October 2012

ஒரு ஹஜரத் கருப்பு கயிற்றை எடுத்து அதில் திருமறை வசனங்களை படித்து உஃப், உஃப் என ஊதிவிட்டு இந்த கயிறு மகத்துவமிக்கது இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக் கொண்டால் துன்பம் விலகும், சூனியம் நீங்கும், காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்!
 
 மற்றொருபுறம் தர்காஹ்வில் ரெடிமேடாக கருப்பு, சிகப்பு, மஞ்சள் நிற கயிறுகளுடன் சில அரபு வசனங்கள் எழுதப்பட்ட காகிதங்களை சயனைடுகுப்பி போன்ற வடிவத்திலோ உள்ள தாயத்தில் சுருட்டியோ அல்லது கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் கழுத்தில் கட்டும் பச்சைநிற தலையைனை போன்ற பொருளில்
 
 சொருகிவிட்டோ மக்களை நோக்கி மகத்துவமிக்க இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வார்! இவர் மக்களை தேடி செல்லமாடடார் மக்கள் இவரை நாடி வருவார்கள் உலகிலேயே மார்க்கெட்டிங் தேவைப்படாத பிஸினஸ் தாயத்து பிஸினஸ்!

அடிப்படை அறிவுகூட இல்லாத பெயர்தாங்கிகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர்கள் மந்தரித்து கொடுக்கும் தாயத்து கட்டுவதால் துன்பம் விலகுமா? அப்படி விலகுவதாக இருந்தால் மாற்றுதத்தவர்களுடைய கோவிலில் மந்தரித்து கொடுக்கும் காப்பு கயிற்றில் கூட மகத்துவம் இருக்குமே! அப்போ அந்த கோவிலில் மகத்துவம் கொட்டுகிறது என்ற நீங்கள் மறைமுக நம்பிக்கை வைத்துள்ளீர்களா?

 திருக்குர்ஆனை எவ்வாறு அணுகுவது
மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அருளிய அருள்மறை வேதத்தை பொருள் உணர்ந்து படித்தால் நேர்வழி கிடைக்குமா அல்லது அதன் வசனங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டால் நேர்வழி கிடைக்குமா? இது எவ்வாறு உள்ளது என்றால் இதோ உதாரணம்:
 
உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறது உடனே மருத்துவரை அணுகுகிறீர்கள் அவரும் நோய் குணமாகுவதற்காக மருந்துச் சீட்டு எழுதி அதில் உள்ள மருந்தை சாப்பிட வலியுறுத்துகிறார் ஆனால் நீங்கள் அந்த மருந்துகளை வாங்காமல் மருந்துச்சீட்டை சுருட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு நோய் குணமாகிவிடும் என்று நினைத்தால் நீங்கள் முட்டாள்தானே! ஒரு மருத்துவரின் மருந்துச் சீட்டை உங்களால் உணர முடிகிறது அல்லாஹ் கொடுத்த அருள்மறை குர்ஆனை உங்களால் உணர முடியவில்லை!
 
குர்ஆனை படித்து அதன்படி நடக்க முற்பட்டால் நேர்வழி கிடைக்குமா? அல்லது அதன் வசனங்களை தங்கத் தகட்டில் எழுதி கரைத்து குடித்தாலோ அல்லது கழுத்தில் எழுதி மாட்டிக்கொண்டாலோ நேர்வழி கிடைக்குமா?
 
சிந்தித்துப்பாருங்கள்
ஒருவன் கயிறு திரிக்கிறான் அதன் மீது கருப்பு சாயம் ஏற்றுவதற்காக சாயப்பட்டறையில் கொடுக்கிறான் பிறகு அந்த கயிற்றுக்கு சாயம் ஏற்றப்பட்டு வெயிலில் காய வைக்கிறான்! வெயிலில் காய்ந்துக் கொண்டிருக்கும் சாயம் ஏற்றப்பட்ட கயிற்றின் மீது யார் யாரோ நிற்பார்கள், பறந்துக்கொண்டு காக்கை கூட மலம் கழித்திறுக்கும்! சாக்கடையிலிருந்து வெளியேறும் எலி கூட உணவு என எணணி நக்கிப் பார்த்திருக்கும் இப்படிப்பட்ட கயிற்றில் ஏதாவது மகத்துவம் ஏற்றப்பட வாய்ப்பு உள்ளதா?
 
மந்தரிக்கும் ஹஜரத்துகள் செல்போனில் சார்ஜ் ஏற்றித்தருவது போன்று சாதாரண கயிற்றில் மகத்துவத்தை ஏற்றி தருகிறார்களே இதற்கு மாறாக மகத்துவமிக்க வசனங்களை பட்டுத்துணியால் நெய்யப்பட்ட கயிற்றில் ஏற்றித்தரளாமே! விற்பனையாகாது என்ற பயமா? அல்லது அவர்கள் ஓதும் வசனங்கள் அதில் ஏறாதா?
 

தாயத்தும் மடத்தனமும்
  • புத்தக வடிவில் இருக்கும் இறைவேதத்தை கழிவரைக்கு எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதையே காகிதத்தில் எழுதி, அதை தாயத்தில் சொருகி கழுத்திலோ இடுப்பிலோ கட்டிக்கொண்டு அதனுடன் கழிவரைக்கு செல்கிறீர்களே இது அசிங்கமாக தெரியவில்லையா?
  • ஒயின் ஷாப்புக்குள் இறைவேதத்தை எடுத்துச் செல்வீர்களா இல்லையே ஆனால் அதே ஒயின் ஷாப்புக்கள் தாயத்து கட்டிய எத்தனை தடியர்கள் செல்கிறார்கள் அப்போ அந்த இறைவசனங்களுக்கு மதிப்பில்லையா?
  • குழந்தைகளுக்கு இடுப்பில் தாயத்துகளை கட்டுகிறீர்களே அதற்குள் இறைவேத வசனங்கள் இருக்கின்றதே ஒருவேளை அந்த குழந்தை இரவில் படுத்து சிறுநீர் கழித்துவிட்டால் அந்த அசுத்தம் இறைவசனங்களில் தெளிக்குமே இது உங்களுக்கு அருவருப்பாக தெரியவில்லையா?
  • உங்களுடைய பள்ளிச் சான்றிதழுக்கு தரப்படுகின்ற மதிப்பு கூட இந்த இறைவசனங்கள் நிறைந்த காகிதங்களுக்கு தரமாட்டீர்களா?
  • அழகாக திருமறையை பச்சை துணியில் கட்டி கைகள் படாத இடத்தில் வைத்து ரசிக்கிறீர்கள் ஆனால் அதன் வசனங்களை காகிதங்களில் எழுதி அதை குழந்தைகளுக்கு இடுப்புக்கு கீழே தொங்கவிட்டு ரசிக்கிறீர்கள் உங்கள் செயல்கள் உங்களுக்கு புரிய வில்லையா?
சயனைடு குப்பியும் தாயத்தும் ஒப்பீடு


இதோ கீழ்கண்ட நபிமொழிகளையும் திருமறை வசனங்களையும் ஆராய்ந்து பாருங்கள் தெளிவு பிறக்கும்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள். [நூல்-புஹாரி எண் 2653 ]
 
 இந்த இறைவசனத்திற்கு என்ன அர்த்தம்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (அல்குர்ஆன்)

தீன்குலத் தாய்மார்களே
உங்கள் குழந்தைக்கு சிறு துன்பம் நேர்ந்தவுடன் சமாதிகளை வணங்கி, ஹஜரத்துகளிடம் தாயத்து வாங்கி கட்டுகிறீர்களே இது நியாயமா?
உங்கள் குழந்தைக்கு நேர்ந்த துன்பத்தை அல்லாஹ்விடம் முறையிடமாட்டீர்களா? அல்லாஹ்வுக்கு சிறு உறக்கமோ ஆழந்த உறக்கமோ ஏற்படாது என்று மேற்கண்ட வசனம் கூறுகிறதே இதை உங்களால் உணர முடியவில்லையா?
அல்லாஹ்வுக்கு உங்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை சூழ்ந்து அறிகிறவன் என்பதை உங்களால் உணர முடிய வில்லையா?
மறைவானவற்றை அல்லாஹ்வைத்தவிர யாரும் அறிந்துக் கொள்ளமுடியாது என்று திருமறையில் அடிக்கடி கூறப் பட்டுள்ளதே அதை உங்களால் உணர முடியவில்லையா?
 
நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 46:4)
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
 (திருக்குர்ஆன், 039:065, 066)
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)
நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘நீ கேட்டால் அல்லாஹ்விடம் கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ (திர்மிதி)
 
அல்லாஹ் மிக அறிந்தவன்
அல்ஹம்துலில்லாஹ்
                                                                              By:FARIS FANA

பொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடையே இருக்கும். பின்பு, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மறுபடி அதே தவறு நம் வாழ்வில் புகுந்துவிடும். உதாரணத்திற்கு, பொய் பேசுவது!!! "ஆ......இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லையே...." என சிறு அளவில் தொடங்கி பெரிய அளவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

அதுபோலவே, புறம் பேசும் பாவமுமாகும். சும்மா..... அப்பப்ப பேசும்போது யாரைப் பற்றியாவது ஒரு பிட்டைப் போடுவது. அது உண்மையா.... இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது.

                                            புறம் பேசுதல் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: புறம் பேசுதல் என்றால் என்ன என்றங்களுக்கு தெரியுமா? அதற்கு அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்றோம். அதற்கு அவர்கள் உங்களது சகோதரர் வெறுக்கும் வண்ணம் அவரைப் பற்றி பேசுவதாகும் என்றார்கள். அவரிடம் இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால் என்னவாகும் என்று கேட்கப்பட்டதற்கு 'அது அவரிடம் இருந்தால் நீ புறம்பேசியவனாவாய்; அது அவரிடம் இல்லாத பட்சத்தில் அவதூறு பேசியவனாவாய்' என்றார்கள். - முஸ்லிம் 6265, 2589

புறம் பேசுவது என்றாலே நம் அனைவருக்கும் இந்த குர் ஆன் வசனம் தான் நினைவுக்கு வரும்:
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
 
அப்பப்பா... சகோதரனின் மாமிசம் உண்பதென்பது நினைத்துப் பார்க்கவே அருவருக்கத்தக்க விஷயமல்லவா? புறம் பேசுவது எத்துணை பெரிய பாவமென்றால் இறைவன் அதற்கு இப்படியொரு உதாரணத்தைக் கூறுவான்? நாம் அதைச் சிந்தித்து உணர வேண்டாமா?

புறம் பேசுவது தொடர்பான இறைவசனங்களும் ஹதீஸ்களும் அதிகமதிமம் நம்மிடையே இருக்கின்றன. ஒவ்வொன்றும் நேரிடையாக இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளன. ஒவ்வொன்றையும் நம் ஆழ்மனத்தில் பதியவைத்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவோமாக! நம் குழந்தைகள் அவர்களது நண்பர்களைப் பற்றி குறைகூறினால் அப்பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயல வேண்டுமே தவிர அவர்களுடன் சேர்ந்து நாமும் புகார் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. அவர்களது நண்பர்கள் பேரிலேயே குற்றமிருந்தாலும் 'அப்படி சொல்லக்கூடாது. உன்னைப் பார்த்து உன் நண்பன் அப்படி சொன்னால் உன் மனது எவ்வளவு வேதனைப்படும்' என்று வயதுக்கேற்றவாறு விளக்கமளித்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.
50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் 'அந்த மனிதர் பார்க்கிறாரா...இவர் பார்க்கிறாரா?' என கவனிக்கும் நாம் நம்முடைய ஒவ்வொரு சொல்லையும் கண்காணிக்க ஒருவரை நியமித்த இறைவனுக்கு அஞ்சுவோமாக!


புறம் பேசுவதா? அது பெண்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் என்று கைநீட்டுபவர்களே... குர் ஆனில் புறம் பேசுவது பெண்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை... பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. மாறாக, பெண்களே அநேகமாக புறம் பேசப்படுகிறார்கள். இப்போதுள்ள காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். "பிள்ளையை வளர்த்திருக்கும் அழகைப் பார்" என்று கை நீட்டப்படுவது யார் மீது??...அந்த குடும்பத்தின் தலைவனா??....இல்லையே.. அந்தக் குடும்பத்தின் தலைவிதானே... எந்தத் தாயாவது தன் குழந்தை சீர்கெட வேண்டுமென்றோ... குடும்பத்தின் மானம் போகவேண்டுமென்றோ நினைப்பாளா? ஒரு குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பது குடும்பத்தலைவனாக இருக்கும்போது பழி மட்டும் குடும்பத்தலைவியின் மீதா? எந்த நிலையிலுமே உண்மை நிலையறியாமல் எந்த முஃமின் மீதும், அதுவும் குறிப்பாக முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறப்படக்கூடாது என்பதற்கு இறைவனின் இவ்வசனமே போதுமான ஆதாரமாகும்.

 


24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
விரும்பியதை பேசுவதற்கும் விரும்பியதை உண்பதற்கும் மட்டுமே நமக்குப் பயன்படும் நம் நாக்கு மறுமையில் எத்துணை பெரிய காரியம் செய்யவிருக்கிறது பார்த்தீர்களா? இவ்வளவு பெரிய உடலில் இத்துணூண்டு இருக்கும் நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லாமல் இருக்க நம் இறைவன் துணை புரிய வேண்டும்.


அப்படியானால், யாரைப் பற்றியும் பேசவே கூடாதா? பேசுங்கள். கண்டிப்பாக பேசுங்கள், அவர் மனம் மகிழும் விதம் பேசுங்கள். உண்மையைப் பேசுங்கள். அவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயத்தைப் பேசுங்கள். அவர் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசுங்கள்.

அவரிடம் இருக்கும் கெட்ட விஷயங்களையும் பேசலாம், அது சொல்லப்படும் நபருக்கு உதவிகரமாக இருக்கும், அவரை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கும் என நீங்கள் நினைத்தால் பேசுங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் வட்டி தொழில் செய்கிறார், அந்த குடும்பத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் ஒருவர் உங்களிடம் வந்து விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்த உறுதி செய்யப்பட்ட உண்மையைச் சொல்லுங்கள். அம்மனிதரும் தன்னை அத்தவறிலிருந்து திருத்திகொள்ள முனையலாம். இதை நானாக சொல்லவில்லை. ஆதாரமான ஹதீஸை முன்வைக்கிறேன்.

பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.



நான் "இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.


அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 2953
 
இந்த ஹதீஸில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) என்பவர் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றி விசாரிக்கும் பொழுது நபிகளார் தமக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்கிறார்கள். அதையும் மீறி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் 'இல்லை..ஏழையென்றாலும் பரவாயில்லை முஆவியையே மணந்துகொள்ள விரும்புகிறேன் என்றோ எத்துணை பெரிய கோபக்காரரையும் மாற்றும் பக்குவம் என்னிடத்தில் உள்ளது' என்றோ சொல்லியிருந்தால் நபிகள் வேறு ஆலோசனை எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு தம்மால் எதிர்காலத்தில் எதுவும் பிரச்சினை வந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கத்தில் உண்மையைச் சொல்லியிருப்பதால் இது புறம் பேசுவது கிடையாது.

அதையும் மீறி நாம் மூன்றாம் நபரைப் பற்றி பேச நேர்ந்தால் அந்நபர் உங்கள் முதுகுக்கு பின்னால் நிற்பதாக எண்ணிக் கொண்டு பேசுங்கள். அவர் அதனைக் கேட்க நேர்ந்தால் உங்களைப் பற்றி வருத்தம் கொள்ளமாட்டார் என நீங்கள் நினைத்தால் மட்டுமே பேசுங்கள். ஏனெனில் தவறாக நீங்கள் பேசிய ஒரு சொல் அவரை பாதித்துவிட்டால் அதுவும் ஒருவகையில் அநீதியேயாகும். எந்த பாவத்தையும் தான் விரும்புவருக்கு மன்னிப்பேன் என சொல்லியிருக்கும் இறைவன் தனக்கும் அநீதியிழைக்கப்பட்டோருக்கும் இடையில் எந்த மறைவுமில்லை (ஆதாரம் புஹாரி 1496) என சொல்லியிருப்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்வோமாக!.

அதை அவர் மனதார மன்னிக்காவிட்டால் நேரும் நிலையைச் சற்று பாருங்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்
புஹாரி 2317.

சுப்ஹானல்லாஹ்..ஆயுள் முழுவதும் சிறுகச் சிறுகச் சம்பாதித்த நன்மைகள் இப்படி மற்றவருக்குச் செல்வதை நாம் விரும்புவோமா? இது தான் தண்டனை என தெரிந்த பிறகும் அப்பாவத்தைச் செய்யும் தைரியம் நமக்கு வராமல் இறைவன் பாதுகாப்பானாக.
நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புஹாரி , 213; முஸ்லிம் , 292
 
புறம் பேசும் பாவமானது அதைப் பேசும்போது அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால் அதன் விளைவுகளைப் பார்த்தால் அவ்வளவு பயங்கரமாக இருக்கின்றன. கப்ரிலும் மறுமை நாளிலும் அவ்வேதனையான விளைவுகளிலிருந்து இறைவன் நம்மனைவரையும் காப்பானாக.

புஹாரி 6136 : அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் தன் அண்டைவீட்டாருக்கு கெடுதல் செய்யாதீர்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் விருந்தினரை உபசரியுங்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் நல்லதையே பேசுங்கள் அல்லது (தேவையற்ற பேச்சுக்கள்,பொய் மற்றும் புறம் பேசுதல் ஆகியவற்றிலிருந்து நீங்கி) மௌனமாய் இருங்கள்.

மௌனமாக இருப்பது நல்லது என சொல்லப்பட்டிருந்தாலும் பேசப்படும் விஷயம் உறுதிசெய்யப்படாததாக இருந்தால் அதை நாம் நிரூபிக்க முயல வேண்டும். அவ்வாறு செய்தால் இறைவன் மறுமையில் நமது பாவங்களையும் மற்றவரிடமிருந்து மறைப்பான்.
எந்த ஒரு அநீதியையும் நாம் நம் வாயால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால் கையால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால் நாம் நம் மனதால் அதை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது நபிமொழி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் தன் நாவை தவறான பேச்சிலிருந்தும் தன் மறைவான உடலுறுப்புகளை தவறான உறவிலிருந்தும் தடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை வாக்களிக்கிறேன். (புஹாரி & முஸ்லிம்)

எவர் அடுத்தவர் குறைகளை தோண்டி, துருவி ஆராய்கிறார்களோ, அவர்களின் குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் பகிரங்கப்படுத்துவான் என (ஆதாரம்:திர்மிதீ 1655) நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபு பர்ஸாஹ் அல் அஸ்லமி அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒருவரின் அங்க அடையாளங்களில் உள்ள குறைகளைக் கூறுவது கூட புறம்பேசுதலாகும். அன்னாருடைய தொழிலைச் சொல்லியோ ;அவருடைய தாய்தந்தை பெயர் சொல்லியோ அடையாளப்படுத்தலாம். வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே அவருடைய உடல்குறையை நாம் கூறலாம்.
முடிவாக, ஒரு சிறிய விஷயம் தான்... அடுத்தவரை பற்றி பேசக்கூடாது என்பது. ஆனால் அதிலிருந்து நாம் நம்மை விலக்கிக்கொள்ள என்ன பாடுதான் பட வேண்டியுள்ளது.

இருவர் பேசிக்கொள்ளும்போது ஒருவர் கூறுவார்;

(மூன்றாம் நபராகிய) அவர் ஏன் அப்படிச் செய்தாரோ தெரியவில்லை.

அதற்கு அடுத்தவர்:ம்...அவர் இதற்காகத்தான் அப்படி செய்திருக்கவேண்டும். (என தன் கற்பனையில் உதித்ததை கண்,காது,மூக்கு மட்டுமல்ல..அத்ற்கு ஆடையே உடுத்தி அழகுபார்த்துவிடுவார்.. அஸ்தஃபிருல்லாஹ்)

அதற்கு முதலாமவர்: ஆமாம்....அதற்காகத்தான் அவர் அப்படி செய்திருப்பார்...

அவ்வளவுதான்... இது அப்படியே பலபேரிடம் பரவி, அந்த குறிப்பிட்ட நபரிடம் போய்ச் சேரும்போது, அவர் மயங்கி விழாத குறையாக, அவருக்குத் தோன்றாத எண்ணம் அவர்முன் உருவெடுத்து நிற்கும்போது அவர் மனம் என்ன பாடுபடும்??? அந்த மூன்றாம் நபராக நாம் இருந்தால் எவ்வளவு வேதனைப்படுவோம். நமக்கு எதை விரும்புகிறோமோ அதை பிறருக்கும் விரும்பாதவரை முழுமையான முஸ்லிமாக முடியாதே?....நாம் பிறரிடம் பேசும்போது இதைமட்டும் நினைவில் வைத்தாலே பல தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாமே சகோதரர்களே!

சுருக்கமாக, எந்தெந்த நிலைகளில் பிறரைப் பற்றி பேசலாம் என பார்க்கலாம்:  1. ஒருவர் வெளிப்படையாக ஹராமானவற்றைச் செய்யும்போது (உதா. சிகரட்,மதுவிற்கு பழக்கப்பட்டவர், வட்டிவாங்குபவர்,)

2. நாம் சொல்வது கேட்பவரை (அதாவது இரண்டாம் நபரை) ஏதேனும் இழப்பிலிருந்து பாதுகாக்கும் என உறுதியாக தெரிந்தால்.
3. மருத்துவத்திற்கு அவரது குறைகளைச் சொல்லியே ஆகவேண்டிய நிலையில்.

4. இப்படி நாம் சொன்னால் குறிப்பிட்ட நபர் தன்னை திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும்போது. (உதா. அதிகமாகக் கோபப்படுபவர்)

5. ஒருவரிடம் நமக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாகத் தெரிந்தால் அவரிடம் நமக்கு அநீதி இழைத்தவர் செய்த அநியாயங்களை விவரித்தல்

ரத்தினச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில்,
104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

எனும் வாக்கியத்தில் இறைவன் நமக்குத் தரும் எச்சரிக்கையை வாழ்வில் மேற்கொண்டு இம்மையில் நம்மை நாம் பாதுகாத்தால், மறுமையில் நம்மைப் பாதுகாக்க இறைவனே போதுமானவனல்லவா!
                                                             By:faris fana

 ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் ‘அரஃபா நோன்பு’ என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 

துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம்(2151)

இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: இப்னுமாஜா(1722)

‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா?

நாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்!

எனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:

“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி); நூல்:புகாரி(1906)

அதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)

மேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

“நீங்கள் ‘நோன்பு’ என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். ‘நோன்புப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்:திர்மிதீ

துல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 – ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் ‘ஒன்பதாவது நாள்’ என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.

“நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்” என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள்: பூதாவூத், நஸாயி, அஹ்மத்

“துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்:முஸ்லிம்(2151)

அதேசமயம் ‘ஒன்பதாம் நாள்’ என்று குறிப்பிட்டு சொல்லாமல் ‘அரஃபா நாள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி);நூல்:முஸ்லிம்(1977)

துல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், ‘அரஃபா நாள்’ என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்? என்பதைதான் நாம் கவனிக்கவேண்டும்.

ஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!
தூய வழி என்கிற இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை. எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் இங்கு மறுப்பிரதி எடுத்து கொடுத்துள்ளேன். சவூதியில் நாளை அரஃபா, இன்றிரவு சவூதி வாசிகள் நோன்பு பிடிக்க சஹர் செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ். ..............By:FARIS FANA



இதையும் பார்க்க:-

                   *  துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்பு...
                      *  பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :
                 *  ஹஜ்ஜு என்னும் அருள்மாதம்
                 *  இஸ்லாத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது..?
                 *  இஸ்லாத்தை ஏற்ற 28 மாற்று மத சகோதர்கள்.
                 *  இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு

                                       தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

o மன அமைதி பெறுவதற்கு மனைவி அவசியம்.o வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.
o துறவறத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

o திருமணம் உறவை வெறுத்து ஆண்மை நீக்கம் செய்துகொள்ளவும் அனுமதியில்லை.
o தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டும் - வழிகளை நாடக் கூடாது.
o ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ உறவு கொள்ளவும் தடை.

மன அமைதிக்கு மனைவி அவசியம்:
நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சித்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன" (அல்குர்ஆன் 30:21) 


மனிதன் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறான்.
அவற்றிலிருந்து அவன் மன அமைதி பெறுவதற்கு அவனது துணைவி பேருதவியாக இருப்பாள் என்று திருக்குர்ஆன் கூறி திருமண உறவின் அவசியத்தை விளக்குகிறது. மேலும் "நீங்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்க்ககூடிய நிலையில் பகலையும் அல்லாஹ்வே ஏற்படுத்தினான். அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் மனிதர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை" (அல்குர்ஆன் 40:61)

பகலில் உழைக்கும் மனிதனுக்கு இரவு என்பது அமைதி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் உழைப்பவன் இரவில் உறங்கி எழும்போது அவன் அமைதி பெறுகிறான். இது போல் மனிதனுக்கு வாழ்க்கைத் துணைவி அமைந்துள்ளாள்.இவ்வுலக வாழ்வில் திருமணம் மனிதனுக்கு அவசியம் என்பதால் இவ்வுலகில் மனிதர்களுக்கு நல்வழிகாட்ட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் உட்பட அனைவரும் திருமணம் செய்துள்ளார்கள்."உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)

திருமண உறவைத் தவிர்க்க முடியுமானால் முதலில் அதை நடைமுறைப்படுத்திக் காட்ட சாத்தியமானவர்கள் இறைத் தூதர்கள்தான். ஆனால் திருமண உறவு தவிர்க்க முடியாதது என்பதால் இறைத் தூதர்கள் அனைவருக்கும் மனைவி மக்களை அல்லாஹ் கொடுத்துள்ளான்.

வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்:
மஹர் கொடுத்துத் திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களுக்கு செல்வந்தர்கள் உதவி புரிந்து திருமணம் செய்து வைக்குமாறு இறைவன் கட்டளை விடுவது திருமணத்தின் அவசியத்தை உணர்த்துகின்றது.
"உங்களில் வாழ்க்கைத்துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்" (அல்குர்ஆன் 24:33)

"இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5065, முஸ்லிம் 2710)

துறவறத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை:
திருமணம் என்ற உறவை முறித்து விட்டு, துறவறம் செல்லவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. துறவறம் மூலம் இறையருளைப் பெற முடியும் என்ற கருத்தை இஸ்லாம் மறுக்கிறது."உஸ்மான் பின் மழ்ஊன்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்அவர்கள்அனுமதியளிக்கவில்லை" (அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீ வாக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி (5074), முஸ்லிம் (2715)


மேலும் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டு தான் இறையருளை அடைய முடியும் என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இறையருளை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக மூன்று நபர்கள், கூடுதலாக வணக்கம் புரிய முடிவு செய்தனர். அதில் ஒருவர், இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இரண்டாம் நபர், ஒருநாள் விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்றார். மூன்றாவது நபர், நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்; ஒரு போதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்றார்.

இந்தச் செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிய வந்தபோது, "அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடிந்தும் உள்ளேன் ஆகவே என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். (நூல்கள்: புகாரி 5063, முஸ்லிம் 2714)

திருமணம் உறவை வெறுத்து ஆண்மை நீக்கம் செய்துகொள்ளவும் அனுமதியில்லை:
திருமணம் உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாததாலோ ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை."நான் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டோம். அவ்வறு செய்ய வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5075, முஸ்லிம் 2720)


தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டுமே தவிர வேறு வழிகளை நாடக் கூடாது:
ஒரு ஆணோ, பெண்ணோ குறிப்பிட்ட வயதை அடையும் போது இயற்கையாக அவர்களிடம் ஆசை உணர்வு ஏற்படும்.இந்நேரத்தில் அந்த உணர்வை முறையான திருமணத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர விபசாரம், சுய இன்பம், ஓரினச் சேர்க்கை போன்ற வழிகளில் தீர்த்துக் கொள்ளக் கூடாது.அல்லாஹ்வும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்."விபசாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன்: (17: 32)

"விபசாரம் செய்பவன், விபசாரம் செய்யும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 5578, முஸ்லிம் 100)

திருமண வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படும் போது, அல்லது திருமணம் முடிந்தவர்கள் மனைவியை விட்டுப் பலமாதங்கள் பிரிந்து இருக்கும் போது அல்லது இதுபோன்ற வேறு நிலைகளில் இருப்பவர்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர்.இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. தன்மனைவியிடமே இன்பத்தையடைய வேண்டுமே தவிர வேறு வழிகளை நாடக் கூடாது:தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்" (அல்குர்ஆன் 23: 5-7)

தம் மனைவி அல்லது அடிமைப் பெண்களைத் தவிர மற்ற வழிகளில் இன்பம் பெறுபவன் பழிக்கப்பட்டவன், வரம்பு மீறியவன் என்ற இவ்வசனம் சுய இன்பத்தைத் தடை செய்துள்ளது. நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் தான் உலகில் முதன் முதலாக ஒரினச் சேர்க்கை என்ற கெட்ட பழக்கம் உருவானது. இந்தப் பழக்கமும் இஸ்லாத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்டதாகும்."லூத்தையும் (தூதராக அனுப்பினோம்) "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராக வெட்கக்கேடான காரியத்தையா செய்கிaர்கள்?" என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். "நீங்கள் பெண்களை விட்டுவிட்டு, இச்சைக்காக ஆண்களிடம் செல்கின்aர்கள்! நீங்கள் வரம்புமீறிய கூட்டமாகவே இருக்கிaர்கள்" (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7: 80,81)

ஆணுடன் ஆணோ, பெண்ணுடன் பெண்ணோ உறவு கொள்ளவும் தடை:
இதைப்போன்று தற்காலத்தில் ஏற்பட்டுள்ள லெஸ்பியன் உறவுகள் (பெண்களுடன் பெண்களே கொள்ளும் உறவு) இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த உறவு முறைகளைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார்கள்:
"ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்கவேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம் 565, அஹமத் 11173)

......................................................................By:FARIS FANA............................................................

                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஹஜ்ஜு என்னும் அருள்மாதம்
• ஆதி இறைவன் இல்லம் ஒன்றே
• அழகாய் ஹஜ்ஜு செய்திடவே
• வேதம் தன்னில் "கடமை" என்றே
• விளக்கம், சொன்னான் இறையோனே!
 
• ஓதும் வேதம் வழியில் சென்றால்
• உண்டாம் சொர்க்கப் பதியன்றோ!
• கோது போக்கி ஏதம் நீக்கக்

• குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள் மாதம்!
 • பாவம் எண்ணி வருந்தி யழவும்
• பாதை காட்டி அறம் செய்தும்
• சாபம் நீங்க உறவைத் திருத்தி
• சார்ந்து வணக்க வழிபாட்டில்
• கோபம் கொன்று குணத்தில் ஒளிரும்
• குன்றாய் நிற்க வழிகாட்டி
• ஏமம் ஆகி இறையை நெருங்க
• இலங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• நகத்தை வெட்டி அகற்றி முடிகள்
• நபிசொல் படியே குளித்திடவும்
• அகத்தில் கறையை அகற்றி மறுமை
• அடையாளத்தைக் காண்பித்தே
• முகத்தில் கண்ணீர் வழிய பக்தி
• முறையாய் "இஹ்ராம்" கட்டிடவும்
• தகைக்கும் வெயிலை குளிராய்க் காட்டி
• தளிர்க்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• கருப்பர், சிகப்பர், வெள்ளையர் இன்னும்
• காணும் பற்பல நிறத்தினரும்
• இருப்பார் கஃபா இல்லத் தருகே
• எல்லாம் ஒருதாய் மக்க ளென
• "இறைவா!" உன்முன் வந்தோம் வந்தோம்
• இணையே இல்லை உனக்கென்றே
• நிறைவாய் "தல்பியா"ச் சொல்லிச் சொல்லி
• நிற்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• தந்தை ஆதம் கட்டி "தவாபு"
• தகையாய்ச் செய்ய நபிமார்கள்
• சிந்தை மகிழச் சுற்றி சுற்றி
• சிறந்தார்; நபியாம் இபுறாஹீம்
• அந்த பாலகர் இஸ்மா யீலும்
• அழகாய்க்கட்டி முடிக்க அதை
• எந்தை அஹ்மது நபிவழிகாட்டி
• எழுந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• நெஞ்சம் உருக, நிலைதடுமாற
• நிறைவாய் ஏழு முறை சுற்றி
• கெஞ்சிக் கெஞ்சி இறையைப் புகழ்ந்து
• கேட்க, நாட்டம் நிறை வேற,
• அஞ்சி அஞ்சி அகத்தை ஒடுக்க
• அழுக்கு நீங்கி அருள் சுரக்க,
• மிஞ்சும் தூய்மை மேலாய் மலர
• மிளிர்ந் தெழும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• சொர்க்கக் கல்லாம் ஹஜருல் அசுவத்தை
• தொட்டு தொட்டு முத்தமிட
• தர்க்கம் இல்லாச் சரித்திரம் – இஸ்மாயீல்
• தங்கப் பாதம் பட்டவுடன்
• பெருக்கெடுத்தோடும் "ஜம் ஜம்" தண்ணீர்
• பெருமை கண்டு குடித்திடவும்!
• உருகிக் கேட்க இறையருள் பெறவும்
• உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• தண்ணீர்க்காக அன்னை ஹாஜிரா
• தாவி ஓடிய செயல் நினைந்தே
• கண்ணீர் விட்டு நாமும் ஓடிக்
• கருத்தைத் துலக்கி சொர்க்கம் பெற
• புண்ணிய சீர்சபா மருவாக் கிடையே
• புகுவார் கூட்டம் காட்டிடவும்
• மண்ணும் விண்ணும் கடலும் புகழ
• மலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• பாவமெல்லாம் விட்டோம் என்று
• படைத்தோன் முன்னால் உறுதி செய
• தோய்ந்தே உள்ளம் தலைமுடி களைந்தே
• துயரம் மாயும் நிலை காட்ட
• மாய்ந்து வஞ்சக நெஞ்ச மெல்லாம்
• மாண்பாம் மலரில் மணம்வீச,
• ஆய்ந்தே உலகம் அதியம் கொள்ள
• அலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• அரிய ஹஜ்ஜு நிறைவு பெறுமாம்
• அரஃபா வந்துத் தங்கிடவும்
• கரிய பாவம் எல்லாம் உலர்ந்து
• கரையைக் கடக்கச் செய்திடவும்!
• உரிய "ஹாஜி" பட்டம் பெறவும்
• உயர்ந்த படித்தரம் பெற்றிடவும்
• தரித்தே இறையின் அருளில் இன்புறத்
• தாங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• அருளின் கடலாம் முஜ்தலிபாவில்
• அழகாய்த் தங்கி அருள்பெறவும்
• குருபா னீ யைக் கொடுத்து மினாவில்
• கோதில் இறைக்கே பணிந்திடவும்
• பெரும்பகையான ஷைத்தான் ஓடப்
• பேணிக் கற்கள் எறிந்திடவும்
• உரிய வழியை முறையாய்க் காட்டி
• உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம்!
 
• மாமணம் கமழும் மதீனா நகரில்
• மாநபி தம்மைத் தரிசிக்கவும்
• தூமனம் கொண்டு ஸலவாத் தோதி
• தூய்கலீஃபாக்களை நினைந்திடவும்
• காமணம் வீசும் கஸ்தூரி வாடை
• கனிந்த நபியைச் சூழ்ந்திடவும்
• தாயாய் வந்துத் தாங்கி நிற்கும்
• தகையாம் ஹஜ்ஜாம் அருள்மாதம்!

                                                 அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா?
                                                 “பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :
........................................................................By:FARIS FANA........................................

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

அளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்! அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)


                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!


புனித ஹஜ் கடமையை நிறை வேற்ற உலகம் முழுவதி லிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.

இதோ இன்னும் சில தினங்களில்  

லப்பைக்..... அல்லாஹும்ம லப்பைக்..
லப்பைக்.......லாஷரீகலக லப்பைக் .....
இன்னல் ஹம்த, வன்னி'மத, லகவல் முல்க் ......
லா ஷரீகலக்..

எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ 758 )



என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

சரி பிரார்த்தனை என்பது பற்றி அல்லாஹ்வின் இறுதி இறை தூதர் நபிகள் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? இதோ ஆதாரத்துடன் விளக்குகிறேன் படியுங்கள்!
”பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்‘ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372

நம் துவா என்ற பிரார்த்தனைகளை எவ்வாறு கேட்பது?
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்
பிரார்த்தனை செய்யும் போது ”இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.
அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

துவா என்ற பிரார்த்தனையின்போது அவசரப்படக்கூடாது
நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340

உங்கள் துவா என்ற பிரார்த்தனை விரைவாக ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?
”உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ”அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908


கடமையான தொழுகைக்குப் பின்.
கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.”எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499


  இதையும் பார்க்க >>
                           * நபிமார்கள் கேட்ட துஆக்கள்...!
                           * பிரார்த்தனைகள் (துவா)

1. தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பிஸ்மிக அமூது வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)

2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه பி(இ)ஸ்மில்லாஹ் பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345

10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.

11. சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ:

بِسْمِ اللَّه பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும்.

13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ அல்ஹம்து லில்லாஹ் பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

15. பயணத்தின் போது ஓதும் துஆ:

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

16. தும்மல் வந்தால் ஓதும் துஆ:

தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர் يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
                               
                                              உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா?

                                        By:FARIS FANA

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்:
உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23)

                                     தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

 மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.

(ويسئـلونك عن المحيض قل هواذى فاعـتزلواالنساءفى المحيض ولاتـقربوهن حتى يـتهرن (2:222)      

'இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்'அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்'



                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய வலீமா என்ற ஒரு கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அதை எப்போது செய்யலாம்..? கண்ட காரணத்தை சொல்லி வலிமாவை புறக்கணிக்க ஆதாரம் உண்டா..?

                                      தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

பொதுவாக வேறு எந்த ஒரு வேத நூலுக்கும் இல்லா சிறப்பு குர்-ஆனுக்கு மட்டும் வழங்கப்பட்டது யாதெனில் அந்நூலின் "பிரத்தியேக பாதுகாப்பு".இங்கு குர்-ஆனின் பாதுகாப்பை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டு சொல்லும்போது, இக் கூற்றை எதிர்க்க விரும்புவோர்., ஆரம்பமாக வைக்கும் வாதம் தாம்

1.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது எப்படி?
2.குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது போல் அதற்கு முந்தைய வேதங்களை ஏன் இறைவன் பாதுக்காக்கவில்லை?அஃது இறைவனால் ஏன் பாதுக்காக்க முடியவில்லை?

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாரும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும், நம் மீதும் மற்றும் கியாம நாள் வரை அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றக் கூடிய முஸ்லிம்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக. ஆமீன்.

அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.

1) இணைவைத்தலின் தீமைகள்: -

1.ஒருவர் தம் வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் பாழாகிவிடும்

2.இறைவன் இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்

3.இணை வைத்தவனின் கதி மிகவும் மோசமானது

4.இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

நல்லமல்களை அழித்துவிடும் ஷிர்க்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.         (அல்குர்ஆன் 6:88)

அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65-66)

இணைவைத்தலைத் தவிர ஏனைய பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னிப்பான்: -

அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 4:48 )இணை வைத்தவனின் கதி: -

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)

இறைவனுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )

இந்த அளவிற்கு படுபயங்கரமான இணைவைத்தல் என்பது பற்றி நாம் முழுவதுமாக அறிந்திருக்க வில்லையானால் அவற்றிலிருந்நு பரிபூரணமாக தவிர்திருப்பது என்பது இயலாத காரியம். எனவே ஷிர்க் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை என்பவை பற்றி இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஆராய்வோம்.

இன்று நமது சமுதாயத்தில் இணைவைப்பது (ஷிர்க்) என்றால் என்ன என்று கேட்டால் மிக எளிதாக கிடைக்கும் பதில் ‘சிலைகளை வணங்குவது’ என்றே நம்மில் பெரும்பாலோர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் இணை வைப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய அறியாமையே ஆகும்.


2) ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்பது தவ்ஹீத் (அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்) என்பதற்கு நேர்மாற்றமான அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலாகும்.

அதாவது ஷிர்க் என்பது,

- அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத பிறருக்கு செய்வது

- அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஆற்றல்களில் சிலவற்றை அல்லாஹ் அல்லாத பிறருக்கும் இருப்பதாக கருதுவது
ஆகியவையாகும்.

ஷிர்கின் வகைகள்: -

ஷிர்கில் மூன்று வகைகள் உள்ளன. அவைகளாவன: -

1.பெரிய ஷிர்க்

2.சிறிய ஷிர்க்

3.மறைமுக ஷிர்க்

பெரிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவைகளுக்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

சிறிய ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்காக செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் பிறர் பார்த்து பாராட்ட வேண்டும் என்று கருதி வணங்குவது அல்லது

பிறர் தம்மை தவறாக நினைத்து விடக் கூடாது என்பதற்காகவோ அல்லாஹ்வை வணங்குவது

இவ்வாறு வணக்கம் புரிவது சிறிய ஷிர்க் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் சிறிய ஷிர்க் குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மறைவான ஷிர்க் என்றால் என்ன?

மறைவான ஷிர்க் என்பது அல்லாஹ் நம்மீது விதித்துள்ள கட்டளைகளை ஏற்று அதன் மீது திருப்தி கொண்டு அதன்படி செயல்படாமல் அவற்றை அலட்சியம் செய்வதாகும்.

3) ஷிர்குல் அக்பர் ஒரு விளக்கம்: -

இந்த சிறிய ஆய்வுக்கட்டுரையில் ஷிர்குல் அக்பர் என்று சொல்லப்படக்கூடிய மாபெரும் இணைவைத்தல் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆராய்வோம்.

ஷிர்குல் அக்பர் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு அல்லாதவர்களுக்கு செய்வதும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஆற்றல்களை பிறருக்கு இருப்பதாக கருதுவதும் என பார்த்தோம்.

நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களில் பலர் இஸ்லாத்தின் மூல மந்திரமான ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பதன் பொருள் அறியாமல் தான் இந்த ஷிர்க் என்ற கொடிய பாவத்தில் சிக்கி உழல்கின்றனர். வணக்கம் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் கூறுவது தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் என்பார்கள். வணக்கம் என்பது இவைகள் மட்டுமன்று. அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) எவைகளையெல்லாம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டு இருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் வணக்கமாகும். அவற்றை அல்லாஹ்வை விடுத்து மற்றவருக்கு செய்தால் அவைகளும் ஷிர்கின் வகையைச் சேர்ந்ததாகும்.

உதாரணமாக பின்வரும் அனைத்தும் வணக்கத்தின் வகைகளாகும். அவைகளை அல்லாஹ்வுக்கு மட்டுமே நாம் செய்ய வேண்டும்.

■துஆ (பிரார்த்தனை) செய்தல்

■ருகூவு / சஜ்தா செய்தல்

■அழைத்து உதவி தேடுதல்

■பாதுகாவல் தேடுதல்

■நேர்ச்சை செய்தல்

■தவாபு செய்தல்

■சத்தியம் செய்தல்

■குர்பானி கொடுத்தல்

■ஆதரவு / தவக்குல் வைத்தல்

■அல்லாஹ்வைப் போல் பிறரை நேசித்தல்

ஒருவர் மேற்கண்ட அனைத்து செயல்களுமே வணக்கத்தின் வகைகள் என்று அறிந்துக் கொள்வாராயின் இன்ஷா அல்லாஹ் அவர் இந்த வணக்க முறைகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார். ஆனால் இவைகளும் வணக்கமே என்று புரிந்துக் கொள்வதில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

மேலும் ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக்கூடிய பண்புகள் மற்றும் ஆற்றல்கள் யாவை என அறிந்துக் கொள்வராயின் அவற்றில் இணை வைப்பதிலிருந்தும் தவிர்ந்துக் கொள்வார் இன்ஷா அல்லாஹ்.

இந்த சிறிய ஆய்வுக் கட்டுரையில் ஒரு சில உதாரணங்களின் மூலம் எவ்வாறெல்லாம் மக்கள் அல்லாஹ்வுக்கு அறிந்தோ அல்லது அறியாமையினாலோ இணை கற்பிக்கின்றார்கள் என்பதைப் பார்ப்போம்.

உதாரணம்-1: -

ஒருவர் சிங்கப்பூரிலிருந்து கொண்டு அல்லது உலகின் வேறு எந்த மூலையில் இருந்துக் கொண்டோ நாகூரில் அடக்கமாகியிருப்பதாக் கூறப்படும் ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்விடம் யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே என்னுடைய இன்ன தேவையை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் தங்களின் இடத்திற்கு வருகை தந்து தங்களுக்கு காணிக்கை செலுத்துகிறேன் என நேர்ச்சை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

இந்த இடத்தில் நாம் இவருடைய வேண்டுதலை ஆய்வு செய்தோமேயானால் இவர் பல வகைகளில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராகிறார். அவைகளாளாவன: -

1) வணக்க வழிபாடுகளில் இணை வைப்பது: -

அல்லாஹ்விடம் மாத்திரமே செய்ய வேண்டிய பிரார்த்தனையை, துஆவை ஷாகுல் ஹமீது அவுலியாவிடம் செய்தல்

அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய நேர்ச்சையை ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கு செய்தல்

2) அல்லாஹ்வுடைய பண்புகளில், ஆற்றல்களில் இணை வைப்பது: -

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) மற்றும் ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதுவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய ஒருவரின் இதயத்தில் உள்ள இரகசியத்தை அறியும் சக்தி உடையவன் என்ற பண்பை, ஆற்றலை ஷாகுல் ஹமீது பாதுஷாவுக்கும் இருப்பதாகக் கருதி அவரும் மனிதர்களின் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் அறிகிறார் என நம்புவது

அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்பாகிய பிரார்த்தனையை செவிமெடுத்து அதை நிறைவேற்றித் தரும் ஆற்றல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக கருதுவது.

சகோதர, சகோதரிகளே இங்கு நாம் கவனமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் அறிந்தோ அல்லது அறியாமலோ சர்வ சாதாரணமாக நம்மில் சிலர் செய்கின்ற இந்த வேண்டுதலில் இத்தனை வகையான ஷிர்க் நிறைந்துள்ளது. ஒருவர் மேற்கண்ட உதாரணத்தில் உள்ள பிரார்த்தனை (துஆ) செய்தல் மற்றும் நேர்ச்சை செய்தல் போன்ற வணக்கங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்பட வேண்டியவை என்றும், மேற்கண்ட உதாரணத்தில் கூறப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு மற்றுமே உரித்தானது என்றும் உணர்ந்துக் கொண்டால் அவர் இன்ஷா அல்லாஹ் இத்தகைய இணை வைத்தல்களிலிருந்து தவிர்ந்துக் கொள்வார். இவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஒளியில் ஆராய்வோம்.

துஆ (பிரார்த்தனை) செய்வதும் ஒரு வணக்கமே!: -

அல்லாஹ் கூறுகிறான்: -

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக (அல் குர்ஆன் 2:186)

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.               (அல் குர்ஆன் 40:60)

மேலும் அல் குர்ஆனின் வசனங்கள் 2:286, 7:55, 18:28, 35:14, 72:18 அனைத்தும் அல்லாஹ்விடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

பிரார்த்தனை (துஆ) ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் -ரலி, நூல்:அபூதாவூத், திர்மிதி)
மேற்கண்ட வசனங்கள் மற்றும் நபி மொழியில் இருந்து நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

■துஆ ஒரு வணக்கமாகும்.

■அல்லாஹ் சமீபமாக இருக்கிறான்.

■பிரார்த்தனைக்கு விடையளிக்கிறான்.

■அல்லாஹ்விடமே பிரார்த்திக்க (துஆ) செய்ய வேண்டும்

எனவே மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் நமது தேவைகளை அல்லாஹ்விடமே பிரார்த்திக்க வேண்டும். ஷாகுல் ஹமீது அவுலியாவிடமோ அல்லது வேறு எந்த வலியிடமோ, நபியிடமோ பிரார்த்தித்தால் அது ஷிர்க் எனப்படும் மன்னிக்கபடாத மாபெரும் பாவமாகும்.

நேர்ச்சை செய்வதும் ஒரு வணக்கமேயாகும்: -

நேர்ச்சை செய்வது ஒரு வணக்கம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனங்கள் சான்றுகளாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர். (அல் குர்ஆன் 2:270)

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். (அல் குர்ஆன் 76:7)
எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் நேர்ச்சை என்பதுவும் ஒரு வணக்கமே. அதை அல்லஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அதைவிடுத்து ஷாகுல் ஹமீது அவுலியா மற்றும் இன்னும் பிற அவுலியாவுக்குச் செய்தோமேயானால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைச் சேரும்.

எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ் மட்டுமே: -

ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

யாராவது ஒருவர் தாம் சிங்கப்பூரிலிருந்து ஷாகுல் ஹமீது வலியுல்லாஹ்வை அழைக்கும் போதும், அதே நேரத்தில் உலகில் வேறு எந்த இடத்திலிருந்துக் கொண்டும் அழைக்கக் கூடிய பல்லாயிரக்கணக்காணோர்களைப் பார்த்து அவர்களின் அழைப்பைச் செவிமெடுக்கிறார் என நம்புவது அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அஸ் ஸமீவுன் மற்றும் பஷீரன் என்ற நாமங்களை, பண்புகளை இறைவனல்லாத ஷாகுல் ஹமீது அவுலியாக்கு இணை கற்பிப்பது போலாகும்.

அவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கேட்கும் தன்மையையும் (அஸ் ஸமீவுன்) மற்றும் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவன் (பஷீரன்) என்ற தன்மையையும் அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் இருப்பதாக நம்மி அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”                    (அல் குர்ஆன் 4:134)
இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன் (அல்குர்ஆன் 67:13)
நம் மனதில் உள்ள நம்முடைய தேவைகளை அல்லது எண்ணங்களை நாம் வெளியே சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மட்டும் நாம் மனதிற்குள் நினைப்பதையும் வெளிப்படையாகப் பேசுவதையும் அறிகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். (அல் குர்ஆன் 16:19)

வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (அல் குர்ஆன் 21:110)

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில்: -

■உள்ளங்களில் மறைத்து வைப்பதை அறிபவனும்,

■இதயங்களிலுள்ள இரகசியத்தை அறிபவனும்,

■மனிதர்களின் மனதில் உள்ள தேவைகளை அறிபவனும்

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது உறுதியாகிறது. ஆனால் ஒருவர் இந்தப் பண்புகள், ஆற்றல்கள் ஷாகுல் ஹமீது அவுலியாவிற்கும் உண்டு அதனால் அவர் சிங்ப்பூரிலிந்து கேட்கும் அவரது தேவைகளை அல்லது அவருடைய மனதில் எண்ணியிருக்கும் நாட்டங்களை ஷாகுல் ஹமீது அவுலியா நிறைவேற்றித் தருகிறார் என நம்பிக்கை கொண்டு அதன்படி செயல்படுவாராயின் நிச்சயமாக அவர் அல்லாஹ், தனக்கு மட்டுமே இருக்கக் கூடியதாக கூறும் அந்தப் பண்புகளை, ஆற்றல்களை அவர் ஷாகுல் ஹமீது அவுலியாவுக்கும் பங்கிடுவதன் மூலம் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக கருதப்படுவார்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: -

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் – இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42)

மேலும், இதய இரகசியங்களை அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பல வசனங்கள் கூறுகின்றன. இது பற்றிய விளக்கத்தை ‘இதய இரகசியத்தை அறிபவன் அல்லாஹ்வே’ என்ற தலைப்பில் பார்க்கவும்.

பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே: -

நாம் எங்கிருந்துக் கொண்டு துஆ (பிரார்த்தனை) கேட்டாலும், எத்தகைய சூழ்நிலைகளில் இருந்துக் கொண்டு அழைத்தாலும் நம்முடைய அழைப்பச் செவியேற்று அதற்கு பதிலளிப்பவன், அந்த தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: -

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’             (அல் குர்ஆன் 40:60)

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக. (அல் குர்ஆன் 2:186)

‘உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்’ என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). (அல் குர்ஆன் 28:64)

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். (அல் குர்ஆன் 35:14)

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.                             (அல் குர்ஆன் 13:14)

‘எனக்கு இணையானவர்கள் என எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள்’ என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.’                                          (அல் குர்ஆன் 18:52)

எனவே எனதருமை சகோதர சகோதரிகளே மேற்காணும் வசனங்களின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளப் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த வசனங்களின் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை எனில்: -

■பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே

■அல்லாஹ்விடம் மாத்திரமே பிரார்த்தனை செய்யவேண்டும்

■அல்லாஹ்வைத்தவிர மற்றவர்களிடம் பிரார்த்தனை செய்தால் அவர்களால் அந்தப் பிரார்த்தனையைச் செவியேற்க இயலாது.

■கியாம நாள் வரை அவர்களை அழைத்தாலும் அவர்களால் பதிலளிக்க இயலாது

■கியாம நானில் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததை அவர்கள் நிராகரித்து விடுவார்கள்.

■அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவருக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.

எனவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் ஒருவர் பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே என நம்பிக்கை கொண்டு அவனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஷாகுல் ஹமீது அவுலியாவும் நம்முடைய பிரார்த்தனையைச் செவிமெடுத்து நமக்கு பதிலளித்து நம்முடைய தேவைகளைப் பெற்றுத்தருகிறார் என நம்பிக்கைக் கொண்டால் அது ஷிர்க் என்னும் இணை வைத்தலைத் தவிர வேறொன்றுமில்லை.
இன்ஷா அல்லாஹ் வளரும்…

இதையும் பார்க்க:-
                                     * கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!
                                     * மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)
                                     * சமாதி வழிபாடு
                               * இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...

By:FARIS FANA

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget