2015

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!  2:201

                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சிலர் ளுஹா தொழுகை தொழ வேண்டும் எனக் கூறுகிறார்கள். இதேவேளை நபி (ஸல்) அவர்கள் தொழவில்லை எனவும் கூறுகின்றார்கள். இதன் நிலைப்பாடு என்ன?

                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...! 
மார்க்கம் என்ற போர்வைக்குள் எனும் இப்பகுதியில் சமூகத்தில் சில தவறுகள் மார்க்கம் என்ற போர்வைக்குள் தவறே இல்லாதது போல் ஒளிந்து கொள்ளும் போது அதை திரை நீக்கி வெளிச்சத்துக்கு கொண்டுவருவதே நமது நோக்கமாகும். இங்கு தவறுகள் வெளிச்சத்துக்குவர ஏகத்துவ வாதியோ அல்லது ஏகத்துவ வாதிகளோ காரணமாக இருக்கும் போது அடைப்புக்குறிக்குள் இடப்பட்ட (ஏகத்துவ) எனும் வார்த்தை பாரபட்சமின்றி பயன்பாடாகிறது. இதுதவிர தனிப்பட யாரையும் சாடுவது நமது நோக்கமல்ல. 

                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

                                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும்.
குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன்.

                           தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஹஜ் கடமையை நபியவர்கள் இந்த உம்மத்திற்கு மிக இலகுவாக காட்டித் தந்து செயற்படுத்திக்காட்டினார்கள். மதீனாவின் துல்உலைபா என்னும் இடத்டதிலிருந்து இஹ்ராம் அணிந்து மக்காவில் ஹஜ் கிரிகைகளை முடித்து ஊர் திரும்புவரையுள்ள அனைத்து விடயங்களையும் சொல்லிதந்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஹாஜிகள் ஹஜ்கிரிகைகளை புரிந்து செயற்பட வேண்டும்.

                                               தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
கேள்வி: 
ஒருவர் தனது முதல் உம்ராவை முடித்து விட்டு இரண்டாவது உம்ராவுக்காக ஆயிஷா பள்ளிக்கு சென்று அங்கு இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கிறார்களே. இது பற்றி விரிவான விளக்கம் தரவும். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்…!

                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான்.இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

குடும்பக் கட்டப்பாடு, கருச்சிதைவு பற்றிய இஸ்லாமிய வரையறைகள்மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது.
நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது ‘அஸ்ல்’எனும் செயற்பாடாகும். ‘அஸ்ல்’ என்பது ஆண் தனது இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். ‘அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் ‘அஸ்ல்’ செய்வோராய் இருந்தோம்.’ என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார். (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்)

‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224)
நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!   

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. அவைகளை கட்டாயம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் பெண்ணும், கணவனும்
மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள். அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.

ஸஹாபாக்கள் என்போர் யார்.? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா.? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா.? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது.
சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன்.

                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
இஸ்லாத்தில் ஒரு விடயம் தொடர்பாக அனுமதி  உண்டா அல்லது இல்லையா ? என்பதை நாம்  அறிந்து கொள்ள குர்ஆனில் அல்லது நபி (ஸல்)  அவர்களின் ஹதீஸ்களில் இதற்க்கு  தெளிவான ஆதாரம் உண்டா என்பதை நாம் அலசி ஆராய வேண்டும். அப்படி தெளிவான சட்டங்கள் இருக்குமானால் அதன் சுற்றுப் புறக் காரணங்களை அறிந்து அந்த சட்டத்தை புரிந்து கொள்ள முனைய வேண்டும்இந்த அடிப்படையில்  நபி (ஸல்) அவர்கள் ஒரு விடயத்தை செய்தால் அதை இரண்டு பகுதிகளாக செய்வார்கள். ஓன்று குறிப்பாக ஒரு கடமையை தனித்துவம் கருதி செய்வார்கள். அதாவது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தனித்துவ சட்டமாக அது இருக்கும்.

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

                         தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
1) தொழுகையை சுருக்கித் தொழுவதற்கான தூரம் எவ்வளவு? எத்தனை நாட்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்? 2) இந்த காலத்தில் மக்கள் தினமும் நீண்ட தூரங்களுக்கு பயணிக்கிறார்கள். (உதாரணமாக செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு) தொழுகைகளை சுருக்கியும் இனைத்தும் தொழுவதற்குரிய தூரத்தை விட அதிகம் தூரம் இவர்கள் பயணித்தாலும், தினமும் செல்வதால் இவர்கள் சாதாரணமாக தொழுவது போல் முழு அளவு தொழ வேண்டுமா?

                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. இதுவரை முஸ்லிம்களால் ஆதாரப்பூர்வமானது என அங்கீகரிக்கப்பட்டு வந்த பல சரியான நபிமொழிகளை தமிழகத்தில் ஒரு சாரார் தவறானக் காரணங்களைக் கூறி மறுத்து வருகின்றனர். சகோதரர் பீஜேவும் அவரைச் சார்ந்தவர்களே இந்தத் தவறை செய்து வருகின்றனர். 
இவர்கள் தங்களுடைய ஹதீஸ் மறுப்புக்கொள்கையை நிலைநாட்ட மிகப்பெரும் ஆயுதமாக புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தியை அதிகமாக குறிப்பிடுகின்றனர்.

தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன.? நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும். ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு முஸ்லிம் கூற முடியாது. 

                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நபியவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளாக இஸ்லாத்தை குறைகண் கொண்டு ஆய்வு செய்யக் கூடிய சிலர் ஒரு சில அறிவிப்புக்களை எடுத்துக் காட்டி விமரிசிக்கின்றனர். அந்த அறிவிப்புக்களைப் பற்றியும் அவைகளின் தரம் பற்றியும் இக்கட்டுரை அலசுகிறது. அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அறிவிப்பு புகாரியில் இடம்பெறுகிறது.

صحيح البخاري ـ  6982 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ ح و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُرْوَةُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ …………………..ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ وَفَتَرَ الْوَحْيُ فَتْرَةً حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا بَلَغَنَا حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَيْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الْجِبَالِ فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ وَتَقِرُّ نَفْسُهُ فَيَرْجِعُ فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الْوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ ابْنُ عَبَّاسٍ { فَالِقُ الْإِصْبَاحِ } ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ وَضَوْءُ الْقَمَرِ بِاللَّيْلِ   

                             தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சுபஹ் தொழுகையில் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஓதப்படும் குனூத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது ரமழான் பதினைந்தின் பின்பு அதனை வித்ரு தொழுகையின் இறுதியிலும் இமாம் ஓத, பின் நிற்பவர்கள் ஆமீன் கூறும் வழக்கம் ஷாபி மத்ஹப் பள்ளிகளில் மாத்திரம் இடம் பெறுவதை நாம் அறிவோம். இதன் உண்மை நிலைபற்றி ஹதீஸ்கலை அறிஞர்களின் தீர்ப்பு பற்றிய அவர்களின் மூல நூற்களில் இருந்து இங்கு எடுத்து எழுதுகின்றோம்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும்.

ரமழான் காலங்களில் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். பெண்கள் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது ஆகுமானதா.? என்ற ஐயம் பலருக்கும் எழலாம்.
பொதுவாக ரமழான் காலத்திலும் சரி, ஏனைய காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் சரி பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.
அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். (புஹாரி)

                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா?
இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா என்
ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச்செல்லும் ஒரு  தீய செயலாகும்உலகில் உள்ள அனைத்து மதங்களும்கொள்கை  கோட்பாடுகளும் இதனை குறித்துஎச்சரிக்கின்றனசத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய்பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப்பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.

                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மனிதன் மறதியாளனாக படைக்கப்பட்டுள்ளான். மார்க்க விடயமாக இருக்கலாம். அல்லது உலக விவகாரங்களாக இருக்கலாம். தன்னை அறியாமல் மறந்து விட்டு, பிறகு அதை நினைத்து வருத்தமடைவான். இந்த வரிசையில் அல்லாஹ்வுடைய கடமையான தொழுகையின் போதும் மறதி என்ற அடிப்படையில் தொழுகைக்குள் உள்ள ரக்அத்களோ, அல்லது தஷஹ்ஹதில் உட்காராமல் எழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை நாம் தெளிவு பெற வேண்டும்.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மிஸ்வாக் செய்வது தொடர்பாக வந்துள்ள சில நபிமொழிகள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (لقد أكثرت عليكم في السواك).
رواه البخاري

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.
அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.

                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இலங்கையை நோக்கி அரேபிய மக்கள் வருகை தந்தைமைக்கு மற்றொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. முஸ்லிம்களின் முதல் தந்தையான அல்லது மனித இனத்தின் முதல் தந்தையான ஆதம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த மலை இலங்கையின் மலைநாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை பல்வேறு அரபு யாத்திரிகர்களையும் வணிகர்களையும் இலங்கையை நோக்கி ஈர்த்தது.

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இஸ்லாத்தில் சிறந்தது
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

 மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் :

ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை.


                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

வானமும் பூமியும் விலகாது
கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம்.
 இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது.

                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...! 
மனித வரலாற்றில் சகுனம் தொடர்ந்தேர்ச்சியான ஒரு தொற்று நோயாகவே காணப்படுகின்றது.அதனை வைத்து சிலர் வயிறு வளர்ப்பதையும் நாட்டு நடப்புக்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்திலும் படித்தவர்கள்பாமரர்கள் என வேறுபாடின்றி அனைவரும் சாத்தானிய சகுனத்தின் சாக்கடை வெள்ளத்தில் அடிபட்டுச்செல்பவர்களாகவே இருக்கின்றனர்.   

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கல்முனை கடற்கரைப் பள்ளியில் நடந்தது வெற்றி மாநாடா..? தோல்வி மாநாடா..?



                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

மாட்டின் மீது ஏறி சவாரி செய்ய முடியுமா..?
முஃதஸிலா பாணியில் ஹதீஸ்களை மறுத்துவரும் வழிகேடர்கள் மறுத்து வரும் ஹதீஸ்களில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
بَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً إِذْ رَكِبَهَا فَضَرَبَهَا فَقَالَتْ إِنَّا لَمْ نُخْلَقْ لِهَذَا إِنَّمَا خُلِقْنَا لِلْحَرْثِ فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللهِ بَقَرَةٌ تَكَلَّمُ فَقَالَ فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَا هُمَا ثَمَّ وَبَيْنَمَا رَجُلٌ فِي غَنَمِهِ إِذْ عَدَا الذِّئْبُ فَذَهَبَ مِنْهَا بِشَاةٍ فَطَلَبَ حَتَّى كَأَنَّهُ اسْتَنْقَذَهَا مِنْهُ فَقَالَ لَهُ الذِّئْبُ هَذَا اسْتَنْقَذْتَهَا مِنِّي فَمَنْ لَهَا يَوْمَ السَّبُعِ يَوْمَ لَا رَاعِيَ لَهَا غَيْرِي فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللهِ ذِئْبٌ يَتَكَلَّمُ قَالَ فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَا هُمَا ثَمَّ

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஈத்தம் பழமும், நஞ்சுக் கெதிரான மருந்தும் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-1 இஸ்லாமிய சமூகத்தின் வழிகாட்டல்களனைத்தும் அதி உன்னத நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது நாமனைவரும் அறிந்ததே. இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்கும் அல் குர்ஆன், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பதும், நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய சுன்னாவானது நபியவர்கள் தம் வாழ்நாளில் தம் தோழர்களுக்கு சொல்லியும், செய்தும், அங்கீகரித்தும் காட்டியதுதான் என்பதும் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உண்மையென நிரூபிக்கப்பட்டதாகும். ‘

                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன.
சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர்.

                                  தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் அவர்கள் கலந்து கொள்ளும். இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்  மார்க்க பிரச்சாரக் கூட்டம். 22-04-2015

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
       
இஸ்லாம் சொல்லிற்கு அமைதி (சாந்தி), சமாதானம், கீழ்படிதல் அல்லது கட்டுப்படுதல் அல்லது முழுமையாக அர்ப்பனித்தல் என்ற பொருளாகும்.
ஆயினும் மார்க்கத்தில் ‘இஸ்லாம்’ என்பதற்கு ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக அவரை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப அர்ப்பனித்தல் என்றே சொல்லப்படும்..

                                   தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும். 

ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.

                                தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
உலகில் பல நபர்கள் இறைவனை பல வடிவங்களாக வடித்து வைத்துள்ளனர் மண்ணுலகத்துகு ஒரு கடவுள், விண்ணுலகத்துகு ஒரு கடவுள், கல்வி, செல்வம், ஆக்க, அழிக்க, காக்க என்று கண்ணில் படகூடியதையெல்லாம் கடவுள் என வழிபடுகிறார்கள். சிலர் கடவுளே கிடையாது எல்லாம் இயற்கையின் மூலம் தற்செயலாகவே நடக்கின்றன என்கிறாரகள். இறைவனா.? அவன் ஒருவன் தான், அவன் எத்தேவையும் அற்றவன், அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக இவ்வுலகிலும், மறுவுலகிலும் எதுவும் இல்லை என்கிறது ஒரு பிரிவு.
கடவுள் இருக்கிறானா..? இல்லையா..?

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகாலங்களில் பெண்கள் முகத்தை திறந்தே இருந்தனர் அல்லாஹ் அவர்களுக்கு முகத்தை மூடுவதை சட்டமாக்கவில்லை. பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தவர் உமர் (ரலி) அவர்களாவார்கள்,

'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கம் உடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார்.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
சலாத்துன் நாரியா..? சலாத்துன் நாரியா என்ற சொல்நம் இலங்கை மற்றும் தமிழக முஸ்லீம்களுக்கு ,மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். சலாத்துன் நாரியா என்றால் நரகத்து சலவாத்து என்று பொருளாகும்.அதாவது நரகம் செல்ல விரும்பக் கூடியவர்கள் இந்த சலவாத்தை ஓதினால் எந்த சிரமும் இன்றி நேரிடையாக நரகம் செல்லலாம் ஏன்னென்றால் இந்த நரகத்தின் ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ர வாசகங்கள் தான் .

                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம்.
சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல் அன்றைய காலத்தில் இருந்தது குப் எனப்படும் தோலினாலான, முழுக்காலையும் மறைக்கும் ஒரு வகை பாதணியாகும். அதன் சட்டமே இன்று இருக்கும் சப்பாத்துகளுக்கு வழங்கப்படுகின்றது.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget