March 2014

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

தொழுகையில் ஏற்படும் தவிர்க்கப்பட வேண்டிய பொதுவான தவறுகள்!
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.

1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்: -
இது பெரும்பாவங்களில் ஒன்று என முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளில் மறுமையில் மூன்று பேரிடம் அல்லாஹுத்தாஆலா பேசவோ அல்லது அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவோ அல்லது அவர்களை தூய்மைப் படுத்தவோ மாட்டான். மேலும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு.
1) கணுக் காலுக்கு கீழே ஆடை அணிபவர்
2) பிறரிடம் பலனை எதிர்பார்த்து அன்பளிப்பு செய்பவர்
3) பொய் சத்தியம் செய்து தன் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி (முஸ்லிம்)

                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

கஅபாவை முன்னோக்குதல்
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! ‘இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன் 2:144)

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அல்லாஹ்வை விட்டும் ஷைத்தானின் வழியில் சென்றவர்கள் அவனின் நட்புக்குள்ளாகி சந்தோஷங்களையும் வீண் செயல்களையும் ஏற்படுத்தி தனக்கு வழிப்பட்ட கூட்டத்தாரை அழைத்துக் கொண்டு மனிதர்களிடையே குழப்பங்களை உண்டு பண்ணுவதை நாம் அறிவோம்.ஷைத்தான் என்பவனின் பாதுகாப்பில் மனிதர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அன்மைக்காலமாக அக்கரைப்பற்றில் குடிகாரர்களின் தொல்லை  அதிகரித்துள்ளமை அவதானிக்கக்  கூடியதாக உள்ளது.குறிப்பாக முஸ்லிம் குடிகாரர்களின் என்னிக்கை அதிகரித்துள்ளதோடு அவர்களது அடாவடித்தனமும் அதிகரித்துள்ளது.இஸ்லாம் மதுவினை   ஹராம் என தடை  செய்துள்ளநிலையில் முஸ்லிம்கள் மத்தியில் மதுபாவனை அதிகரித்துள்ளமையானது.

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான். உண்மையான அமைதி மற்றும் நிம்மதி என்பது, நம்மையும், வானம் பூமியையும் மற்றும் இதற்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனை எப்போதும் நினைவு கூறுவதில் தான் உள்ளது.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget