எதற்காக நாம் மாஷா அழ்ழாஹ் சொல்ல வேண்டும்..?

இன்று குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எதற்கு எடுத்துக்கொண்டாலும் அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறும் சமுதாயமாக நமது சமுதாயம் மாறி விட்டது. அதுவும் ஒரு முஸ்லிம் பெண் தொடர்பான ஒரு போஸ்ட் போட்டு விட்டால் போதும் மூட மூடையாக லைக் பண்ணி கலக்கிவிடுவார்கள்.       

பெண்கள் காரி என்ற பெயரில் வயசுக்கு வந்த பெண் மக்களை ஆண்கள் கும்பலுக்கு மத்தியில் மேடை ஏற்றி குர்ஆனை ஓத வைகிறார்கள். ராகம் என்ற பெயரில் தொண்டை கிளியும் அளவுக்கு சத்தம் போட்டு குர்ஆன் ஒதுகிறார்கள். இவ்விடயம் இஸ்லாமிய விடயம் தான் ஆனால் பெண்கள் குரல் உயர்த்தி பேசுவதை இஸ்லாம் அங்கீகரிப்பது இல்லை அது குர்ஆன் ஓதுவதாக இருந்தாலும் சரியே..
இப்படியான வீடியோக்களை முகநூலில் பார்க்கும் போது மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று காமெண்ட் போடுவார்கள்.

ஒரு ஆண் அப்பெண்ணின் வெளிப்படையாக தென்படக்கூடிய உறுப்புக்களை பார்க்கிறான் இங்கு பார்வை தாழ்த்தப் படுவதில்லை முஃமினான ஆண்களும் பெண்களும் பார்வையை தாழ்த்திக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தின் படி முதலாவது பார்வை மட்டுமே நமக்கு ஆகுமானதாகும் கண் இமை மூடி விட்டால் திருப்பி பார்ப்பது ஹராமாகும். 
 
ஆனால் இன்று பெண்களின் அதுவும் இஸ்லாமிய பெண்களின் இப்படியான நிகழ்சிகளை நாம் சமூக வலைத்தளங்களில் இடும் போது ஒரு அன்னிய ஆண் அந்த சகோதரியினுடைய வாய், உதடு அசைவுகள், முகத்தின் மாற்றங்கள், மற்றும் மார்பகம் இன்னும் என்ன என்ன வேண்டுமோ எல்லாவற்றையும் பார்த்து ரசித்து விட்டுத்தான் மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் போடுகிறான்.
 
எனவே தயவு செய்து எங்கள் பெண்குலத்தை முகநூலில் படமாகவோ, வீடியோவாகவோ போடாதீர்கள். யாராவது போட்டால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள் முக்கியமாக இஸ்லாமிய விடயங்களுடன் முஸ்லிம் பெண்களை உள்வாங்காதீர்கள். இதனால் நாம் பெண்கள் முகம் மூடவேண்டும் என்று சொல்லவரவில்லை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக பெண்கள் முகம் மூடவேண்டும் என்று எங்கயுமே சொல்லி இல்லை.  எவ்வளவு சின்ன சின்ன விசயங்களை வலியுறுத்தி சொல்லிவிட்டு போன நபி (ஸல்) ஏன் பெண்கள் முகம் மூடும் விசயத்தை அப்படியே விட்டுச் சென்றார்..? நபியவர்களது மனைவிமார்கள் முகம் முடினர்கள் சில சஹாபி பெண்களூம் மூடினார்கள் ஆனால் கட்டளை பிறப்பிக்க வில்லை.
 
நபி (ஸல்) எவ்வளவோ விடயங்களை அவர் மட்டும் செய்தார் ஸலாம் கொடுக்காமல் 7 ரக்கஅத் தொழுதார்கள். அனால் எங்களுக்கு அப்படி செய்ய சொல்ல வில்லை. கூடுதலான நாட்கள் எதுவுமே சாப்பிடாமல் தொடர்ந்து நோன்பு வைத்தார்கள் ஆனால் எங்களுக்கு சொல்லவில்லை. இப்படி எத்தனையோ விடயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். கரண்டைக்கால் விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக இருந்தார். ஏன் பெண்கள் விடயத்தில் தெளிவாக முகம் மூடவேண்டும் என்று சொல்ல வில்லை இதனை மௌலவிமார்களிடமே விட்டுவிடுவோம் இருந்தாலும் இது எனது கருத்தே..
 
அல்லாஹ் நபியவர்களின் மனைவியர்களுக்கு இறக்கிய சட்டத்தை மற்ற மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சட்டம் ஆக்காத வரை நமக்கு சட்டமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று நான் நம்புகின்றேன்.
அதற்காக என்னை முகம் மூட வேண்டும் என்று சொல்லும் கூட்டத்தில் சேர்த்து விடாதீர்கள்.  எனவே மேற் சொன்ன விடயத்தில் போஸ்ட்களை இடும் ஆண் மற்றும் பெண்களும் அதற்கு பதிலளிக்க முற்படும் ஆண்களும் கவனமாக இருப்பதோடு மட்டுமல்லாது தாங்களது பார்வைகளையும் தாழ்த்திக் கொள்ள முயற்சி செய்வோமாக. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 
 
இதையும் பார்க்க:-
                * இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும் 
                * சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள் 
                * இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ... 
                * சுன்னத் (கத்னா) செய்வதன் நன்மைகள் மருத்துவ ஆய்வுகள...
                * மஸ்ஜிதினுள் நுழையும் முன் கடைபிடிக்க வேண்டியவை
                * வெளியூரில் இறந்த ஒருவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம...
 

Post a Comment

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget