். மேலும் ஜாபிர் (றழி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்‘ அபுZஸ்ஸுபைர்’ அவரிடமிருந்து அதனை கேட்கவில்லை. ஆனாலும் ‘அல்முகீரதுப்னு முஸ்லிம்’ என்பவர் ‘லைஸ்’ அவர்களுக்கு பகரம் அறிவித்திருக்கின்றார். மேலும் ‘அபுZஸ்ஸுபைர்’ அவர்களின் இடத்தில் ‘ஸப்வான்‘ எனும் அறிப்பாளார் ‘ஜாபிர் (றழி) அவர்களிடம் கேட்டுள்ளார் என்ற வகையில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸை ஸஹீஹாக்கியுள்ளனர்.
ஸூரா அல்காபிரூன் பற்றிய செய்திகள்
நௌபல் (றழி) அவர்கள் நபிகளாரிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் படுக்கைக்கு வந்தால் ஓதுவத்ற்கு ஒரு செய்தியை சொல்லித்தாருங்கள். என்று கேட்க, நபியவர்கள்; நீ குல் யாஅய்யுஹல் காபிரூன் ஸூராவை (109) ஓது, ஏனெனில் அது ஷிர்க்கை விட்டும் நீக்குவதாகும். என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 23807,திர்மிதீ:3403)
இந்த ஹதீஸும் அறிவிப்பாளர்கள் வலுவானவர்களாக இருந்தாலும், அறிவிப்பாளர் தொடரில் தலம்பல் இடம்பெற்றுள்ளது. அபூ இஸ்ஹாக் அவர்களின் மாணவர்கள் பலவிதமாக மாற்றி அறிவித்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதா Zஸுல்Zஸிலத் ஸூரா (99) குர்ஆனின் அரைவாசியாகும், குல்ஹுவல்லாஹு அஹத் மூன்றில் ஒரு பகுதியாகும், குல்யா அய்யுஹல் காபிரூன் நான்கில் ஒரு பகுதியாகும். (திர்மிதீ:2894)
இந்த ஹதீஸும் பலவீனமானதாகும், திர்மிதியின் அறிவிப்பில் ‘யமானிப்னுல் முகீரா’ என்பவர் இடம்பெருகின்றார், அவர் ‘முன்கருல் ஹதீஸ்’ ஹதீஸ் கலையில் விடப்பட்டவர்’ என்று விமர்சிக்கப்பட்டவர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்காபிரூன், Zஸுல்Zஸிலத், அன்னஸ்ர் ஸூராக்கள் குர் ஆனின் நான்கில் ஒரு பகுதியாகும்.  (அஹ்மத்:12488)
இந்த ஹதீஸும் பலவீனமானதாகும், இதில் வரும் ‘ஸலமதுப்னு விர்தான்’ என்பவர் ‘நிராகரிக்கப்பட வேண்டியவர்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
ஸுரா இக்லாஸின் சிறப்புகள்
அபூ ஸயீத் அல் குத்ரீ(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்’ என்று கூறினார்கள்.  (புஹாரி:5013)
அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?’ என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், ‘எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112 வது ) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 5015, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அப்துல்லாஹ்  (றழி) அவர்களுக்கு; நீ குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவையும், பாதுகாப்பு தேடும் இரு ஸூராக்களையும் (அல்பலக்,அன்னாஸ்) காலையிலும், மாலையிலும் மூன்று தடவைகள் ஓதுவீராக, அது எல்லா வஸ்துகளை விட்டும் உன்னை காக்கும். என்று கூறினார்கள்.  (அபூதாவுத்: 5082, திர்மிதீ:3575)
அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரோடு வந்துகொண்டிருந்தேன், அப்போது ஒரு மனிதர் குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவை ஒதுவதை நபிகளார் கேட்டார்கள், அப்போது நபிகளார்;’கடமையாகிவிட்டது’ என்றார்கள். நான் ‘என்ன கடமையாகிவிட்டது?’ என்றேன், அதற்கு நபியவர்கள்; ‘சுவர்க்கம்’ என்றார்கள். (திர்மிதீ: 2897, நஸாஇ)
உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபிகளாரை சந்தித்தேன், அப்போது நபியவர்கள், உக்பாவே! தவ்ராத்திலோ. Zஸபூரிலோ, இன்ஞீலிலோ, அல்குர்ஆனிலோ இறக்கப்படாதது போன்ற சில ஸுராக்களைக் கற்றுத் தரட்டுமா! எந்த இரவையும் தவரவிடாமல் நீ ஓதுவாயாக, அவை ‘குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் பலக், குல் அஊது பிரப்பின்நாஸ்’ ஸூராக்கலாகும்.  (அஹ்மத்: 17452)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாராவது குல்ஹுவல்லாஹு அஹத் ஸூராவை முடியும் வரை பத்து விடுத்தங்கள் ஓதினால், அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாலிகையை கட்டுவான்.  (அஹ்மத்: 15610)
பலவீனமானது  இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரும் ‘ஸஹ்ல் பின் முஆத், Zஸப்பான் பின் பாஇத்’ போன்றோர் பலவீனமானவர்கள் முன்கருல் அஹாதீஸ்‘ நீராகரிக்கப்பட வேண்டியவற்றை அறிவிப்போர்’ என்று விமர்சிக்கப் பட்டிருக்கின்றனர். மேலும் ‘ரிஷ்தீன், இப்னு லஹீஅஹ்’ போன்ரோர் பலவீனமானவர்களாவர்.
அனஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து,நான் குல் ஹுவல்லாஹு அஹத் ஸூராவை நேசிக்கின்றேன். என்று கூறினார். அதற்கு நபியவர்கள்: நீ அதனை நேசிப்பது உன்னை சுவனத்தில் நுலைவிக்கும். என்று கூறினார்கள்.  (அஹ்மத்: 12432) இந்த அறிவிப்பாளர் தொடரில் முபார்க் இப்னு புலாலா’ என்பவர் வருகின்றார், அவர் முதல்லிசாக இருப்பதுடன், ;அன்; என்றே அறிவிப்பும் செய்திருக்கின்றார்.அதேநேரம் அஹ்மதின் (12433) இலக்க ஹதீஸில் அவர் நேர்டியாக கேட்டதாக’ பதிவு செய்துள்ளார், எனவே அது ஸஹீஹாகும். மேலும் திர்மிதியின் (2901) (புஹாரி சுருக்கச் செய்தி) அறிவிப்பில்;
ஒருவர் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் அதனை திறுப்பித் திறுப்பி ஓதினார், தோழர்கள் தடுத்தும் அவர் அப்படியே செய்தார், பிறகு நபிகளாரிடம் செய்தி வரவே, நபிகளார் காரணம் கேட்க, அதனை அவர் நேசிப்பதாக கூறினார், அப்போது நபிகளார்; நீ அதனை நேசிப்பது உன்னை சுவனத்தில் நுலைவிக்கும். என்று கூறினார்கள். என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரும் விமர்சிக்கப்பட்டதே. அதன் அறிவிப்பாளரான ‘அப்துல் அஸீஸ் பின்முஹம்மத், இஸ்மாஈல் பின் அபீ உவைஸ்’என்போர் பலவீனமானவர்களாவர்.
உக்பதுப்னு ஆமிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் எனக்கு கூறினார்கள்; எனக்கு சில வசனங்கள் இறங்கியுள்ளன, அவை போன்று எதுவும் இல்லை, அவை அல்முஅவ்விததான். (குல் அஊது பிறப்பில் பலக், குல் அஊது பிறப்பின் நாஸ்.)  (முஸ்லிம்: 1928)
அபூ சஈத் அல்குத்ரீ (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மனித, ஜின்களின் கன்னூரிலிருந்து (பல வழிகளில்) பாதுகாப்பு தேடுபவர்களாக இருந்தார்கள், முஅவ்விசதான்கள் (அல்பலக், அந்நாஸ் ஆகிய சூராக்கள்) இறங்கியவுடன்  அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு ஏனையவைகளை விட்டுவிட்டார்கள்.  (நசாஇ: 5494, இப்னுமாஜா)
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் தன் மீது முஅவ்விசாத்துகளை (அல் இக்லாஸ், அல்பலக், அந்நாஸ்) ஓதி, ஊதுவார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவர்கள் மீது ஓதி, பரக்கத்தை எதிர்பார்த்தவளாக அவர்களது கையைக் கொண்டே தடவிவிட்டேன். (புஹாரி: 5016, முஸ்லிம்)
ஆயிஷா(றழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அவ்விரண்டிலும் ஊதிவிட்டு, அவற்றில்  ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் பலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி, பிறகு தம் இரண்டு கைகளால் தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.  (புஹாரி: 5017, 6319)
இன்ஷா அல்லாஹ் தொடரும் ! பகுதி 3

இன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கெட்ட மனிதர்கள் மரணித்தால் அவர்கள் ஆவியாக வந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நல்லவர்கள் மரணித்தாலும் உலகோடு அவர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு நலவு செய்கின்றார்கள் என்று நினைக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே கப்ராளிகள் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் தேவைகளை முறைப்பாடு செய்கின்றனர். காரணம் கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் வாங்கித் தறுவதாக கூறுகின்றனர். இதுவே இன்றைக்கு அதிகமானவர்களை ஷிர்க்கில் சேர்த்திருக்கின்றது.
அப்படி மரணித்தவர்கள் உலகிள் ஏதும் செய்வார்களா? என்றால் அவர்களால் முடியாது என்பதே குர்ஆன் ஹதீஸ் சொல்லும் தீர்வாகும். 
  • அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (39:42) 

  • இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் – பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ எனக் கேட்பர். அதற்கவன் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி விளங்கியதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.  (புஹாரி: 1338, முஸ்லிம்)

  • திர்மிதியில் வரும் அறிவிப்பில்: அந்த நல்ல மனிதர் ‘நான் எனது குடும்பத்தவர்களிடம் திறும்பிச்சென்று, (எனக்கு கிடைத்ததை) தெறிவித்துவிட்டு வருகின்றேன்.’ என்று கூறுவாராம். அதற்கு அவரைப் பார்த்து ‘இந்த இடத்திலிருந்து நீ எழுப்பப்படும் வரை விருப்பமானவரால் எழுப்பப்படும் புது மாப்பிள்ளை துங்குவது போன்று தூங்கும் என்று கூறப்படுமாம்.’ என்று வந்துள்ளது.
எனவே நல்லவர் என்றால் சுவனக் காட்சிகளைப் பார்த்தவன்னம் தூங்கிக் கொண்டிருப்பதாக நபிகளார் கூறும்போது அவர் எப்படி உதவி செய்ய உலகிற்கு வருவார்? தன் குடும்பத்தவர்களுக்கு அறிவிக்கவே வரமுடியாது என்றால் உதவி செய்ய எப்படி வருவார்?
மேலும் இந்த அடிப்படையில் தான் நல்லவர்கள் மரணித்தபின்னறும் உதவி செய்வார்கள் என்று ஷிர்க் வைத்த அனைத்து சமூகத்தவர்களும் கருதி, அவர்களை நெறுங்கி, ஷிர்க்கும் வைத்தனர்.  அல்லாஹ் அதனையே கண்டித்தான்.
  • இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: வத்து, ஸுவா, யகூஸ், யஊக், ஸபா, நஸ்ர், (மக்காவில் வணங்கப்பட்ட சிலைகளின் பெயர்கள்) என்ற அனைத்தும் நூஹ் நபியின் கூட்டத்தில் இருந்த நல்லவர்களின் பெயர்கள். அவர்கள் மரணித்த பின் அவர்களிடம் வந்த ஷைத்தான் அந்த நல்லவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஞாபகார்த்த கட்களை நட்டுமாறும், அவர்களது பெயர்களை சூட்டுமாறும் ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வணங்கப்படவில்லை. அவர்களும் மரணித்தபின் அதபற்றிய அறிவு மறக்கடிக்கப்பட்டு, அவைகள் (அந்த ஞாபகார்த்த கட்கள்) வணங்கப்பட்டன.  (புஹாரி)
இப்படி நல்லவர்களை ஞாபகப்படுத்தப்போய் காலப் போக்கில் அவை இணைவைப்பிலே கொண்டு சேர்ர்த்துவிடுகின்றது.
கெட்டவர்கள் தீங்கு செய்ய ஆவியாக வருவார்களா?
  • அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.(100) “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.(23: 99,100)

  • உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.(63:10)

  • எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?” (14:44)

  • நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கியதுமில்லை’ என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.  (புஹாரி: 1338, முஸ்லிம்)
எனவே நல்ல நோக்கத்திற்காகவே திறும்பவும் உலகிற்கு வரமுடியாது எனும் போது எப்படி தீங்கிளைக்க வருவார்கள். எனவே இப்படி தப்பான சிந்தனையுள்ளவர்கள் சிந்தித்து தன் கொள்கையை சீர் செய்ய வேண்டும். மேலும் தண்டிக்கும் மலக்குமார்களின் கைகளில் இருந்து எப்படி தப்பி வந்தார்கள். அல்லாஹ் போட்ட திரையை தாண்டி எப்படி வரமுடியும்? எனவே பேய் பிசாசு என்ற தவறான சிந்தனையிலிருந்து விடுபடுவோம்.
மேலும் பத்ர் மௌலிது புத்தகம் இருக்கும் வீட்டை ‘பத்ரு ஸஹாபாக்கள் பாதுகாப்பர்களாம். அதை தன் வசம் வைத்திருப்பவர்களை காப்பார்களாம்’ என்ற சிந்தனையும் முஸ்லிம்களிடம் இருக்கின்றது. அதனால் அவர்கள் பெயர் கொண்டு அழைக்கவும் செய்கின்றனர். அப்படி ஒரு ஆற்றல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் ஏன் பத்ரு யுத்தத்தின் போது களத்துக்கு மலக்குகள் வந்ததது போன்று அவர்களால் உஹது களத்துக்கு வரமுடியவில்லை? மலக்குகள் வந்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படி இருக்கும் போது உஹது களத்துக்கு ஏன் பத்ரில் மரணித்தவர்கள் வந்து உதவி செயவில்லை.  அல்லாஹ் அப்படி கூறவுமில்லை.
இந்த நம்பிக்கையின் விளைவினால் தான் கப்ருகளுக்கு பக்கத்தால் பயணிக்கும் போது பாதுகாப்பு நோக்கில் தலை மாட்டில் உள்ள உண்டியலில் காணிக்கை போடப்படுகின்றது. மேலும் நோக்கங்கள் நிறைவேற அந்த இடத்தில் காணிக்கை கட்டப்படுகின்றது. இப்படி ஈமானை இலக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மேலும் நபிகளாருக்கு உயிரோடு இருக்கும் போது எதனை செய்ய முடியாது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றானோ அதனை எப்படி மரணித்த பின் செய்வார்கள்? அப்படி நம்பினால் நமது ஈமானின் நிலை என்னவாகும்? நபிகளாராலே முடியாது என்றால் நாம் நல்லவர்கள் என்று நினைக்கும் நல்லடியார்களின் நிலை என்ன?
  • (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.”  (7:188)

  • (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”  (10:49)
குறிப்பு: 
நல்லடியார்கள் உலகில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு சக்தி பெறமாட்டார்கள், என்று கூறும் போது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேட்கொண்டபோது மூஸா நபியவர்கள் தொழுகையின் எண்ணிக்கையை குறைத்து உதவி செய்யவில்லையா? என்ற வாதத்தை வைத்து சரிபடுத்த முயல்கின்றனர்.
உண்மையில் நபிகளாருக்கும் ஏனைய நபிமார்களுக்கும் மிஃராஜில் நடந்த நிகழ்வுகள் இந்த உலகிற்கு வெளியே, அல்லாஹ் அவர்களை வைக்க நாடிய இடத்திலே நடந்தது. மேலும் மிஃராஜ் பயணமே ஒரு அற்புதம் எனும் போது அதில் அற்புதத்தையே அல்லாஹ் காட்டுவான். அல்லாஹ் நபிகளாருக்கு காட்டியவற்றையெல்லாம் மரணித்த நல்லடியார்கள் செய்வார்கள் என்றிருந்தால் அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? மூஸா நபி வானத்தின் மேலிருந்து உதவி செய்தது போன்று நல்லடியார்கள் உலகில் உதவுவார்கள் என்று நபிகளார் கூறாத போது எப்படி நாமாக ஒன்றை சொல்லமுடியும்? மாறாக மரணித்தவர்கள் உலகிற்கு வரமுடியாது என்றுதானே கூறினார்கள்.
அங்கு நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபியால் உஹதுக்கு வந்து உதவ முடியவில்லை? அதை விடவும் நபிகளாரின் நேசத்திற்குறிய பேரப் பிள்ளை ஹுஸைன் (றழி) அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏன் நபிகளார் உதவிசெய்ய வரவில்லை? இப்படி ஏராலமான உதாரணங்களை கூற முடியும். அப்படி ஒன்றுக்கு வந்திருந்தாலும் அந்த வாதம் சரியாகலாம்.
மேலும் நபிகளார் சுவனவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தார்களே, அப்படியென்றால் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் சேர்த்துத் தானே காட்டப்படர்கள் என்றால் உலகில் அந்த நேரத்தில் வாழ்ந்தவர்கள உலகில் இருந்தார்களா? அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள? இதற்கான பதிலை யோசித்தாலே விளங்கும் நபிகளாருக்கு அன்றைய இரவு வானத்தின் மேல் அனைத்தும் எடுத்துக் காட்டப்பட்டது. என்பது.
மேலும் நபிகளார் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அதிலே மூஸா நபி, ஈஸா நபி உற்பட அனைத்து நபிமார்களும் கலந்துகொண்டனர். அதே நபிமார்கள் வானிலும் இருந்தார்கள் என்றால் நபிமார்கள் பல உறுவங்களில் இருக்கின்றார்கள் என்று கூறுவோமா? அல்லது இந்த அற்புத நிகழ்வை அல்லாஹ் நபிகளாருக்கு காட்டுவதற்காக எடுத்துக் காட்டினானா? எனவே இவை அனைத்தும் சேர்ந்தே அற்புதமாக இருக்கின்றது என்றால், சாதாரணமாக எல்லா நல்லடியார்களும் இந்த அடிப்படையில் நடப்பார்கள் என்றால் மிஃராஜ் என்பது அற்புத பயணம் என்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகின்றது.
மேலும் உயர்த்தப்பட்ட ஈஸா நபியவர்கள் மறுமையின் அடையாளமாக உலகிற்கு இறங்குவார்கள், என்று குர்ஆன் (நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார் (43:6) கூறும் போது மிஃராஜின் போது இறங்கியது மறுமையின் அடையாளமா? என்றால் இல்லை என்போம். காரணம் அது அல்லாஹ் அற்புதத்திற்காக எடுத்துக் காட்டினான் என்பதே.
  • இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்:  (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?’ என்று கேட்டேன். அப்போது, இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.( விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள்.
(அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். 

தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(றழி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.  (புஹாரி: 5705, முஸ்லிம்)
எனவே நபிகளாருக்கு மிஃராஜ் பயணத்தின் போது நபி மூஸா (அலை) அவர்கள் உதவியது போன்று இவ்வுலகில் மரணித்த நல்லவர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஓர் ஆதாரத்தை பார்க்கமுடியுமா? என்றால் முடியாது என்பதே பதிலாகும். தாங்கள் செய்யும் ஷிர்க்கான அம்சங்களை சரி படுத்த நபிகளார் கூறாதவைகளையெல்லாம் கூறுவதுதான் வழிகேடர்களின் பழக்கமாக இருந்துள்ளது. அல்லாஹ் எம்மை இந்த அநியாயச் செயலிலிருந்து காப்பானாக.
மேலும் நல்லடியார்களும் பெரியார்களும் குழந்தை பாக்கியத்தை தறுவதாக நினைக்கின்றனர். அதிகமான முஸ்லிம்கள், அதனால் நல்லடியார்களிடம் குழந்தைப் பாக்கியத்தை வேண்டி அவர்களின் கப்ருகளுக்கும், அவர்களின் பெயரால் கொடுக்கப்படும் கந்தூரிகளுக்கும் நேர்ச்சை வைக்கின்றனர். இதுவும் ஷிர்க் ஆகவே அமையும். மேலும் அல்லாஹ் தான் தேர்வு செய்து எடுத்த நபிமார்களுக்கே, அவர்கள் உயிரோடு வாழும்போதே அது முடியவில்லை எனும் போது இந்த நல்லடியார்களின் நிலை என்ன?
  • அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.  (42:49- 50)

  • காஃப், ஹா, யா, ஐன், ஸாத்2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).4. (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.5. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”  (19:1- 9) மேலும் இதே செய்தியை 3:38 லும் பார்க்கலாம்.

  • (அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங்கூறினர்.29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  (51:28- 30)

  • அதற்கு அவர்கள், “பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள்.54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள்? எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள்? உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது?” எனக் கேட்டார்.55. அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்!” என்று கூறினார்கள்.56. “வழிகெட்ட வர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்,  (15:53- 56)
இப்படி நபிமார்களுக்கே இந்த அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை எனும் போது நாம் அல்லாஹ் அல்லாத பெரியார்களுக்கும் நல்லடியார்கள் என்று நாம் முடிவு செய்தவர்களுக்கும் கொடுத்தால் எமது ஈமானின் நிலை என்ன என்பதை இப்படி செய்யும் முஸ்லிம்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அல்லாஹ்வே எம்மைக் இந்த இணைவைப்பிலிருந்து காப்பானாக.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget