June 2013

                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின். முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், ‘அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது’ என்ற சிறப்பைப் பெறுகிறது.அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்: ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது’. (அல்குர்ஆன்)

2. நோன்புக்குரிய மாதம்.
உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
‘ஆகவே எவர்அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்’. (அல்குர்ஆன் )

3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
‘ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

முஃமின்களின் (இறைநம்பிக்கையாளர்களின்) ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.
மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள்(இறைநம்பிக்கையாளர்களின்) இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை (இறைனம்பிக்கையாளர்களை) அழைக்கிறான்.

4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
‘ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன…’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து (மறுமை) நாள். அல்லாஹ் சொல்கிறான்:‘வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும’; – (அல்குர்ஆன்)
ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

5. அருளின்வாயில்கள் திறக்கப்படும் மாதம்.
‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.

6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.
‘….நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன….’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) மற்றொரு நபிமொழியில்,
‘…நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின்எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி -, இப்னுமாஜா)

7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.
‘….ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

8. நல்லதைத்தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.
‘…நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்…’ –நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி -, இப்னுமாஜா)
மற்றொரு அறிவிப்பில் ‘ஒரு வானவர் அழைக்கிறார்’ என்று வந்துள்ளது.

9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.
‘…நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்…’ – நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி -, இப்னுமாஜா)

10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.‘…ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி -)

11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.
‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில்நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி )

12. தக்வா பயிற்சிக்குரிய மாதம்.
தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.‘ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம்நீங்கள் தக்வா உடையோராகலாம்’. (அல்குர்ஆன் 2:184)

13. அருள் செய்யப்பட்ட மாதம்.
‘அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது….’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

இதையும் பார்க்க:-
                   * இஸ்லாமியப் பெண்கள் எப்படி விவாகரத்து செய்ய முடியும...
                   * இமாம் சமுத்ரா எதற்காக மரணித்தார்?
                   * தொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா?
                   * உண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை
                   * கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!


                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ, அது போல் சத்தியம் செய்தலும் உள்ளது. தன்னை, தான் கூறும் வார்த்தைகளில், செய்யும் செயல்கள் உண்மையானவன் தான் எனக் காட்டிட இறைவன் மீது சத்தியமாக! என் தாயின் மீது சத்தியமாக! என் கண் மீது சத்தியமாக! இந்த வேதத்தின் மீது சத்தியமாக! என் குழந்தை மீது சத்தியமாக! என்று பல்வேறு முறைகளில், பலர் சத்தியம் செய்வர்.

சிலர் குழந்தைகளை தரையில் போட்டு அதை தாண்டி சத்தியம் செய்வர். இது போன்ற சத்தியம் செய்யும் பழக்கத்தில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. குர்ஆன் மீதும், அன்னத்தின் (உணவின்) மீதும், அல்லாஹ் ரசூலுக்கு பொதுவில் என்றும், சத்தியம் செய்தல் இப்படி பலவிதமாக முஸ்லிம்களிடம் உள்ளன. இந்த சத்தியம் செய்யும் விஷயமாக இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் காண்போம்.

சத்தியம் செய்தல் ஆதி காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் உள்ளதாகும். இது மனிதனின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. தான் கூறும் வார்த்தைகளை அம்மக்கள் நம்ப மறுக்கிறார்களே என்பதற்காக, இறுதியில் இதன் மீதாவது சத்தியம் செய்து நம்பச் செய்வோம் என்று கருதி, சத்தியம் செய்வதுண்டு, அல்லது சில விஷயத்தை வலுப்படுத்துவதற்காக சத்தியம் செய்வதுண்டு. சில அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உதாரணமாக ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொண்டான். பொருளைப் பறி கொடுத்தவனிடம் போதிய சான்று இல்லை. சாட்சிகள் இல்லையாயின் பொருளை தன் பொருள் தான் என உறுதிப்படுத்த சத்தியம் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.

எமன் நாட்டில் உள்ள நிலத்தில் எனக்கும் இன்னொருவருக்கும் வழக்கு இருந்தது. நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கை கொண்டு சென்றேன். உன்னுடையதுதான் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் உண்டா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன் அப்படியானால் உன்னுடைய எதிரி (யின் கைவசத்தில் அந்த நிலம் இருப்பதால்) அது தன்னுடையதே என்று சத்தியம் செய்யக் கோருவதே வழி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் அவர் சத்தியம் செய்யட்டும் என்று நான் கூறினேன். அறிவிப்பவர் :- அஷ்அஸ் (ரலி), நூல் :- முஸ்லிம்

இதுபோன்ற மிக அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும், சில ஒழுங்கு முறைகளை இதில் வலியுறுத்துகிறது.

சத்தியம் செய்யும் முறை!
சத்தியம் எந்தப் பொருள் மீது வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அல்லாஹ் மீது மட்டுமே சத்தியம் செய்யக் கட்டளையிடுகிறது. ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி), நூல் :- அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம்

ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ் மீது தவிர சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் :- அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், பைஹகீ

உமர் (ரலி) அவர்கள் தன் தந்தையைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தந்தைகள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாய் இருக்கட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அஹ்மத், நஸயீ.

 ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கஃபாவின் மீது சத்தியமாக என்றும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்…. என்று உங்களை நோக்கி உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் மூலம்) நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறும்படியும் அல்லாஹ்வும் நாடி, அதன் பின் நீங்களும் நாடினால்.. என்று தம்மை நோக்கி கூறும் படியும் அவர்களுக்கு (ஸஹாபாக்களுக்கு) கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் :- குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) நூல்கள் :- அஹ்மத் நஸயீ, இப்னுமாஜா

ஒருவர் தான் சத்தியம் செய்யும் போது, லாத் உஸ்ஸாவை (மக்கா காஃபிர்களின் தெய்வங்களை) கொண்டு சத்தியம் செய்தால் அவர் (ஈமான் இழந்து விட்டார். எனவே) லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று கூறட்டும்! என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- புகாரி
சிலைகள் மீதும், உங்கள் தந்தைகள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- முஸ்லிம்

மேற்கொண்ட ஹதீஸ்கள் யாவும் இறைவன் பெயர் கொண்டு மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கிறது. எனவே இன்று முஸ்லிம்கள், அந்த அவ்லியா மீது சத்தியமாக! இன்ன நாதா மீது சத்தியமாக! குழந்தை மீது சத்தியமாக! உணவு மீது சத்தியமாக! என்றெல்லாம் சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ் அல்லாத எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்தாலும் அவை கூடாது. அப்படிக்கூறி சத்தியம் செய்வது மாபெரும் குற்றம் என்பதையும் அறியலாம். எனவே அல்லாஹ்வின் பெயர் கூறி மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

குர்ஆன் மீது சத்தியம் செய்தல்!
குர்ஆன் என்பது இறைவன் இறக்கிய திருமறை தானே அதில் சத்தியம் செய்தால் தவறா? என்ற எண்ணம் தவறாகும். இன்றும் கூட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் விசாரிக்கப்படும் போது, அதற்கு முன்பாக குர்ஆன் மீது சத்தியம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். இவ்வாறு குர்ஆன் மீது சத்தியம் செய்வது கூடாததாகும். ஆனால் குர்ஆனை இறக்கியருளிய ரப்பின் மீது சத்தியமாக!
என சத்தியம் செய்வது தவறில்லை. இதை மேற்கண்ட குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் சத்தியம்!
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. நபி (ஸல்) அவர்கள் இதயங்களை புரட்டுபவன் மீது சத்தியமாக! என்ற வார்த்தையை சத்தியம் செய்யும் போது அதிகம் குறிப்பிடுவார்கள். அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- இப்னுமாஜா, புகாரி, திர்மிதீ, அபூதாவூத் நஸயீ

முஹமமத் (ஸல்) சமுதாயமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (மட்டும்) நான் அறிந்தவற்றை அறிந்தால் அதிகம் அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா (ரலி) நூல் :- புகாரி

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். உமர் (ரலி) அவர்கள் கையை, அவர்கள் பிடித்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! என்னை நான் விரும்புவது தவிர, மற்ற எல்லா விஷயங்களையும் விட, நீங்கள் எனக்கு மிக விருப்பமானவர்கள்! என்று கூறினார்கள். ~அப்படி அல்ல! என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உம்மையும் விட நான் உமக்கு மிக விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களே எனக்கு என்னை விட மிக விருப்பமானவர்கள்! என்று உமர் (ரலி) கூறினார்கள். உமரே! இப்போது தான் (நீர் சரியாகக் கூறினீர்) என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னுஹிஷாம் (ரலி) நூல் :- புகாரி

நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்துள்ளபடி அல்லாஹ்வின் மீதும் அல்லது அல்லாஹ்வின் தன்மைகள் மீதும் சத்தியம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து இஸ்லாத்தை பற்றி சில கேள்விகள் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள். அதன் பின் அந்த கிராமவாசி இதைவிட நான் எதனையும் அதிக மாக்கவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இவருடைய தந்தையின் மீது சத்தியமாக! இவர் உண்மை கூறினால் வெற்றியடைந்து விட்டார் என்று குறிப்பிட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர் :- தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) நூல் :- முஸ்லிம்

இந்த ஹதீஸ்படி நபி (ஸல்) அவர்கள் ~தந்தை மீது சத்தியம் செய்து உள்ளார்களே? என்ற கேள்வி எழலாம். அல்லாஹ்வை தவிர வேறு எதன் மீது சத்தியம் செய்தல் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளதாலும் பின்வரும் ஹதீஸை கவனிக்கும் போது மேற்கூறிய சம்பவம் தடை செய்யப்படுமுன் நடந்தது என்பது தெளிவாகிறது.

ஒரு யஹ{தி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறீர்கள் (எவ்வாறெனில்) கஃபாவின் மீது ஆணையாக! என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்களே? என்று கேட்டார். அதன்பின் நபி (ஸல்) அவர்கள் (கஃபாவின் மீது ஆணையாக! என்று சொல்லாமல்) கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! என்று கூறும்படி தோழர்களுக்கு கட்டளை யிட்டனர். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் :- குதைலா (ரலி) நூல்கள் :- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

ஆரம்ப காலங்களில் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்யும் பழக்கம் இருந்து பின்பு அது மாற்றப்பட்டது என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அல்லாஹ்வின் சத்தியம்
அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் தான், மனிதர்கள் சத்தியம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களும் அப்படித்தான் சத்தியம் செய்துள்ளனர் என்பதை மேலே குறிப்பிட்டோம். ஆனால் அல்லாஹ்வோ, காலம், குதிரை, அத்தி, ஸைத்தூன், ஸினாய்மலை, மக்கா, முற்பகல், இரவு, சூரியன், சந்திரன், வானம், பூமி, ஆத்மா, நட்சத்திரம், மறுமை நாள் இவைகள் மீது சத்தியம் செய்து 85, 86, 91, 93, 95, 100, 103 ஆகிய அத்தியாயங்கள் மற்றும் பல வசனங்களில் பல்வேறு செய்திகளை கூறுகிறான்.
திருமறை நாள்வழிகாட்டி என்பது அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். திருமறையி;ல் அல்லாஹ் செய்து காட்டியபடி நாம் ஏன் அல்லாஹ் அல்லாத மற்றவைகள் மீது சத்தியம் செய்யக்கூடாது என சிலர் கேட்கின்றனர்.

இதற்குரிய பதிலை அறியும் முன், ஒரு முக்கிய விஷயத்தை விளங்கிக் கொண்டோமானால், பதில் தெளிவாக தெரிந்து விடும். சத்தியம் செய்தல் என்பது நம்மை விட உயர்வான ஒன்றைக் காட்டி அதன் மீது சத்தியமாக என்று கூறுவதாகும். இதன்படி நம்மை விட உயர்ந்த வல்ல அல்லாஹ்வின் மீது தான் நாம் சத்தியம் செய்ய வேண்டும். ஆனால், அல்லாஹ்வை விட வேறு சிறந்த பொருள் இல்லை. எனவே அல்லாஹ்வே சூரியன், சந்திரன் போன்ற தன் படைப்புகள் மீது சத்தியம் செய்கிறான் என்றால் சத்தியம் செய்தபின் கூறப்படும் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே, இந்த அபூர்வ படைப்பின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

 கியாமத் நாள் உண்மை என நம்புங்கள் என்று குறிப்பிடுகிறான். இருப்பினும் இறைவன் கூறும் பின்வரும் வசனமே இதற்கு பதிலாகவும் அமையும். அவன் செய்பவைபற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:21:23)
எல்லா வல்லமையும் நிறைந்த அல்லாஹ்வின் செயல் பற்றி அவனது அடிமைகளான நாம் கேள்வி எழுப்ப இயலாது. எனவே, அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் இறைவனல்லாத எந்த பொருள் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்காததால் நாமும், அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் மட்டும் சத்தியம் செய்ய வேண்டும்.

சத்தியத்தின் பலவகை
சத்தியம் செய்வது என்பது செய்யத் தகுதியுள்ள செயல் முறைதான், என்றாலும் கூட எதற்கெடுத்தாலும் சத்தியம், எதைப் பேசினாலும் சத்தியம் என்ற நிலை இருக்கக்கூடாது. இவ்வாறு அடிக்கடி சத்தியம் செய்யும் பழக்கம் பொய்யனிடம் மட்டும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபற்றி அல்லாஹ்வும் கூறுகிறான்.

மேலும் இழிவு உள்ளவனான, அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும், வழிபடாதீர். (அத்தகையவன்) குறை கூறித்திரிபவன் – கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (அல்குர்ஆன்: 68:10,11)

எனவே, எந்த செயல் செய்தாலும், எந்தப் பேச்சு பேசினாலும் சத்தியம் செய்தல் என்பது கூடாது. சத்தியத்தின் வகைகளை பற்றி தெரிந்து கொண்டு விட்டால் சத்தியத்தை அடிக்கடி பயன்படுத்தும் செயல் குறைய வாய்ப்புண்டு. வீண் சத்தியம், பொய் சத்தியம், முறையான சத்தியம் என்று மூன்று நிலைகளாக சத்தியத்தை பிரிக்கலாம்.

1. வீண் சத்தியம்
அடிக்கடி சிலர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதைத் தருகிறேன், செய்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமின்றி@ அல்லது கோப நிலையில் சத்தியத்திற்கு பயன்படும் வார்த்தைகளை கூறுவர். சத்தியம் என்பது இதைச் செய்தால் ஒழிய நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே சத்தியம் செய்வதற்கு நிய்யத் அவசியமாகும்.

நிச்சயமாக! செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் கொண்டே (கவனிக்கப்படும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல் :- புகாரி எனவே சத்தியம் செய்யும் எண்ணம் (நிய்யத்) இன்றி செய்யப்படும் சத்தியம் அனைத்தும் வீண் சத்தியங்களாகும். இவைகள் சத்தியம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. (யோசனையின்றி எண்ணமின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 2:22,5:89)

2. பொய் சத்தியம்
தவறான செயல்களை செய்து, அதை உறுதிப்படுத்த சத்தியத்தை பயன்படுத்துவதும், பொய்யான ஒரு செய்தியைக் கூறி அது உண்மையானதுதான் என கூற சத்தியத்தை பயன்படுத்துவதும், பிறர் பொருளை அபகரிக்க, ஒருவன் மீது அவதூறு கூற, பொய்க்குற்றச் சாட்டுசுமத்த, இப்படி தவறான காரியங்களை நிறைவேற்ற சத்தியத்தை பயன்படுத்துவதும் கூடாது. இது போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படும் சத்தியமே பொய் சத்தியம் எனக்கூறப்படும். அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதங்களாக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்…” (அல்குர்ஆன்:16:92)

நீங்கள் உங்களுக்கிடயில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்கு காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிறைபெற்ற உங்களுடைய பாதம் சறுகி விடும். (அல்குர்ஆன்:16:94)

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:3:77)

(பொய்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையை யார் பறிக்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் நரகத்தை விதியாக்கி விடுவான். மேலும் சுவர்க்கத்தை அவனுக்கு ஹராமாக்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் :- அபூஉமாமா (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அல்முஅத்தா (மாலிக்)

ஒரு முஸ்லிமுடைய பொருளைப் பறித்துக் கொள்வதற்காக யார் பொய்யான சத்தியம் செய்கிறாரோ, அவர் மீது அல்லாஹ் கோபமடைந்த நிலையில் தான் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) நூல் :- முஸ்லிம்

அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், (அநீதமாக) கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னு உமர் (ரலி) நூல் :- புகாரி

3. முறையான சத்தியம்
அடுத்து, முறையான சத்தியத்தை நாம் விளக்கவே தேவை இல்லை. முறையான சத்தியம் செய்ய தடை இல்லை என்பதற்கு போதிய சான்றுகளாக நாம் மேலே குறிப்பிட்ட வசனங்கள், ஹதீஸ்களே அமைந்துள்ளன. எனவே, ஒருவர் பொய் சத்தியம் செய்யக்கூடாது. எதற்கெடுத்தாலும் சத்திய வார்த்தைகளை கூறவும் கூடாது. பயன்படுத்தினால் அவை வீண் சத்தியங்களாகத் தான் கருதப்படும்

சத்தியத்தை முறிக்கலாமா?
அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்யும் நிலை ஏற்பட்டால் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும். சத்தியத்தை இடையில் முறிந்திட தடை வந்துள்ளது. இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள். (அல்குர்ஆன்:16:91,92)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு மாதத்திற்கு நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு பின்பு 29வது நாளிலேயே மனைவியாரிடம் செல்கிறார்கள். அருகிலிருந்தோர், இறைத்தூதர் அவர்களே! ஒரு மாதம் முடியவில்லையே! என்று கூற இம்மாதம் 29 நாள் மட்டும் தான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்ற கருத்தில் அனஸ், உம்முசலமா, இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹ{ அன்ஹ{ம்) அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹதீஸ்படி சத்தியத்தை நிறை வேற்றுவதில் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் இருந்த ஆர்வத்தை நம்மால் விளங்க முடிகிறது.

இருப்பினும் சில வேளைகளில் சத்தியத்தை முறித்திட இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது ஒருவன், ~நான் இதைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறான். அதன் பனி அதை விட சிறந்த ஒரு பொருள் அவன் வசம் கிடைக்கிறது. என்றால், தான் செய்த சத்தியத்தை முறித்து விட்டு, அதற்கான பரிகாரம் செய்துவிட்டு, சிறந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து விஷயங்களுக்கும் சத்தியத்தை முறிப்பதில் நாம் கூறிய இந்த உதாரணம் பொருந்தும்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.(அல்குர்ஆன்:2:224)

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன், மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்:66:2)

நீ (ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்து அதைவிட சிறந்ததாக மற்றொன்றை நீ அறிந்தால், அந்த சிறந்ததை செய், உன் (முறித்த) சத்தியத்திற்கு பரிகாரம் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் :- அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- புகாரி, முஸ்லிம், நஸயீ, அபுதாவூத்

உங்களில் ஒருவர் சத்தியம் செய்து, அதைவிட சிறந்ததாக மற்றொன்றை கண்டால் அவர் சத்தியத்திற்கு பரிகாரம் செய்து விட்டு, அந்த சிறந்த செயலை செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் :-அதீ இப்னு ஹாதிம் (ரலி), அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ எனவே, சத்தியம் செய்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவசியம் என்ற நிலை இருப்பின் முறித்துவிடுவதில் தவறில்லை.

சத்தியத்தை முறித்தால்….!
ஒருவர் தான் செய்த சத்தியத்தை முறித்திட வேண்டியது ஏற்பட்டால், அவர் தான் செய்த சத்தியத்திற்கு பரிகாரமாக, பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைதர வேண்டும். அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இம்மூன்றுக்கும் இயலாது எனில்@ மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை – பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது@ இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்:5:89)

சத்தியம் செய்யும் எண்ணத்துடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் முறையான சத்தியங்களை முறித்தால் தான் பரிகாரம் காண வேண்டும். அது அல்லாத மற்ற வீணான சத்தியங்களை செய்தால் பரிகாரம் தேவை இல்லை. இருப்பினும் பொய் சத்தியம் செய்தால் இறைவனிடம் தவ்பா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் அது மிகப் பெரும் பாவமாகும். (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்பவனாக பொறுமையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:2:25)

சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்.(அல்குர்ஆன்:5:99) பொய் சத்தியம் செய்தல் பெரும் பாவமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்.
(புகாரியில் உள்ளதின் சுருக்கம்)

இன்ஷா அல்லாஹ் கூறினால்….!
சத்தியம் செய்யும் போது ஒருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ஷா அல்லாஹ் இதைச் செய்வேன் என்று இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்ற வார்த்தையை சேர்த்துக் கூறினால் அவர், தான் செய்த சத்தியத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் தவறில்லை. அவர் சத்தியம் செய்தாலும் கூட இன்ஷா அல்லாஹ் கூறியதால், அல்லாஹ் நாடவில்லை@ அதனால் தான் அதைச் செய்யவில்லை என்று கூறிவிட வாய்ப்புண்டு.

நிச்சயமாக என் மனைவியிடம், ஒரே இரவில் (உடலுறவுக்காக) சுற்றி வருவேன். அவர்கள் ஒவ்வொருவரும் இறைவழியில் பாடுபடும் குழந்தையை பெற்றெடுப்பர் என்று அல்லாஹ்வின் நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறினார்கள். (அருகிலிருந்த) அவரது தோழர் அல்லது மலக்கு, இன்ஷா அல்லாஹ் என்றும் கூறுங்கள் என்று கூறினார். ஆனால் சொல்ல மறந்துவிட்டார்கள். இருப்பினும்@ அந்த பெண்களில் ஒருவரைத் தவிர மற்ற எவரும் குழந்தை பெறவில்லை. (அந்த ஒரு பெண்ணும்) ஊனமுற்ற குழந்தையைப் பெற்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, சுலைமான் (அலை) அவர்கள் மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறி இருந்தால் சத்தியத்தை முறித்தவராக ஆகமாட்டார்கள். அவருக்கு அவரது தேவையில் ஒரு வழி இருந்திருக்கும் என்று கூறினார்கள். அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம்

இதையும் பார்க்க:-
                   * இஸ்லாமியப் பெண்கள் எப்படி விவாகரத்து செய்ய முடியும...
                  * பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி க...
                  * ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.
                  * கணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா?
                  * ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா..?
                  * “பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :


                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழத்தாமல் உடனே செய்ய வேண்டும்.

 தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

 1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

 2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

 3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.
7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.
ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.
*அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:*
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.
இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

                      

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
நீங்கள் ஏன் உங்களை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக்கொள்கிறீர்கள்.. இப்படி 
ஜமாஅத்களாகப் பிரித்துக் கொள்ளாமல் முஸ்லிம் என்று ஒன்றாக இருக்கலாமே?  தகுந்த விளக்கம் தரவும்..?

அஸதுல்லாஹ். 

பதில் 

முஸ்லிம் என்ற வார்த்தை திருக்குர்ஆன் முழுவதும் குறிப்பிட்ட இயக்கத்தையோ மக்களையோ குறிப்பதற்கான வார்த்தையாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அது ஒரு பண்புப் பெயராகவே பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

சில அதிமேதாவிகள் முஸ்லிம்கள் தங்களுக்குள் இந்த வார்த்தையைத் தவிர வேறு எதையும் 
சூட்டிக் கொள்ளக் கூடாது . இயக்கத்திற்கு பெயர்கள் வைக்கக் கூடாது என்று உளறி 
வருகின்றனர். இவர்கள் இவ்வாறு உளறிய காரணத்தினால் இவர்கள் கூறியது போல் ஒற்றுமை 
ஏற்படவில்லை. முஸ்லிமீன் என்ற பெயரில் பல இயக்கங்கள் ஏற்பட்டது தான் மிச்சம்.

அடையாளப் பெயருக்கும் பண்புப் பெயருக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் விளங்கிக் கொள்ள 
வேண்டும்.பண்புப் பெயருடன் இன்னொரு பெயர் இருந்தால் பண்புப் பெயரை மறுப்பதாக ஆகாது. 
ஒருவர் மிகவும் பொறுமைத்தன்மை உடையவராக இருக்கின்றார். இந்தத் தன்மையின் காரணமாக அவரை நாம் பொறுமைசாலி என்று குறிப்பிடுவோம். இது பொறுமை என்ற பண்பின் அடிப்படையில்உருவான பெயராகும். அதே நேரத்தில் ஒருவருக்கு வெள்ளையன் என்று பெயர் சூட்டுகின்றோம். அவர் மிகவும் கருப்பாக இருந்தாலும் அவரை வெள்ளையன் என்றே அழைப்போம். இது அவரை அடையாளப் படுத்துவதற்காக வைக்கப்பட்ட குறிப்பான பெயராகும். 

திருக்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் முஸ்லிம் என்ற வார்த்தை அடையாளப் பெயராகப் 
பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு பண்புப் பெயராகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 
முஸ்லிம் என்பது அடையாளப் பெயராக இருந்தால் சிலை வணங்கியைக்  கூட முஸ்லிம் என்றே குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். 

ஆதம் (அலை) அவர்கள் முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த அனைவரையும் முஸ்லிம்கள் (இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள்) என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

நூஹ் நபியவர்களை முஸ்லிம் என்றே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

فَإِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى 
اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ (72)10


நீங்கள் புறக்கணித்தால் (அது பற்றி எனக்குக் கவலையில்லை.) நான் உங் களிடம் எந்தக் 
கூலியையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நான் முஸ்லிமாக இருக்குமாறு கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்றும் கூறினார்.) அல்குர்ஆன் 10 : 72
இபுறாஹிம் நபி முஸ்லிமாக இருந்தார் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا 
مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ (67)3


இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.அல்குர்ஆன் (3:67)

இபுராஹிம் நபியவர்களும், இஸ்மாயில் நபியவர்களும் தம்மையும் தம்முடைய சந்ததிகளையும் முஸ்லிம்களாக அதாவது இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மை கொண்டவர்களாக ஆக்க வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً 
لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ 
الرَّحِيمُ (128) [البقرة/128]

''எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், (முஸ்லிம்களாகவும்) எங்கள் 
வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் (முஸ்லிம் 
சமுதாயமாகவும்) ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் 
தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' 
(என்றனர்.) அல்குர்ஆன் 2:128
யாகூப் நபி தன்னுடைய பிள்ளைகளுக்கு முஸ்லிம்களாக மரணிக்க வேண்டும் என்றே உபதேசம்  செய்துள்ளார்கள். 

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ 
اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (132) 2


''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். 
முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது 
பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர் அல்குர்ஆன்  2:132

أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا 
تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آَبَائِكَ 
إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ 
مُسْلِمُونَ (133) 2


யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? ''எனக்குப் 
பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது ''உங்கள் 
இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்)  கூறினர். அல்குர்ஆன் 2 : 133

மூஸா நபியின் சமுதாயத்தையும் முஸ்லிம்கள் என்றே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது

وَقَالَ مُوسَى يَا قَوْمِ إِنْ كُنْتُمْ آَمَنْتُمْ بِاللَّهِ فَعَلَيْهِ 
تَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُسْلِمِينَ (84)10


''என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்லிம்களாக இருந்தால் அவனையே 
சார்ந்திருங்கள்!'' என்று மூஸா கூறினார்.

சூனியக்காரர்கள் தாங்கள் ஈமான் கொண்டவுடன் நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம் என்றே 
கூறினார்கள்.

وَمَا تَنْقِمُ مِنَّا إِلَّا أَنْ آَمَنَّا بِآَيَاتِ رَبِّنَا لَمَّا جَاءَتْنَا 
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ (126)7


''எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே 
எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ''எங்கள் இறைவா! 
எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!'' 
என்றனர். அல்குர்ஆன் 7 : 126  ,அல்குர்ஆன் 10 : 84

பிர்அவ்ன் மூழ்கடிக்கப்படும் போது தான் முஸ்லிம்களில் ஒருவனாகி விட்டேன் என்று 
கூறினான்.

وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ 
وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آَمَنْتُ 
أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آَمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ 
الْمُسْلِمِينَ (90)10


இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் 
அக்கிரமமாகவும், அநியாய மாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் 
மூழ்கும் போது ''இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு 
யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்.              அல்குர்ஆன் 10 : 90
ஈஸா (அலை) அவர்களின் உதவியாளர்களும் முஸ்லிம்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். 

فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ 
قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آَمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ 
بِأَنَّا مُسْلِمُونَ (52) 3

அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்த போது ''அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் 
யார்?'' என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், ''நாங்கள் அல்லாஹ்வின் 
உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே 
சாட்சியாக இருங்கள்'' என்றனர். அல்குர்ஆன் 3 : 52
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தையும் அல்லாஹ் முஸ்லிம்கள் என்றே 
குறிப்பிட்டு்ள்ளான்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا 
تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (102)3


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் 
முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்! அல்குர்ஆன் 3 : 102
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ 
(162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ (163)6

''எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் 
இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக
அல்குர்ஆன் 6 : 162, 163

மேற்கண்ட வசனங்களிலிருந்து இருந்து அனைத்து நபிமார்களின் சமுதாயமும் முஸ்லிம்களே 
என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.நபிகள் நாயகம் அவர்களுடைய சமுதாயத்திலும் முந்தைய நபிமார்களின் சமுதாயத்திலும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன்மை கொண்ட மக்களை முஸ்லிம்கள் என்றே  குறிப்பிட்டதாக அல்லாஹ் 22 : 78 வசனத்தில் கூறுகின்றான்.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் 
சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு 
முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்  அல்குர்ஆன் 22 : 78
முஸ்லிம் என்ற வார்த்தையை தனக்குக் கட்டுப்படும் மக்களுக்கு அல்லாஹ் 
குறிப்பிட்டுள்ளான். இது பண்பின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர்தான். இது ஒரு 
அடையாளப் பெயராக இருக்குமென்றால் முஸ்லிம் என்ற வார்த்தையை விட ஒரு வார்த்தையைக்  கூட்டுவதோ குறைப்பதோ கூடாது.

இது ஒரு பண்புப் பெயராக இருப்பதின் காரணத்தினால் தான் நபியவர்கள் முஸ்லிம் என்ற 
வார்த்தையுடன் இன்னும் சில வார்த்தைகளைச் சேர்த்து அல்லாஹ் வைத்த பெயர் என்று 
கூறியுள்ளார்கள். 

2790 قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا آمُرُكُمْ 
بِخَمْسٍ اللَّهُ أَمَرَنِي بِهِنَّ السَّمْعُ وَالطَّاعَةُ وَالْجِهَادُ 
وَالْهِجْرَةُ وَالْجَمَاعَةُ فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ قِيدَ شِبْرٍ 
فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يَرْجِعَ وَمَنْ 
ادَّعَى دَعْوَى الْجَاهِلِيَّةِ فَإِنَّهُ مِنْ جُثَا جَهَنَّمَ فَقَالَ رَجُلٌ 
يَا رَسُولَ اللَّهِ وَإِنْ صَلَّى وَصَامَ قَالَ وَإِنْ صَلَّى وَصَامَ فَادْعُوا 
بِدَعْوَى اللَّهِ الَّذِي سَمَّاكُمْ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ عِبَادَ 
اللَّهِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ   رواه الترمدي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு ஐந்து விஷயங்களை 
ஏவுகின்றேன். அல்லாஹ் அவற்றைக் கொண்டு எனக்கு கட்டளையிட்டான். அவையாவன: 
செவிதாழ்த்துதல், கட்டுப்படுதல், ஜிஹாத் செய்தல், ஹிஜ்ரத் செய்தல், அல்ஜமாஅத் எனும் 
கூட்டமைப்பாக இருத்தல். ஏனெனில் யார் இஸ்லாமிய (அரசான) கூட்டமைப்பை ஒரு சாண் அளவு பிரிந்து செல்கிறானோ அவன் தனது கழுத்திலிருந்து இஸ்லாத்தின் (ஒப்பந்தமான) 
வளையத்தைக் கழற்றி விட்டான். அவன் மீண்டும் திரும்பி வந்தாலே தவிர. எவன் 
அறியாமைக்கால அழைப்பை அழைக்கின்றானோ அவன் நரகத்தின் கொள்ளிக்கட்டையாவான் என்று கூறினார்கள்.

 அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே அவன் தொழுதாலும் நோன்பு 
நோற்றாலுமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவன் தொழுதாலும் நோன்பு 
நோற்றாலும்தான் என்று கூறிவிட்டு அல்லாஹ்வுடைய அழைப்பைக் கொண்டே நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள் அவன் உங்களுக்கு அல்முஸ்லிமீன், அல்முஃமினீன், இபாதல்லாஹ் என்று பெயர் சூட்டியுள்ளான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்  : அல்ஹாரிஸ் (ரலி) 
நூல் : திர்மிதி (2790)

அஹ்மத் 21835 வது ஹதீஸில் இபாதல்லாஹ், அல்முஃமினீன், அல் முஸ்லிமீன் என்ற அல்லாஹ் 
பெயர் சூட்டினான் என நபியவர்கள் கூறியதாக வந்துள்ளது. அறியாமைக் காலத்தில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கும் பழக்கம் இருந்தது. இஸ்லாம் அதனை உடைத்தெறிந்தது. அல்லாஹ்வின் அடியார்கள் மத்தியில் பிறப்பினால் உயர்வு தாழ்வு கிடையாது. அனைவரும் இபாதல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்) அல்முஸ்லிமீன் (கட்டுப்பட்டவர்கள்) அல்முஃமினீன் (இறைநம்பிக்கையாளர்கள்) என்று தான் முஸ்லிம்கள் தங்களுக்குள் குறிப்பிட வேண்டும் என நபியவர்கள் போதித்தார்கள். 

முஸ்லிம்களாக இருப்பவர்கள் பெயரினால் உயர்வு தாழ்வு கற்பிக்காமல் தங்களுக்குச் சில 
பண்புகளின் அடிப்படையில்  அடையாளப் பெயர்களைப் பயன்படுத்துவது மார்க்கத்திற்கு 
எதிரானது அல்ல.நபிகள் நாயகம் ஸல் அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி முந்தைய சமுதாயத்தில் நபிமார்கள் வழியில் நடந்தவர்களையும் முஸ்லிம்கள் என்றே அல்லாஹ் கூறியுள்ளதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். யாரை முஸ்லிம் என்று அல்லாஹ் குறிப்பிட்டானோ அவர்களை வேறு பெயர்களிலும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும்,  ஸாபியீன்களிலும் 
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி 
அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் 
மாட்டார்கள். திருக்குர்ஆன் : 2:62
நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும், கிறித்தவர்களிலும் 
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் 
இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். திருக்குர்ஆன் : 5:69
மேற்கண்ட இரண்டு வசனங்களில் யஹூதிகள் எனும் யூதர்கள், நஸாரா எனும் கிறித்தவர்கள், 
சாபியீன்கள் ஆகியோரில் அல்லாஹ்வை சரியான முறையில் நம்பிக்கை கொண்டிருந்தால் 
அவர்களுக்கு மறுமையில் சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான். 
இந்தத் தன்மையில் உள்ள அனைவரும் முஸ்லிம்கள் தான் என்பதற்கான ஆதாரங்களை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதாவது அவர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் அவர்கள் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான். 

சாபியீன்கள் என்ற பெயர் அல்லாஹ் சூட்டிய பெயர் அல்ல. மக்களாகச் சூட்டிக் கொண்ட 
பெயர் ஆகும். ஆனாலும் அவர்கள் அந்தப் பெயரில் குறிப்பிடப்பட்டதால் முஸ்லிம் என்ற 
பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. இவர்கள் சாபியீன்கள் என்று அல்லாஹ் வைக்காத 
வேறு பெயர் வைத்துக் கொண்ட்தால் அவர்கள் குற்றவாளிகள் என்று கூறாமல் சொர்க்கவாசிகள் 
என்று அல்லாஹ் கூறுகிறான்.மேலும் அல்லாஹ் அனைத்து நபிமார்களுடைய சமுதாயத்திற்கும் முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியிருந்தாலும் அவர்களுக்குரிய அடையாளப் பெயர்களைக் கொண்டும் அல்லாஹ் அழைத்துள்ளான்.

அஹ்லுல் கிதாப், அஸ்ஹாபுல் உஹ்தூத், யகூதிகள், நஸராக்கள், பனீஇஸ்ரவேலர்கள் 
என்றெல்லாம் திருக்குர்ஆனில் முந்தைய சமுதாயத்திற்குரிய அடையாளப் பெயர்களை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இந்தப் பெயர்களில் முந்தைய சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்களும் அடக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அது போன்று காஃபிர்களையும் அவர்கள் வசித்த இடம், செய்த பாவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தோப்புவாசிகள், சனிக்கிழமைவாசிகள் என்பது போன்ற அடையாளப் பெயர்களைக் கொண்டு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் மதீனா ஸஹாபாக்கள் அன்சாரிகள் என்றும் 
மக்கா ஸஹாபாக்கள் முஹாஜிர்கள் என்றும் நபியவர்கள் காலத்திலேயே 
அழைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் என்றுதான் அழைக்க வேண்டும் . அன்சாரிகள், முஹாஜிர்கள் என்ற குறிப்பிடக் கூடாது என அல்லாஹ்வும் தடுக்கவில்லை. நபிகள் நாயகமும் தடைவிதிக்கவில்லை. முஹாஜிர் என்று சொன்னதால் முஸ்லிம் என்ற பண்புப் பெயரை மறுத்த்தாக அவர்கள் ஆகவில்லை.மாறாக அல்லாஹ்வே திருமறைக் குர்ஆனில் அன்சாரிகள் முஹாஜிர்கள் என்று பெயர் வைத்துள்ளான். 

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ 
اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ 
لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ 
الْفَوْزُ الْعَظِيمُ (100)9


முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் 
என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. அல்குர்ஆன் 9 : 100
قَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ الَّذِينَ 
اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ 
فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ (117) 9

இந்த நபியையும், முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன் அல்குர்ஆன் 9 : 117

அல்லாஹ்வே தங்களுக்கு அன்சாரிகள் என்று பெயர் சூட்டினான் என அனஸ் (ரலி) அவர்கள் 
குறிப்பிட்டுள்ளார்கள்.ஃகைலான் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) 
அன்சார்-உதவியாளர்கள்' என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். 
உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் 
உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா? என்று கேட்டேன். அவர்கள், அல்லாஹ் தான் 
எங்களுக்கு (அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100ஆம் வசனத்தில்) பெயர் சூட்டினான் 
என்று குறிப்பிட்டார்கள். நூல்  : புகாரி 3776

முஸ்லிம்களாக இருந்தவர்களுக்கு அல்லாஹ் அன்சாரிகள் என்றும் முஹாஜிர்கள் என்றும் 
பெயர் சூட்டியதிலிருந்தே முஸ்லிம்கள் தங்களுக்குள் சில பெயர்களைச் சூட்டிக் கொள்வது 
தவறில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.அது போன்று ஸஹாபாக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அஸ்ஹாபுஸ் சுஃப்ஃபா “திண்ணை ஸஹாபாக்கள்“ என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். குர்ஆனை நன்றாக ஓதக்கூடியவர்கள் குர்ராக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம் என்று மட்டும்தான் குறிப்பிட வேண்டும் என்று இருந்தால் இவ்வாறு அழைப்பதற்கு நபியவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். 

இன்றைக்கு முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணைவைப்புக் காரியங்களில் மூழ்கி உள்ள 
காரணத்தினால் மக்களுக்கு தவ்ஹீத் கொள்கையை எடுத்துரைக்க வேண்டும், ஓரிறைக் கொள்கை உடைய மக்களை ஒன்றிணைத்து செயல்படுவதின் மூலம் மார்க்க ரீதியிலான சில பலன்களை அடைய முடியும் என்ற அடிப்படையிலேயே தவ்ஹீத் வாதிகள், தவ்ஹீத் ஜமாஅத் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

தவ்ஹீத்வாதி என்ற சொல்லே குர்ஆன் ஹதீஸில் இல்லை. எனவே இவ்வாறு அடையாளப் பெயர் இடுவது கூடாது என்று சிலர் சமுதாயத்தில் உளறி வருகின்றனர். அரபு மொழியைப் பற்றியும் குர்ஆன் ஹதீஸைப் பற்றியும் ஞானம் இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட தவறான வாதத்தை வைத்து வருகின்றனர். குர்ஆனையும் நபிமொழிகளையும் படிக்கும் ஒருவர் தவ்ஹீத் என்ற சொல் அவ்விரண்டிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்.
அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வாஹித் (ஒருவன்) என்றும் வஹ்தஹு (அவன் தனித்தவன்)  என்றும் பல இடங்களில் கூறுகின்றான். 

وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا إِلَهًا وَاحِدًا لَا إِلَهَ إِلَّا هُوَ 
سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ(31)9

ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர 
வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் 
தூயவன்.அல்குர்ஆன் (9 : 31)
இந்த வசனத்தில் ஒரே என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் வாஹித் என்ற அரபுச் சொல் 
இடம்பெற்றுள்ளது. வஹ்த் என்ற சொல்லிருந்து பிரிந்து வந்தவை தான் வாஹித் தவ்ஹீத் 
என்ற வார்த்தைகள்.

தவ்ஹீத் என்றால் இறைவன் ஒருவன் எனக் கூறுதல் என்பது பொருள். தவ்ஹீத்வாதி என்றால் 
ஒரே இறைவனை நம்பக்கூடியவன் என்பது பொருள். லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற கலிமாவின் சுருக்கமாகவும் இஸ்லாம் என்ற வார்த்தையின் மாற்றுச் சொல்லாகவும் தவ்ஹீத் என்ற சொல் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்ற இஸ்லாமியக் கொள்கையை குறிக்க தவ்ஹீத் என்ற சொல்லிலிருந்து பிரிந்து வரும் யுவஹ்ஹிது என்ற வார்த்தையைப் 
பயன்படுத்தியுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன. 

7372 و حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ حَدَّثَنَا الْفَضْلُ 
بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ عَنْ يَحْيَى بْنِ 
مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ أَنَّهُ سَمِعَ أَبَا مَعْبَدٍ 
مَوْلَى ابْنِ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ لَمَّا بَعَثَ 
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ 
أَهْلِ الْيَمَنِ قَالَ لَهُ إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ 
فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى 
فَإِذَا عَرَفُوا ذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ 
خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ فَإِذَا صَلَّوْا فَأَخْبِرْهُمْ 
أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ 
غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ 
مِنْهُمْ وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு 
அனுப்பிய போது அவர்களிடம், "நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் 
செல்கின்றீர்கள். ஆகவே, அவர்களுக்கு முதலாவதாக, (அல்லாஹ் ஒருவன் எனும்) ஓரிறைக் 
கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து(ஏற்றுக்) கொண்டால், 
தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்கள் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். புகாரி (7372) 

19 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ 
حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ الْأَحْمَرَ عَنْ 
أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ ابْنِ عُمَرَ عَنْ 
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى 
خَمْسَةٍ عَلَى أَنْ يُوَحَّدَ اللَّهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ 
وَصِيَامِ رَمَضَانَ وَالْحَجِّ فَقَالَ رَجُلٌ الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ قَالَ 
لَا صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى 
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه مسلم

"இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1. (இறைவன் 
ஒருவன் எனும்) ஓரிறைக் கொள்கை. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 
4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் 
கூறினார்கள்'' அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (19)

கோபித்துக் கொண்டான் என்று ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டால் கோபம் என்பது அந்த 
நுலில் இல்லை எனக் கூற முடியாது. கோபித்துக் கொண்டான் என்பதில் கோப்ம அடக்கமாக 
உள்ளது. அது போல் தான் யுவஹ்ஹிது என்ற சொல்லுக்குள்ளும், யுவஹ்ஹிதூ என்ற சொல்லுக்கு உள்ளேயும் தவ்ஹீத் எனும் சொல் அடங்கியுள்ளது என்பதை அறிவு படைத்த மக்கள் அறிந்து கொள்வார்கள்.

தவ்ஹீத் என்ற சொல் நேரடியாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. 

2137 وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا 
وَعَلَيْهِ يَنْزِلُ الْقُرْآنُ وَهُوَ يَعْرِفُ تَأْوِيلَهُ وَمَا عَمِلَ بِهِ 
مِنْ شَيْءٍ عَمِلْنَا بِهِ فَأَهَلَّ بِالتَّوْحِيدِ لَبَّيْكَ اللَّهُمَّ 
لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ 
لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ وَأَهَلَّ النَّاسُ بِهَذَا الَّذِي يُهِلُّونَ 
بِهِ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் 
லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, 
உன் அழைப்பேற்று வந்து விட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவரு மில்லை)'' என்று தவ்ஹீதுடன் தல்பியாச் சொன்னார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (2334)

3597 حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ 
عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ 
رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا لَمْ يَعْمَلْ مِنْ الْخَيْرِ شَيْئًا قَطُّ 
إِلَّا التَّوْحِيدَ فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ لِأَهْلِهِ إِذَا أَنَا 
مِتُّ فَخُذُونِي وَاحْرُقُونِي حَتَّى تَدَعُونِي حُمَمَةً ثُمَّ اطْحَنُونِي 
ثُمَّ اذْرُونِي فِي الْبَحْرِ فِي يَوْمٍ رَاحٍ قَالَ فَفَعَلُوا بِهِ ذَلِكَ 
قَالَ فَإِذَا هُوَ فِي قَبْضَةِ اللَّهِ قَالَ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ 
مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ مَخَافَتُكَ قَالَ فَغَفَرَ اللَّهُ لَهُ 
رواه أحمد 

தவ்ஹீத்வாதி என்ற சொல்லும் கூட ஹதீஸ் நூல்களில் உள்ளது. வாதி என்பதற்கு அஹ்ல் என்ற 
சொல் அரபு மொழியில் பயன்படுத்தப்படும். அஹ்ல் அஷ்ஷிர்க் என்றால் ஷிர்க் வாதி அஹ்ல் 
அல் கிதாப் வேதமுடையோர் என்று பொருள். அஹ்ல் அத்தவ்ஹீத் என்றால் தவ்ஹீத்வாதி எனப் 
பொருள். அந்தச் சொல்லையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

حدثنا هناد حدثنا أبو معاوية عن الأعمش عن أبي سفيان عن جابر قال قال رسول الله صلى 
الله عليه وسلم يعذب ناس من أهل التوحيد في النار حتى يكونوا فيها حمما ثم تدركهم 
الرحمة فيخرجون ويطرحون على أبواب الجنة قال فيرش عليهم أهل الجنة الماء فينبتون 
كما ينبت الغثاء في حمالة السيل ثم يدخلون الجنة قال هذا حديث حسن صحيح وقد روي من 
غير وجه عن جابر

தவ்ஹீத்வாதிகளில் சிலர் (வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்படுவார்கள். 
அவர்கள் கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். 
நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். 
சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் 
புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நூல் திர்மிதி 2522, அஹ்மத் 14665
தவ்ஹீத்வாதியாக இருப்பவர் தனது பாவங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால் கூட அவர் 
கடைசியில் சொர்க்கம் செல்வார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.எனவே தவ்ஹீத் ஜமாஅத் என்பதும் தவ்ஹீத் வாதி என்பதும் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உள்ளடக்கிய சொல்லாகும்.பெயரினால் ஒற்றுமை ஏற்படும் என்பதும் தவறான வாதமாகும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் பகைமை ஏற்படத்தான் செய்யம்.

எத்தனை பெயர்களில் இருந்தாலும் அனைவரும் அல்லாஹ்வின் சட்டத்திற்குக் கட்டுப்பட 
வேண்டும் என்ற கொள்கைக்கு வந்துவிட்டால் தான் ஒற்றுமை ஏற்பட்டுவிடும். 
அதைத்தான் நபியவர்கள் அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் மத்தியில் அவர்களின் 
பெயர்களை ஒரே பெயராக ஆக்காமல் ஒற்றுமைப்படுத்திக் காட்டினார்கள். 
ஒரே பெயரில் இருந்தாலும் கொள்கைகள் மாறுபட்டிருந்தால் நிச்சயமாக அங்கு ஒற்றுமை 
ஏற்படாது. இதனைப் பல்வேறு வரலாறுகளும், நடைமுறைகளும் நமக்கு பாடம் படித்துத் 
தருகின்றன. சில அதிமேதாவிகள் பெயரினால் ஒற்றுமை குலைகிறது என்று கூறி வருவது அவர்களின் முதிர்ச்சியின்மையையே படம் பிடித்துக் காட்டுகிறது.

இதையும் பார்க்க:-
                   * இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது சேருபவர் ...
                   * ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்...!
                   * நல்ல காரியம்நடக்க,மணமக்களை வாழ்த்த,இஸ்லாத்தை ஏற்றவ...
                   * மதம் மாறினால் மரண தண்டனையா?
                   * அளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்!

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget