ஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்பினையும்


( குர்ஆன் சூரத்துல் அந் நம்ல் 27:21-28 ) குர்ஆனில் இடம் பெற்றுள்ள ஹுத் ஹுத் பறவைக்கும் சுலைமான் (அலை) அவர்களுக்கும் இடையே உண்டான உரையாடல் .

ஹுத்ஹுத் பறவையை இன்று காணவில்லையே என்று தேடிகொண்டிருந்த சுலைமான் (அலை) அவர்கள் அது வருவதில் தாமதமானதால் அப்பறவை மீது கோபம் கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.அப்போது அது கூறியது ““தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

“நிச்சயமாக அந்த தேசத்தில் ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்;மேலும் அவளுக்கு பல பொருட்களும் மகத்தான அரியனையும் இருப்பதை கண்டேன் . அவளும் அவளுடைய சமூகமும் அல்லாஹுவை வணங்காமல் , சூரியனை வணங்குகின்றனர் .ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.என்று ஹுத் ஹுத் பறவைகூறியது. அப்பறவையை பார்த்து சுலைமான்  (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை கவனியுங்கள் அதில் தான் நான் கூறவரும் படிப்பினை உள்ளது .

 (அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார். அதன்பின் அப்பறவையிடம் கடிதத்தை அனுப்பிவைப்பார்கள் பிறகு நடந்த விடயங்களை குர்ஆனின் தொடர்ச்சியில் பார்க்கலாம்.
இந்த உரையாடலில் ஹுத் ஹுத் பறவை தான் கூறவந்த செய்தியை கூற ஆரம்பிக்கும் பொழுதே உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். என்றது, எனினும் அதுகூறிய செய்திகேட்டு சுலைமான் (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை பாருங்கள் “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்”
இதில் தான் நமக்கு மாபெரும் படிப்பினை உள்ளது
.
எந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை நிலை அறியாமல் முடிவுவெடுத்துவிட கூடாது,என்பதே அப்படிபினையாகும். இக்காலத்தில் பல செய்திகள் நம் காதுகளில் வந்து விழும் போதும்,
சமூகவளைதலங்களில்சில செய்திகள் பரப்ப படுகிற போதும் சர்வ சாதாரணமாக அவைகளை சற்றும் ஆராயாமல் அதை நாம் பிறருக்கு அதை பகிர்கிறோம். அதனால் இந்த சமூகத்தில் ஏற்பட போகும் விளைவுகளை யாரும் துளியும் சிந்திபதில்லை பகிரப்படும் பல செய்திகள் ஊர்ஜீதபடுத்தபடுத்த
படாதவைகளே ஆகும்.

பகிர்வு பொத்தானை அழுத்தும் முன்பு அச்செய்தியின் உண்மை நிலை என்ன சற்று ஆராய்ந்தால் பல வதந்திகள் தவிர்க்கபடும் . மேலும் ஒரு சம்பவம் நபிகளாரின் காலத்தில் நடந்தது. ஹாரிஸ் என்றொரு நபி தோழர் ஒரு கிராமத்திலிருந்து வருகிறார். நல்ல குணமுடையவர் நபிகளில் கரங்களில்
இஸ்லாத்தை ஏற்று தான்னுடைய செல்வத்திலிருந்து ஜகாத் தொகையை கணக்கிட்டு நபிகாளாரிடம் ஒப்படைக்கிறார்.

பிறகு அவர் தன் கிராமம் சென்றார். பிறகு அவரின் போதனையால் அந்த கிராமமே இஸ்லாத்தை தழுவியது.நபிகளார் அந்த கிராமத்தில் யாரெல்லாம் இஸ்லாத்தை தழுவியுல்லார்களோ அவர்களிடம்
ஜகாத் தொகையை வசூளிக்க வலீத் (ரலி) என்ற சஹாபியை நபிகளார் அனுப்பினார்கள். அவர் வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் அல்லாஹுவின் தூதர் அனுப்பிய தூதர் வருகிறார் வாருங்கள் வரவேற்போம்” என்று அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த ஊர் நுழைவு வாயிலில் தங்களின் ஜகாத் தொகைகளை கையில் வைத்துகொண்டு குழுமினர்.

அக்கிராம மக்களின் பெரும் கூட்டத்தை பார்த்த வலீத் (ரலி) “நமக்கு எதிராக இம்மக்கள் போர் தொடுக்க அல்லவா வந்துள்ளனர்” என்று எண்ணிக்கொண்டு அவர்களின் அருகில் கூட நெருங்காமல் அப்படியே திரும்பிவிடுகிறார். நபிகளாரிடம் வந்து “அந்த கிராமம் நமக்கு எதிராக போர் தொடுக்க நின்று கொண்டுள்ளனர் என்று தவறான செய்தியை நபிகளாரிடம் முன்வைக்கிறார் அப்போது நபிகளார் “ ஹாரிஸ் (ரலி) அவர்களும் நல்ல குணமுடையவர்,அந்த கிராம மக்கள் பற்றியும் நல்லவிதமாக தான் பேசபடுகிறது, என்று எண்ணினார்கள் , எனினும் வலீத் (ரலி) அவர்கள் கூறியா செய்தியால் ஹாலித் இப்னு வலீத் (ரலி) அப்போதைய இஸ்லாமிய படைத்தளபதி ஆவர்கள்.

அவர்களை அழைத்து அந்த கிராமத்திற்கு படையோடு செல்லுங்கள்.ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களின் உண்மையான நிலை அறியாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் அவர்களாக தாக்குதல் நடத்தினால் திருப்பி சண்டையிருங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.
ஹாலித் இப்னு வலீத் (ரலி) தலைமையில் பத்தாயிரம் பேர்கொண்ட படை அந்த கிராமம் நோக்கி செல்கிறது. அந்த கிராம மக்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவியுள்ள செய்தி அறிந்த ஹாலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் நபிகளுக்கு செய்தி அனுப்பினார்கள்.

“வலீத் (ரலி) அவர்கள் கொண்டுவந்த செய்தி தவறானது இங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களே
வலீத் (ரலி) அவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழையவே இல்லை” என்ற செய்தியை நபிகளுக்கு அனுப்பினர்கள் இப்படி பட்ட சம்பவங்கள் நமக்கு பல படிப்பினைகளை கூறுகிறது.இது சிலருக்கு வேடிக்கையாக நடந்துவிட்டது என எண்ணலாம், ஆனால் வலீத் (ரலி) அவர்களின் கூற்று
உண்மை என நம்பி அவர்களின் மீது போர் தொடுத்திருந்தால் ,இஸ்லாமிய வராலற்றில் ஒரு மாபெரும்
பிழை நிகழ்திருக்கும் . ஒருவர் கூறும் ஊர்ஜிதமற்ற செய்தியால் ஒரு போரே மூண்டிருக்கும் .

இப்போதிய காலகட்டத்தில் பல சர்வதேச செய்தியாலனாலும் சரி இஸ்லாமிய செய்திகலானாலும்,நம் ஊரிலேயே நடக்கும் செய்திகள் எவையானாலும் அவைகள்ஆராய படவேண்டும் .

மேலும்பார்க்க > 
                 * ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...
                 * ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் 
                 * மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம... 
                 * கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...
                 * வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.?
                 * இரண்டு வகையான பாம்பை இஸ்லாம் ஏன் கொள்ள அனுமதித்தது...
 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget