தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.
இது எமது உடலிலுள்ள ஒரு கொழுப்புப் பொருள். இது உடலுக்குத் தேவையான பொருளும் கூட. உதாரணமாக, பால் சார்ந்த ஹோர்மோன்களான ஈஸ்ரோஐன், புரொஜெஸ்டரோன் ஆகியவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. கலங்களின் பகுதியாகவும் உள்ளது.
ஆனால் இரத்தத்தில் வழமைக்கு மேலான இதன் அதிகரிப்பு நோய்களுக்கு காரணமாகிறது. கொலஸ்டரோல் தவிர்ந்த வேறு கொழுப்புக்களும் எமது உடலில் உள்ளன. கொலஸ்டரோல், ரைகிளிசரைட் (TG), பொஸ்போ லிப்பிட்ஸ் ஆகிய அனைத்துமே கொழுப்புக்கள் (Lipids) எனப்படுகின்றன.
கொழுப்புக்கள் நீரில் கரைய முடியாதவை. எனவே அவற்றை உடலின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு எடுத்துச் செல்ல குருதியால் முடியாது.
இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவை லைப்போ புரதம் (Lipoproteins) எனப்படுகின்றன.
இதனால் இவை ஒரு வகைப்புரதத்துடன் இணைவதால் நீரில் கரையக் கூடியதாகின்றன. இவை லைப்போ புரதம் (Lipoproteins) எனப்படுகின்றன.
லைப்போபுரதத்தில் இருவகைகள் உள்ளன. அவையாவன,
உயர் அடர்த்தி லைப்போபுரதம் (HDL),
குறை அடர்த்தி லைப்போபுரதம்-(LDL).
உயர் அடர்த்தி லைப்போபுரதம் (HDL),
குறை அடர்த்தி லைப்போபுரதம்-(LDL).
எல்லாக் கொழுப்புகளுமே ஆபத்தனவையல்ல. HDL நல்ல கொலஸ்டரோல் எனப்படுகிறது. இது இரத்த நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைப் பற்றிப் பேசும் போது நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு அனைத்துமே முக்கியமானவைதான்.
எனவேதான் இப்பொழுது இரத்தத்தில் மாறுபட்ட கொழுப்பு அளவுகள் (Dyslipidaemia) என்றே பேசுகிறார்கள். இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் பற்றி (Hyperchoesteraemia) பற்றியும் இரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு (Hyperlipidaemia) அல்லது மட்டும் பேசுவது குறைவு என்றே சொல்லலாம்.
இரத்தத்தில் கொழுப்பு அதிகரித்திருப்பதை அறிவது எப்படி ?
இது அறிகுறிகளற்ற நோய். எனினும் சிலருக்கு உடலில் ஏற்படும் சில குணங்குறிகள் மூலம் வைத்தியர்கள் அவர்களது இரத்தத்தில்
கொழுப்பு அதிகரித்திருப்பதை உணரக்கூடும்.
இது அறிகுறிகளற்ற நோய். எனினும் சிலருக்கு உடலில் ஏற்படும் சில குணங்குறிகள் மூலம் வைத்தியர்கள் அவர்களது இரத்தத்தில்
கொழுப்பு அதிகரித்திருப்பதை உணரக்கூடும்.
வெளிர் மஞ்சள் நிறமான தடிப்புகள் (Lipid Deposits) சிலரின் தோலில் காணப்படக் கூடும். கண்களின் கீழ், முழங்கை, முழங்கால், தசைநார்கள் (Tendon) போன்ற இடங்களில் இத்தகைய மஞ்சள் நிறமான தோற்தடிப்புகள் காணப்படலாம்.
சிலருக்கு ஈரல், மண்ணீரல் ஆகியன சற்று பருத்திருக்கக் கூடும்.
வேறு சிலருக்கு கருவிழியைச் சுற்றி வெண்ணிற வளையம் (Arcus Senilis) காணப்படலாம்.
ஆனால் பெரும்பாலனவர்களுக்கு இத்தகைய அறிகள் எதுவுமே இருப்பதில்லை.
எனவே இரத்தப் பரிசோதனை செய்வதின் மூலமே கண்டுபிடிக்கலாம்.
14 மணி நேரம் வெறும் வயிற்றில் இருந்து (Fasting) இப்பரிசோதனையை செய்வது அவசியம்.
இரு வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
1. Serum Cholesterol,
2. Lipid Profile
2. Lipid Profile
இதில் Lipid Profile என்பதே ஒருவருடைய குருதியல் உள்ள வெவ்வேறு கொழுப்புகளின் (HDL, LDL, TG) அளவுகளை தனித்தனியாகக் காட்டும் பரிசோதனையாகும்.
செய்யப்பட்ட ஒரு பரிசோதனை தெளிவான முடிவைக் கொடுக்காவிட்டால் 1 முதல் 8 வாரங்களில் மீண்டும் பரிசோதனை செய்து அவற்றின் சராசரியை முடிவாகக் கொள்ளலாம்.
உங்களுக்கு இரத்தப் பரிசோதனை அவசியமா?
40 வயதிற்கு மேறபட்ட எவரும் இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.
40 வயதிற்கு மேறபட்ட எவரும் இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.
ஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ளவர்களுக்கு இது மிக அவசியமாகும். பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளோர்
- நீரிழிவு நோயாளிகள்
- சிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்
- இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர்
- தமது இரத்த உறவுகளில் இருதய நாடி, அல்லது மூளை நாடி (Coranary artery diseases) நோயுள்ளோர்
- கொழுத்த உடல் வாகுடையோர் (BMI >29)
- புகைபிடிப்போர்
இரத்தத்தில் கொழுப்பு எந்தளவில் இருக்க வேண்டும்?
விருபத்தக்க அளவு-எல்லைக்கோட்டுஅளவு-நோயுற்ற அளவு
ரைகிளிசரைட் <150 – 150 350 – >350
விருபத்தக்க அளவு-எல்லைக்கோட்டுஅளவு-நோயுற்ற அளவு
ரைகிளிசரைட் <150 – 150 350 – >350
உயர் அடர்த்தி
லைப்போபுரதம் HDL >35 <35
லைப்போபுரதம் HDL >35 <35
குறை அடர்த்தி
லைப்போ புரதம்
நோயுற்றோரில் LDL <100 >100
லைப்போ புரதம்
நோயுற்றோரில் LDL <100 >100
குறை அடர்த்தி லைப்போ புரதம் சாதாரணமானவர்களில்
LDL <130 130-159 >160
LDL/HDL விகிதம் <4 >4
LDL <130 130-159 >160
LDL/HDL விகிதம் <4 >4
கொலஸ்டரோல்
Total Cholesterol
180-200 200-239 >240
Total Cholesterol
180-200 200-239 >240
LDL 130 க்குக் குறைவாகவும், HDL 40 க்கு அதிகமாகவும், TG 150 க்குக் குறைவாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக வைத்தியம் செய்ய வேண்டியதில்லை.
ஜந்து வருடங்களின் பின் இரத்தப் பரிசோதனை செய்தால் போதும்.
LDL 131 – 160 ஆகவும், HDL 31 – 40 ஆகவும், TG 151 250 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை
மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும்.
ஆயினும் இவர்களின் வயது 40 க்கு அதிகமாக இருந்தால் அல்லது அடுத்த முன்று பரிசேதனைகளின் பின்பும் இரத்த கொழுப்புகளில் குறைவு ஏற்படாவிட்டால், அல்லது இருதய நோயை உண்டுபண்ணும் காரணிகளில் இரண்டு இருந்தால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
LDL 161 – 190 ஆகவும், HDL 25 – 30 ஆகவும், TG 251 350 ஆகவும் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை
மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். ஆயினும் இவர்களின் வயது 35 க்கு அதிகமாக இருந்து உணவுக் கட்டுப்பாடுகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் பலனைக் கொடுக்காவிட்டால் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
LDL 190 க்கு அதிகமாகவும், HDL 25 க்கு குறைவாகவும், TG 350 க்கு அதிகமாகவும் உள்ளவர்களுக்கு உடனடியாக மருந்துகள்
ஆரம்பிப்பதுடன் உணவுக் கட்டுப்பாடுகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் கடைப் பிடிக்க வேண்டும்.
இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்புக்குக் காரணங்கள்.
உங்களது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்திருப்பதற்கு அல்லது சாதாரண அளவில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இரத்த கொலஸ்டரோலில் பல பிரிவுகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றில் முக்கியமானது LDL கொலஸ்டரோலாகும். LDL கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான காரணிகளை நாம் அறிந்திருப்பது அவசியம்.
உங்களது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்திருப்பதற்கு அல்லது சாதாரண அளவில் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இரத்த கொலஸ்டரோலில் பல பிரிவுகள் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இவற்றில் முக்கியமானது LDL கொலஸ்டரோலாகும். LDL கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான காரணிகளை நாம் அறிந்திருப்பது அவசியம்.
அவற்றை அறிந்திருப்பதன் மூலம் எம்மால் மாற்றக் கூடிய காரணிகளை கட்டுப்படுத்தி, அதன் மூலம் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதையும் அதன் காரணமாக இருதய நோய்கள் வருவதற்குமான வாய்ப்புகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.
சில குடும்பங்களில் அக்குடும்ப அங்கத்தவர்கள் பலரும் கொலஸ்டரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
இதற்குக் காரணம் அவர்களது பொதுவான உணவுப் பழக்கங்களாக இருக்கக் கூடும். ஆயினும் கொலஸ்டரோல் அதிகரிப்பு என்பது பரம்பரை குணாதிசியமாக இருப்பதை பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதேபோல வேறு சில குடும்பங்களில் இயற்கையாகவே கொலஸ்டரோல் அளவு குறைவாக இருக்கிறது.
எனவே உங்கள் குடும்பத்தில் வேறு சிலருக்கு ஏற்கனவே கொலஸ்டரோல் அதிகமாயிருந்தால் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
உங்கள் குருதிக் கொலஸ்டரோலை அடிக்கடி பரிசோதித்துப் பார்ப்பதுடன் உணவுகளிலும் அவதானமாக இருக்க வேண்டும். அதீத எடையும் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய காரணியாகும். அதேபோல இது இருதயநோய்களுக்கும் காரணமாகிறது. புகைத்தல் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதுடன், இருதய நோய்கள் நீரிழிவு போன்ற வேறு பல நோய்களுக்கும் காரணமாகிறது. அதீத மதுப் பாவனையும் இரத்தத்தில் உள்ள கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கிறது.
அதாவது அருந்தும் மதுவில் எதனோலின் (Ethanol) அளவு 30 மி.லி ருக்கு அதிகமாயின் அது இரத்தக் கொலஸ்டரோல் அளவை அதிகரிக்கும்.
சமனற்ற உணவும் (Imbalanced food) இரத்தக் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகும். மாறாக சமச்சீரான உணவு (Balanced food) கொலஸ்டரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். முக்கியமாக அளவிற்கு அதிகமாக உண்பதும், அதிக கலோரிப் பெறுமானம் கொண்ட மாப் பொருட்களையும், கொழுப்புப் பொருட்களையும் உணவில் அதிகளவில் சேர்ப்பதும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாகின்றன.
உணவில் அதிகளவு கொழுப்புப் பொருட்களை உண்பதும் இரத்தக் கொலஸ்டரோவை அதிகரிக்கிறது. முக்கியமாக trans fatty acids அதிகமுள்ள உணவுகளை உண்பது காரணமாகிறது. French fries என்று சொல்லப்படுகிற உருளைக்கிழங்குப் பொரியல் அத்தகையது. மார்ஐரினும் அது கலந்த உணவுகளும், பேக்கரித் தயாரிப்பு உணவுகளும், பொரித்த உணவுகளும் கொலஸ்டரோலை அதிகரிக்கும். உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையும் கொலஸ்டரோல் அளவை அதிகரிப்பதற்கான இன்னுமொரு காரணமாகும்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்புடன் தொடர்புடைய இன்னுமொரு
காரணியாகும். அதேபோல இருதயநோய்களுக்கும் காரணமாகிறது. மனஅமைதியின்மை, உணர்ச்சிப் பாதிப்புகள் ஆகியனவும் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆண்கள் பெண்களைவிட கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் பெண்களும் ஆண்களைப் போன்ற பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணியாகும். அதேபோல இருதயநோய்களுக்கும் காரணமாகிறது. மனஅமைதியின்மை, உணர்ச்சிப் பாதிப்புகள் ஆகியனவும் இரத்தத்தில் கொலஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆண்கள் பெண்களைவிட கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகம். மாதவிடாய் நின்ற பின் பெண்களும் ஆண்களைப் போன்ற பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக பொருளாதார நிலைகளுக்கும் இரத்தக் கொலஸ்டரோல் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். சமூக பொருளாதார நிலையின் உயர் நிலையிலும், அடிமட்டத்திலும் இருப்பவர்கள் கொலஸ்டரோல் பிரச்சினைக்கு ஏனையவர்களைவிட அதிகம்.
தனிமை வாழ்க்கைக்கும் கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக இன்னுமொரு அறிக்கை கூறுகிறது. திருமணம் செய்யாதவர்களும், தமது வாழ்க்கைத் துணையை இழந்தவர்களும், விவாகரத்துப் பெற்றவர்களும், திருமணவாழ்வில் சந்தோஷ‘மும் திருப்தியும் பெறாதவர்களும் கொலஸ்டரோல் பாதிப்பிற்கு ஆளாவது அதிகமாக இருக்கிறது.
Post a Comment
Masha allah usefull messages