2016


இறந்துவிட்ட இறைநேசர்களால் நமது தேவைகளை நிறைவேற்றவோ, சிரமங்களை நீக்கவோ முடியும் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோரி பிரார்த்திப்பது, பாதுகாப்புத் தேடுவது, அவர்களைப் பரிந்துரைக்கச் சொல்வது, அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்பது … போன்ற செயல்கள் அனைத்தும் “ஷிர்க் ஆகும். ஏனென்றால், இவ்வகையான செயல்கள் அனைத்தும் மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளாகக் கருதப்படுகின்றன. வணக்க வழிபாடுகளை அல்லாஹ் தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென அல்குர்ஆனின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகின்றான்.
 
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். (17:23)

சூஃபிசம் என்ற சொல் சஃபா (தூய்மை) என்ற மூலச்சொல்லிலிருந்து வந்திருக்கலாம் ஏனென்றால் இந்த சூஃபிச கொள்கை என்பது ஒரு மர்மமான, பழமையான இஹ்வானுஸ்ஸஃபா என்ற இயக்கத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை தீர்கமாக அறிய முடிகிறது. இஹ்வானுஸ்ஸஃபா என்ற இயக்கத்தை உருவாக்கியவர் யார் என்பதையும், எப்பொழுது உருவாக்கப்பட்டது என்பதையும் அறியமுடியவில்லை பல வரலாற்று ஆய்வாளர்கள் முயற்சி செய்து இதில் தோல்வியே அடைந்துள்ளனர்.

இந்த கொள்கையின் அடிப்படை என்னவென்றால் உள்ளத்தூய்மை. அதாவது வெளிப்படையான வணக்கங்களின் மூலம் தூய்மையடைவதை விட உள்ளத்தை தூய்மை படுத்தி, அதன் மூலம் உள்ளத்தில் இருக்கும் மனக்கண்ணை திறந்தால் மட்டுமே மறைவான ஞானங்கள் வெளிப்பட்டு, அதை விளங்க முடியும் என்பதே.

நவம்பர் மாத ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பாவின் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான வியாபாரம் களைகட்டிவிடும். டிசம்பர் 25 நெருங்க நெருங்க மக்கள் நேரம் இல்லாமல் ஒரே சுறுசுறுப்பாக ஓடித்திரிவார்கள். அடிக்கடி காதில் விழும் செய்தி பரிசு பொருட்கள் (presents) வாங்கியாகிவிட்டதோ, என்ன பரிசு , அவை பக்குவமாக சுற்றப்பட்டு 24ம் திகதி வரை ஒழித்து வைக்கப் பட்டுள்ளதோ; இவை போன்றவைகளே. ஏனெனில் இன்று உலகில் கொண்டாடப்படும் சமய பெருநாட்களில் மிக அதிகமாக பரிசு பொருட்கள் கைமாறலுடன் கொண்டாடப்படும் பெருநாள் இந்த கிறிஸ்மஸ்தான் என்றால் அது மிகையாகாது. கிறிஸ்தவர் அல்லாதவர் கூட இத்தினத்தை கொண்டாடுவதால் இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

 هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ   
    அவன்தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

kPyhJk; eufj;jpw;F mioj;Jr; nry;Yk; Rg;`hd kt;ypJk;! md;gpd; <khdpa cuTfNs! ugpAy; mt;ty; khjk; te;Jtpl;lhy; vkJ}upd; rpy gs;spthay;fspy; jiyg;gpiwapy; ,Ue;J gpiw 12 tiuf;Fk; Rg;`hd kt;ypJ ftpijfs; ghlg;gl;L> 12 Mk; ehs; vkJ capupYk; Nkyhd egp (]y;) mtu;fSf;F gpwe;j ehs; tpoh nfhz;lhlg;gLtjid fhyhfhykhf ehk; re;jpj;J tUfpd;Nwhk;.

,g;gb egp(]y;) mtu;fsJ gpwe;j ehisf; nfhz;lhLkhW ,];yhk; ekf;F topfhl;Lfpd;wjh  vd vkJ mbg;gil %yhjhuq;fshd Fu;MidAk;> ]`P`hd `jP];fisAk; Njbg;ghu;jhy; vq;FNk mg;gb xU Mjhuj;jpid fhzTk; KbahJ fhl;lTk; KbahJ. mJkl;Lkd;wp ek;ik tpl egpfshiu capiu tplTk; kpff; fLikahf Nerpj;jtu;fs; cj;jk ]`hgh ngUkf;fs;. mtu;fspy; ahUk; egpfshUf;F gpwe;j ehs; nfhz;lhlTkpy;iy> ,izitg;ig Nghjpf;Fk; Rg;`hd kt;ypJ Nghd;w ftpfisg; ghlTkpy;iy. mg;gbapUf;f ,jid vg;gb khu;fj;jpy; Xu; mq;fkhf ek;khy; Vw;Wf;nfhs;s KbAk; rpe;jpj;Jg;ghUq;fs;?

மீலாதுன் நபி (நபி பிறந்த தினம்) எனும் கொண்டாட்டடம் இஸ்லாத்தில் ஷீஆக்களாலேயே திட்டமிட்டு புகுத்தப்பட்டது என்பதற்கு சான்றாக இஸ்லாமிய அறிஞர்களும்  வரலாற்று ஆசிரியர்களும் ஒரு வரலாற்றுப்பின்னணியை சொல்கிறார்கள்:

அதாவது எகிப்திலே நான்காம் நூற்றாண்டு நடுப்பகுதியில் ஒரு ஆட்சி நிலவுகிறது. எகிப்தையும் அதை அண்டிய  பகுதிகளையும் ஒரு குழு ஆட்சி செய்கிறது,  நபிகளாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்கள் நாம் அலி (ரழி)யின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்றும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர் இவர்களுக்கு பாத்திமியர்கள் என்று பெயர் வழங்கப்பட்டது.

இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது. ‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை. இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.
 
தம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள். வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம் தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.

பிறந்த தின விழாவெடுப்பதா….? அல்லது துக்கம் அனுஷ்டிப்பதா….?   
மனிதப் புனிதர் மாநபி(ஸல்) அவர்கள் உதயமாகிய மாதம்! மரித்ததும் அதே மாதத்தில் பிறந்த அதே தினத்தில்…!
 
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. இன்றைய முஸ்லிம்கள் இந்த தினத்தை இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் உதயதினமாக -பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இறைத் தூதர்(ஸல்) அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினத்தில்தான் என்றால் அந்தத்-தினத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடுவதா…? அல்லது அந்தத் தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பதா….?

என் கொள்கை சஹோதர ..!! சஹோதிரிகளே.. !!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !! இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே  
 
இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். தளர்ந்து விடாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள் .அல்குர்ஆன்:3:139
 
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2-155)

கேள்வி:- குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்..? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா..?

விடை:-  பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வாள்.

அதே போலவே இரத்தம் துண்டிக்கப்பட்டதும் மாதவிலக்கிலிருந்து விடுபட்ட ஒரு பெண்ணைப் போன்று தன்னை சுத்தமாக்கி கடமையான குளிப்பைக் குளித்துக் கொள்வாள்.  பிரசவ விடயத்தில் அதிகபட்சமாக அல்லது குறைந்த பட்சமாக இத்தனை நாட்கள் தான் ஒரு பெண் தன் மீது தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து கொள்வாள் என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் விபரித்ததாக ஆதாரபூர்வமான எந்தவொரு செய்தியையும் நாம் காணவில்லை.

பல்வேறு சமூகத்தவர்கள் வாழும்  ஒரு நாட்டில்   வாழ்ந்து கொண்டிருக்கிருக்கும் எமக்கு எம் மார்க்கத்தை நாம் சுதந்திரமாக பின்பற்றும் உரிமையும்   இங்கே  வழங்கப் பட்டுள்ளது          அல்ஹம்துலில்லாஹ் .. என்றாலும் சில சந்தர்ப்பங்களில் எமது உரிமை முடக்கப்படும் போது அது தொடர்பாக எதிர்த்துக் கேட்கும் கருத்துச் சுதந்திரமும் எமக்கு தரப் பட்டுள்ளது .. ஆயினும் உரிமைகளை கேட்கும் விதம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற விவேகமே இங்கு முக்கியமாக  கவனிக்கப் பட  வேண்டும் .
சமுதாயப் பிரச்சினை ஒன்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் போது வேகத்துடன் விவேகம் இணையவில்லையெனில் அது குரல் கொடுக்கும் தனிநபரை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் .

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது. 
 
அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன்னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது. அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டது.

நபி صلى الله عليه وسلم அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைத்து தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுமைத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

நபி صلى الله عليه وسلم அவர்கள் தஷஹ்ஹுதில் அமரும்போது தமது வலது கையைத் தமது வலது தொடைமீதும், இடது கையைத் தமது இடது தொடைமீதும் வைத்து ஆட்காட்டி விரலால் இஷாராச் செய்வார்கள். அவர்களின் பார்வை அவர்களின் இஷாராவைக் கடந்து செல்லாது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, தாரமி இருப்பில் ஓதவேண்டியவை


திருமணமான ஒரு முஸ்லிம் பெண் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ குறிப்பிட்ட நாட்களுக்கு சில காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரபு மொழி வழக்கில் இதை 'இத்தா' என்று குறிப்பிடுவர். காத்திருத்தல் என்ற பொருளில் இது பயன்படுத்தப் படுகிறது.    
  
1) கணவனால் விவாகரத்து செய்யப்பட்டப் பெண் விவாகரத்து செய்த கணவனுக்காக மூன்று மாதவிலக்கிலிருந்து தூய்மை அடையும்வரை காத்திருக்க வேண்டும். இதுப்பற்றிய விரிவான விளக்கம் நமது இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள 'தலாக் சட்டமும் தவறான புரிதல்களும்' என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

                      தூயவழி.காம்  
தஃவா என்பது இஸ்லாத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு நபி (ஸல்) அவர்களது வாழ்வில் அழகிய வழிகாட்டல் உள்ளது. அவரவர் அவரவரது விருப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தஃவா செய்ய முடியாது. உஸ்மான் (ரழி ) அவர்களைக் கொலை செய்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக வாள் ஏந்தியவர்களும் தஃவாவின் பெயரில் ‘தீமையைத் தடுத்தல்” என்ற போர்வையில்தான் இந்த அராஜகங்களை அரங்கேற்றினர்.
தஃவா என்பது சீர்திருத்தத்திற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. சில தஃவா அணுகுமுறைகளால் தீமைகள் அழிவதற்குப் பதிலாக வளரவும், நன்மைகள் குறையவும் ஆரம்பித்துவிடுகின்றன. எனவே, அழைப்புப் பணியில் ஈடுபடும் போது தூர நோக்கும், நிதானமான அணுகுமுறைகளும் அவசியமாகும். இந்த அடிப்படையில் தவறுகளைத் திருத்த முற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்திற் கொள்ள வேண்டிய சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு மனிதனை நல்லவர், இறை நேசர், மறுமை வெற்றிக்குத் தகுதியானவர், அல்லது கெட்டவர், நரகத்துக் குறியவர் என்று தீர்மானிக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்குறியதே.

பொதுவாகவே அல்லாஹ்வை ஏற்றிருக்கும் அனைவரும் அல்லாஹ்வின் நேசர்களே. ஆனால் இன்று குறிப்பிட்ட சிலர் அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்கள் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கொள்ளும் செயலாகும்.

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(63) அவர்கள் எத்தகையோர் என்றால், ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 10:62)

கேள்வி :-  வீட்டில் தொழும் போது பெண்கள் தங்கள் இரு பாதங்களையும் கட்டாயம் மறைக்க வேண்டுமா?

விடை:- பொதுவாக அன்னிய ஆண்களுக்கு முன் பெண்கள் தனது இரு பாதங்களும் வெளியில் தெரியாமல் மறைத்துக் கொள்வது கடமையாகும்.இதேவேளை ஓர் பெண் மஹ்ரமான ஆண்களுக்கு முன் தொழும் போது அல்லது வீட்டில் தனிமையில் தொழும் போது கால் பாதங்களை மறைக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையில் நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் ஆதாரமான செய்தி எதுவும் வரவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் தலைகளை திறந்த நிலையில் இருந்தாலும் தொழுகையின் போது தலையை மறைக்க வேண்டும் என வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் அதைப் போன்று கால் பாதங்களையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என எந்தக் கட்டளையும் இடவில்லை. என்றாலும் உம்முஸலமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஓர் செய்தி பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.

தண்டனையை கண்டு பயப்படுகின்றபோதுதான் ஒரு மனிதன் குற்றச்செயல்களில ஈடுபதை தவிர்ப்பதற்கு முயற்சிப்பான். மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாவிட்டால் ஐநூறு ரூபா அபராதம் விதிக்கப்படுவது ஒரு ஏழைத்தொழிலாளிக்கு தாங்க முடியாத சுமையாகும்.
 
ஆனால் அந்த ஐநூறு ரூபாவை இழக்கவேண்டியேற்படும் என்ற பயத்தினால் மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது தலைகவசம் அணிவதில் கவனமாக இருக்கிறான். இதுவே ஐம்பது ரூபாய் அபராதமாக இருந்தால் யாரவது அந்த சட்டத்தை மதிப்பார்களா என்றால் ஒருபோதும் அது நடக்காது. அதேபோன்றுதான் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்தால் பதிலுக்கு அக்கொலையாளி அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவான் என்ற சட்டம் எந்தவித வளைவு, நெளிவுகளும் இன்றி நாட்டில் அமுல்ப்படுத்தப்படுமானால் எந்தவொரு கொலைச்சம்பவமும் இந்த நாட்டில் நடைபெறாமல் நிச்சயமாக தடுக்கமுடியும்.

இன்று குறிப்பாக சமூக வலைத்தளங்களில் எதற்கு எடுத்துக்கொண்டாலும் அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் என்று கூறும் சமுதாயமாக நமது சமுதாயம் மாறி விட்டது. அதுவும் ஒரு முஸ்லிம் பெண் தொடர்பான ஒரு போஸ்ட் போட்டு விட்டால் போதும் மூட மூடையாக லைக் பண்ணி கலக்கிவிடுவார்கள்.       

பெண்கள் காரி என்ற பெயரில் வயசுக்கு வந்த பெண் மக்களை ஆண்கள் கும்பலுக்கு மத்தியில் மேடை ஏற்றி குர்ஆனை ஓத வைகிறார்கள். ராகம் என்ற பெயரில் தொண்டை கிளியும் அளவுக்கு சத்தம் போட்டு குர்ஆன் ஒதுகிறார்கள். இவ்விடயம் இஸ்லாமிய விடயம் தான் ஆனால் பெண்கள் குரல் உயர்த்தி பேசுவதை இஸ்லாம் அங்கீகரிப்பது இல்லை அது குர்ஆன் ஓதுவதாக இருந்தாலும் சரியே..
இப்படியான வீடியோக்களை முகநூலில் பார்க்கும் போது மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று காமெண்ட் போடுவார்கள்.

 தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

முஸ்லிம்களில் சிலரின் தவறான இந்த நடத்தையால் பெண் இனத்தின் மீது இழைக்கப்பட்டு வந்த கொடுமையை ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முத்தலாக் சட்டத்தையே மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் பெண்ணினத்தின் மீதான கொடுமையாகப் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர்.
ஒருவர் தன் மனைவியைத் தலாக் கூறுகின்றார். இத்தா காலத்திற்குள் அவர்கள் சேர்ந்து வாழ்வதாக இருந்தால் சேர்ந்த வாழலாம். தவணை முடிந்துவிட்டால் அவர்களிடையே கணவன்-மனைவி உறவு முறிந்து விடுகின்றது. அவர்கள் மீண்டும் மீதியுள்ள இரண்டு தலாக்கையும் கூறி முற்றாகப் பிரிய வேண்டும் என்பதற்கில்லை.

இறைநம்பிக்கை கொண்டவர்களே.! நீங்கள் 'ருகூவும்' ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள்.
 
அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.  உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்; இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு அதே பெயர்தான்!) - தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!
எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள், மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்! (திருக்குர்ஆன் 22 : 77,78)

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் உள்ளன.வாந்தி எடுத்தால் உளூ நீங்கி விடும் என்று கூறுவோர் தமது கருத்துக்கு ஆதரவாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
 
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள். உடனே நோன்பை முறித்தார்கள். உளூச் செய்தார்கள்'' என்று அபுத்தர்தா (ரலி) கூறினார். நான் டமாஸ்கஸ் நகரின் பள்ளிவாசலில் ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கூறினேன். அதற்கவர்கள், "அபுத்தர்தா உண்மையே கூறினார். நான் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீரை ஊற்றியவன்'' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: மஃதான் பின் அபீதல்ஹா (ரலி) நூல்கள்: திர்மிதி 80, அபூதாவூத் 2033, அஹ்மத் 26261

கேள்வி -  இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா..? கூடாது என்றால் அதை மாற்று மதச் சகோதரர்களுக்கு விற்கலாமா..? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா..?  -

 பதில் - தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அதை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கூடாது! அது ஹராம்!' எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)  நூல்: புகாரி 2236 

 னி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீஆயிஷம் உள்ளது. அலி (ரழி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி (ரழி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி (ரழி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில், ‘லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா’ பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.

தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.

முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைவித்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜுக்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஹுஸைன் (ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரசாரம் செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.

கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தை விட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம் எங்கும் இல்லை. அது புதிதாக ஷீஆ மதத்தினரால் உருவாக்கப்பட்டது. கர்பலா எனும் இடத்தைத்தான் காண முடிகிறது. மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களிள் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னணி துவங்குகிறது.

நான்காம் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அலி (ரழி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டார்கள். அதில் மிக முக்கியமானது உஸ்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து ஷரீஆத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதாகும். இவ்விடயம் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட இரு குழுக்களாக முஸ்லிம்கள் பிரிகின்றனர். இதன் ஒரு கட்டமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் ஆயிஷா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஜமல் யுத்தம் காணப்படுகிறது.

பின்பு கலீபா அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற “சிப்பீன்” யுத்தம் என்பன கர்பலா நிகழ்வின் வழிகோலிய காரணிகளாக இருந்ததன. இவ்யுத்தம் இடையில் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக அலி (ரழி) அவர்கள் தரப்பு இரண்டாக பிளவு படுகிறது. இந்நிமிடத்தில் இருந்து அலி (ரிழி) அவர்களின் படையிலிருந்து வெளியேரிச் செய்றவர்கள் “காவாரிஜ்” என்றும், சேர்ந்து இருந்தவர்கள் “ஷீஅது அலி” என்றும் இரு பிரிவுகளாக பிரிந்தனர்.

அன்றய காலத்தில் அழைக்கப்பட்ட ஷீஅது அலி என்பதற்கும் இன்றைய ஷீஆ மதத்திற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. கலீபா அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைக்கமைய அலி (ரழி) அவர்களின் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு சார்பாக இருந்தார்களே தவிர இன்றைய நவீன ஷீஆ மதத்திற்கும் அவர்களுக்குமிடையில் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அலி (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட பின்பு ஆட்சி பொறுப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரழி) ஏற்றார்கள். இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தனது பதவியை விட்டுக் கொடுத்து முஆவியா (ரழி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை கையளித்தார்கள். முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சிக்கு பின்னர் அவரது மகன் யசீத் பின் முஆவியா (ரஹ்) ஆடசிப் பீடம் ஏறினார்.

யசீத் பின் முஆவியா (ரஹ்) அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் கர்பலா எனும் இடத்தில் ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். யசீத் (ரஹ்) ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹுஸைன் (ரழி) மற்றும் சிலர் “பைஅத்” செய்ய மறுக்கிறார்கள்.

இந்நிலையில் ஈராக் வாசிகள் தொடர்ந்தேர்ச்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள். தாங்களை அங்கு வரும் படியும் தங்களுக்கு தலைமை பொறுப்பை ஏற்குமாறும் கூறினார்கள். ஈராக் வாசிகளின் உண்மை நிலையை முஸ்லிம் பின் அகீல் என்பவரிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பின் ஈராக்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்கள். இதன் போது மூத்த நபித்தோழர்கள் குறிப்பாக இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்றோர் ஹீஸைன் (ரழி) அவர்களை ஈராக் போவதை தடுக்க முயற்சித்தார்கள். இறுதியில் அனைத்தும் தோல்வியடையவே, பயணம் தொடர்கிறது வழியில் கர்பலா எனும் இடத்தை ஹுஸைன் (ரழி) அடைந்தார்கள். அங்கே யசீதின் படைவசம் சிக்கிட சில நிகழ்வுகளுக்கு பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் ஸஹீதாக்கப்படுகின்றார்கள்.

Picture
ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு நிகழ்ந்த இத்துயர சம்பவத்தை ஞாபகப்படுத்தும் முகமாக ஷீஆக்கள் மேற்கொள்ளும் சடங்குதான் இந்த கர்பலா நிகழ்வு. அதில் நடக்கும் அசிங்கமான சடங்குகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு காணப்படுகின்றன.

கர்பலா தினத்தன்று ஷீஆ மத அறிஞர் மிம்பர் மேடை ஏரி சிறப்புரையும், குத்பாவும் நிகழ்த்துவதுடன் இவ்வுரைகள் ஏனைய குத்பாக்களைப் பேன்றல்லாது உரத்த சப்தத்துடன் கத்துவதுடன், இறம் பாடும் தொணியில் கர்பலா நிகழ்வை கவிதை வடிவில் பாடுவார்கள்.

ஒவ்வெரு ஷீஆ மதத்தினரும் வாலினால், அல்லது கூரிய ஆயுதத்தினால் தனது தலையிலிருந்து இரத்தத்தை ஓட்டி ஹுஸைன் ரழி அவர்களை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள்.


அஹ்லுல் பைத், மற்றும் ஹுஸைன் ரழி அவர்கள் பட்ட கஷ்டத்தை உணரும் விதமாக தீ மிதித்து கொள்வார்கள். இதன் பின் “லைலதுல் மஃசூஸ்” எனும் களியாட்டம் இடம்பெறும். அதாவது ஆண்களும் பெண்களுமாக ஓர் அறையில் ஒன்று சேர்ந்து, விளக்குகள் படிப்படியாக அணைக்கப்பட்டு, ஆடைகள் கழைந்து கூட்டு வழிபாடு நிகழ்த்துதல் என்பது இதன் பொருளாகும்.

Picture
கர்பலா எனும் இடத்திலிருந்து ஹுஸைன் (ரழி) அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு நெற்றி பூமியை முத்தமிட்ட படி நடைப்பவணி மேற்கொள்வார்கள். இவ்வாறு இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கக்கூடிய பல்வேறு அனாச்சாரங்களை கைகொள்வார்கள்.

இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் தனிமனித வழிபாடு எப்படி சாத்தியமாகும். ஷீஆக்களால் உருவாக்கப்பட்ட அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி) யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.


இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்க தினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீபாக்கள் ஆட்சி நடத்தினார்கள். அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.

Picture
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி)
இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை ஷிர்க்குகளை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “(மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.”
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன் (ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்
 
                                                                                                          அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) 
இதையும் பார்க்க:-
 
 

திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் இரு வகையினர் :
1.எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤبدا ):  எத்தருணத்திலும் ஒரு ஆணாகிறவன் இவர்களை திருமணம் செய்வது  கூடாது .
  1. நிகழ் காலத்தில் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤقتا):
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாக ஆண்கள் இவ்வகையின பெண்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது . அந்த சூழலோ அல்லது ஒரு திருமண உறவு முறியும் பட்சத்தில் திருமணம் செய்ய ஹலாலாகுவாள் .

இவ்விருவகையின பெண்களைப்பற்றி விரிவாக பார்ப்போம்
1 .எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் :
1 ).உறவுவின் (காரணமாக ) ஹராமாக்கபட்டவர்கள் (ஏழு நபர்கள் )
(1) தாய்மார்கள் :  ஒரு ஆணை பெற்றேடுத்ததின் வகையில் தாய்வழி உறவும், தந்தை வழி உறவும் ஹராம், அதாவது தாய் , தாயுடைய தாய் (பாட்டி), தந்தையுடைய தாய் (பாட்டி ) என முன் செல்லும் சந்ததி ஹராமாகும் .

 கேள்வி:- திருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணுடன் தொலை பேசியில் பேசலாமா..? பேசுவதை இஸ்லாம் தடுக்கிறதா..?

பதில் :- ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
5141حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ امْرَأَةً أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا فَقَالَ مَا لِي الْيَوْمَ فِي النِّسَاءِ مِنْ حَاجَةٍ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ زَوِّجْنِيهَا قَالَ مَا عِنْدَكَ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ أَعْطِهَا وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ قَالَ مَا عِنْدِي شَيْءٌ قَالَ فَمَا عِنْدَكَ مِنْ
الْقُرْآنِ قَالَ كَذَا وَكَذَا قَالَ فَقَدْ مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ رواه البخاري

விடை:
இஸ்லாம் மனிதர்களுக்கு இடையில் பரஸ்பரத்தையும், ஒழுக்க நெறிகளையும் ஏற்படுத்தும் பல வழிமுறைகளைக் காட்டித்தந்துள்ளது. அதனுள் : இருவர் சந்திக்கும் போது அல்லது வீட்டிற்குள் செல்ல அனுமதி கோரும் போது 'சலாம்' சொல்வது முக்கியமான ஒரு அம்சமாகும். 
ஸலாத்தின்
 
 சிறப்புக்களையும் முக்கியத்துவத்தையும் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நபி (ஸல்) அவர்கள் 'நடந்து செல்பவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூற வேண்டும்' என்பதைப் போன்ற பல ஒழுங்கு முறைகளையும் கற்றுத்தந்துள்ளார்கள்.  எனினும் ஸலாத்தைப் பரப்பும் விடயத்தில் ஆண் பெண் என்ற எந்தவொரு வரையறைகளையும் குறிப்பிட்டதாக நாம் காணவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

குழந்தைகளை தத்தெடுக்கும் விடயம் எம்மத்தியில் பரவலாக நடந்து வருகின்றது. சிலர் தமக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றும், இன்னும் சிலர் ஆண் புதல்வர்களை மாத்திரம் கொண்டிருப்பதால் பெண் குழந்தை தேவையென்றும், வேறு சிலர் ஆண் குழந்தை தேவையென்றும், ஏனையோர் அனாதைகளுக்கு கைகொடுக்கின்றோம் என்றும் பல காரணங்களைக் கருவாகக் கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களிடம் தங்களைப் பெற்றோரென அறிமுகம் செய்து வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தக் குழந்தைகளின் அந்தஸ்தில் வைத்துப் பார்ப்பதை காணமுடிகின்றது. எனவே இது விடயமாக இஸ்லாம் என்ன கூறுகிறது? இதன் சாதக பாதகங்கள் யாவை? எனப் பார்ப்போமானால்,

காதல் என்றால் என்ன.? இஸ்லாம் இதற்கு அனுமதிக்கிறதா? காதல் திருமணம்தவறா.? இந்த கேள்விகள் இளம் வயதை அடியெடுத்து வைக்கும் அனைத்து யுவன்,யுவதிகள் அனைவருக்கும். எழுகிற சாதாரண விடயமே!!! முதலில் இது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், சினிமா என்ற விடயம் இல்லாவிட்டால் காதல் என்ற வார்த்தையை நாம் இப்படி அறிந்திருக்கமாட்டோம். காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் பார்த்தல், பேசுதல், இவற்றினால் காதல் உருவாகிறது. அது புனிதமான உறவு, அதனை குடும்பம் எதிர்கிறது, அதனை தாண்டி அவர்கள் சேர்வார்கள்.


இதை தான் பலகாலமாக சினிமா இந்த இளைய வட்டத்தின் பாலியல் உணர்வை தூண்டிவிட்டு
காசு பார்கிறார்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. சிறுபிராயத்தில் இருந்தே சிறுவர்,சிறுமியர், இந்த சினிமாக்களை காண்பதால், அதில் வருவதை போல் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போதே தங்களுக்கான துணையை தேடுகின்றனர். சினிமாவை பார்த்துபார்த்து வளர்ந்த யுவன்கள்” நீதான் என் உயிர் நீ இல்லாமல் என்னால் உயிரோடு இருக்க முடியாது” என சூனிய வார்த்தைகளை பேச இந்தபெண்ணும் உணர்ச்சிவசபட்டு அவனையே, தன்னுடைய துணையென முடிவுசெய்கின்றனர்.

இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான பல சட்டங்களை பிரித்து வழி காட்டியுள்ளது. அந்தந்த சட்டங்களில் இரண்டு சாராரும் தெளிவாக இருக்க வேண்டும்.
ஆண்கள் பெண்கள் இரண்டரக் கலக்கும் விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஏனைய நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.? என்பதை இஸ்லாம் நமக்கு அழகாக வழி காட்டியுள்ளது.
நபியவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் ஒன்று சேரும் கட்டங்கள் வந்த போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை முதலில் கவனிப்போம்.

சந்தோசம் என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும். எனவே, சந்தோசத்தை விரும்பாத எவரும் இருக்க முடியாது. மக்கள் சந்தோசத்தை பல அளவுகோல்களில் மட்டிட்டு வைத்திருந்தாலும் அவற்றுள் எது எதார்த்தமான சந்தோசம் என்பதை அவசியம் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவும் வேண்டும்.
ஸகாபாக்களைப் பொருத்தளவில் அவர்கள் இது விடயத்தில் நல்ல முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழ்ந்தார்கள். அதனால் தான் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடத்தில் வந்து: “அல்லாஹ்வின் தூதரோ! மறுமைநாளில் உங்களுடைய சிபார்சைக் கொண்டு மனிதர்களில் மிகவும் மகிழ்ச்சிக்குரியவர் யார்?” என்று வினவினார்கள். (புகாரி) அந்த அடிப்படையில் நாமும் உண்மையான மகிழ்ச்சி எது என்பதைப் பற்றித் தெரிய வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளளோம்.

வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்' என்று வரும் ஹதீஸின் விளக்கம் ' அவனுடைய அருள் இறங்குகிறது' என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா?

விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். அதாவது எந்தவொரு ஆதாரமான ஹதீஸிலும் ' அர்ஷிலிருந்து அல்லாஹ் இறங்குகின்றான்' என்ற வார்த்தை வரவில்லை என்றாலும் ' அர்ஷிலிருந்து இறங்குகிறான்' என்ற வார்த்தையை குறிப்பிட்டு இக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும் காரணத்தை வாசகர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டை வால் பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அது பார்வையை பறித்துவிடும். கர்ப்பத்தைக் கலைத்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: முஸ்லிம்-4491, புகாரி-3297)

இப்னு உமர் (ரழி) அவர்களது வீட்டில் பள்ளிவாசலுக்குச் சமீபமாகச் செல்லும் வகையில் ஒரு வாசல் அமைப்பது குறித்து இப்னு உமர் (ரழி) அவர்களிடம் பேசினார் கள். (வாசலமைக்கும் பணி நடைபெற்ற போது) பணியாளர்கள் பாம்பின் சட்டை யொன்றைக் கண்டனர். அப்போது இப்னு உமர் (ரழி) அவர்கள் பாம்பைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு அபூ லுபாபா (ரழி) அவர்கள், வீட்டி லுள்ள (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார் கள் என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: நாபிஉ (ரழி),  நூல்: முஸ்லிம்-4494)

''இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ பெண்கள் இஸ்லாத்திற்காக வாழ்ந்து தங்களது இன்னுயிரை நீக்கிய முன்மாதிரிகள் நிறைந்திருந்தும் ஃபிர்அவ்னின் மனைவி ஏன் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.? அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் ''அத்தஹ்ரீமின்'' எனும் அத்தியாயத்தின் பதினொறாவது வசனத்தில் இப்படிக்கூறுகின்றான.

''நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ் பிர்அவ்னின் மனைவியை உதாரணமாகக் கூறுகின்றான்'' மேற்குறித்த வசனத்தில் அல்லாஹ் ஸஹாபிப் பெண்களையோ நபிமார்களின் மனைவிமார்களையோ முஃமின்களுக்கு முன்மாதிரியாகக் கூறாமல் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஃபிர்அவ்னின் மனைவியை ஏன் முன்மாதிரியாகக் கூறவேண்டுமென்ற வலுவான சந்தேகம் அதிகமான சகோதர சகோதரிகளிடம் இயல்பாகவே எழும்புவதை உணரமுடிகின்றது.    

لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (2:284)
இந்த வசனம் அல்லாஹ்வின் அறிவைப் பற்றிப் பேசுகின்றது. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். இரகசியம், பரகசியம் இரண்டும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றே என்று கூறுகின்றது. அவன் உள்ளங்களில் உள்ளவற்றையும் அறிந்தவன்.

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. மூஸா (அலை) அவர்கள் இறைவனின் அனுமதி கொண்டு நிகழ்த்திக் காட்டி பேரற்பதமான அவர்களுடைய கைத்தடி பாம்பாக மாறி அனைத்து சூனியக்காரர்களின் பொய்பாம்புகளை விழுங்கிய நிகழ்வுக்குப் பின்னர் சூனியக்காரர்கள் அனைவரும் மூஸா (அலை) அவர்கள் மூலம் நிகழ்ததது ‘சூனியம் அல்ல’ என்பதை உணர்ந்து சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிமாக மாறினர். அதனால் கடும் சினமுற்ற ஃபிர்அவ்ன் அவர்களை கடுமையான முறையில் தண்டித்தான்.

 ஆயினும் மூஸா (அலை) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த அற்புதங்களுக்குப் பின்னர் ஃபிர்அவ்ன், மூஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் மூலம் தம்முடைய அரசாட்சிக்கு பேராபத்து ஏற்படும் என அஞ்சினான். அப்போது அவன் அவசரமாக தன்னுடைய அரசவையைக் கூட்டி மூஸா (அலை) அவர்களைக் கொன்றுவிடலாமென்று ஆலோசனைக் கூறினான். அப்போது அவன் அரசவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அதை ஆமோதிக்க, அதுவரை ஈமானை தம் உள்ளத்தில் அறைத்து வைத்திருந்த ஃபிர்அவ்னின் உறவினர்களுள் ஒருவர் மூஸா (அலை) அவர்களைக் கெலை செய்ய வேண்டிய அந்த சதி ஆலோசனையை மறுக்கும் முகமாக துனிச்சலுடன் அவர்களுக்கு அறிவுரை கூறலானார்.

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது, அவனது சாந்தியும் சமாதானமும் அவனுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள், மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக. இன்று நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் திரும்பி இருக்கிறோம் என்றால் அது நம்முடைய அறிவாற்றலினாலோ அல்லது நமது திறமையினாலோ அன்று; மாறாக அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் தன் அடியார்களாகிய நம்மீது கொண்டுள்ள, மிகப் பெரும் கருணையினால் அவனுடைய சத்திய மார்க்கத்தின் வழி காட்டியாக விளங்கும் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் நம்மைத் திருப்பி இருக்கிறான். இதற்காக அவனுடைய அடியார்களாகிய நாம் அவன் நமக்கு புரிந்த பேருபகாரத்திற்காக எவ்வளவு தான் நன்றி செலுத்தினாலும் அது போதுமானதாக இருக்காது.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

தூயவழி இணையத்தளம் நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக! நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.
 
உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

தூயவழி வலையத்தளம்  உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)
வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக்குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர். வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர். நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.

ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையுள்ள அனைத்து தூதர்களையும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர்ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.

தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்அனின் வசனங்கள் எராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் “இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்’ என்றும் “அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்’ என்றும் கூறுகிறது.
 
    அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

தூயவழி வலயத்தளம்:-  ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் ‘அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97 ஆம் அத்தியாயமாக அல் குர்ஆனில் இடம் பெற்றுள்ள இவ்வசனங்கள் ‘லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் இந்த அத்தியாயத்தின் சாரம்சமாகும்.

தூயவழி இணையதளம் :- இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் சந்திரன் தோன்றுவதை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும். ஏனைய மாதங்களைப் போன்று இஸ்லாத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட நாட்கள் இல்லை. இதனால் தான் ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை பார்க்க வேண்டிய தேவைப்பாடு முஸ்லிம்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது
 
இவ்வாறாக தலைப்பிறையிலும் மாதநாட்களை கணக்கிடுவதிலும் நபியவர்களின் மரணத்திற்குப்பின்னர் இன்றுவரை அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் தொண்டுதொட்டு நிலவி வருகின்றது.

தூயவழி வலயத்தளம்:-  ரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட, அதிகமான மிம்பர்களில் அடிக்கடி கூறப்படக்கூடிய ஒரு பிரபலமான பலஹீனமான ஹதீஸை பார்ப்போம்.

இந்த ஹதீஸ் ''ஸல்மான் அல் பாரிஸ் (ரழி)'' அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டு இமாம் ''இப்னு ஹூஸைமா''வின் ''ஸஹீஹ்'' என்ற கிரந்தத்திலும், இமாம் ''முஹாமிலியின்'' அமாலி எனும் கிரந்தத்திலும் பதியப்பட்டுள்ளது. அது பின்வருமாறு.

 
''எங்களுக்கு ஸஃபானின் இறுதி நாளில் ரஸூலுள்ளாஹ் (ஸல்) உரை நிகழ்த்தினார்கள் ''அப்போது கூறினார்கள் ஏ மனிதர்களே! மகத்தான மாதம் உங்களுக்கு வந்திருக்கிறது. அந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அதில் நோன்பு பிடிப்பதை கடமையாகவும், அதில் இரவில் வணங்குவதை உபரியானதாகவும் ஆக்கியிருக்கிறான்.

நபி ஸல் கூறினார்கள்  “காதுல் பித்ர் ஈச்சம் பழத்தில் இருந்து ஒரு சாவும் கோதுமையில் இருந்து ஒரு சாவும் முஸ்லிம்களில் அடிமை , சுதந்திரவான் ,ஆண், பெண் ,சிறியவர் மற்றும் ,பெரியவர் போன்றோர் மீது கடமையாகும் அதனை தொழுகைக்கு செல்லுமுன் நபி ஸல் அவர்கள்  கொடுக்க ஏவினார்கள்  “ (புகாரி 1506) என ஒரு செய்தி வந்துள்ளது .இதே போன்று இன்னும் பல தகவல்கள் இது தொடர்பாக வந்துள்ளது

இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார்.
‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ (யோவான் 18:40)

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget