2012

அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் இன்னு அபூ ஸலமா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

நபி (ஸல்) அவர்கள் தட்டை சுத்தமாக்கிக்கொள்ளும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உங்களின் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாக வழித்துச் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ.
சாப்பிடும் போது கீழே விழும் பொருளை சுத்தம் செய்து உண்ண வேண்டும் என்பதையும், தட்டிலோ, விரல்களிலோ ஒட்டியிருக்கும் உணவை வீணாக்காமல் தட்டை வழித்தும், விரலை சூப்பியும் சுத்தமாகச் சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.
சாப்பிட்ட பின்…

நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டு எடுக்கப்படுமானால்… “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கkரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர முவத்தயின் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்புனா” என்று கூறுவார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி.
(துஆவின் பொருள்: தூய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின்பால் தேவையுடையவன் அல்ல உன்னை யாரும் விட்டுவிட முடியாது)
ஒரு அடியான் உணவை சாப்பிடும்போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும்போது அந்த நீருக்காக அவனை புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான் என்பதும் நபிமொழி. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ.

உணவை குறைகூறக் கூடாது விருந்துக்கு செல்லும்போது குறைகள் இருந்தால் அதை சகித்துக்கொள்ள வேண்டும். அதை வெளிப்படுத்தும்போது விருந்தளித்தவர் மனது கஷ்டப்படலாம்.
பிடிக்காத உணவு வைக்கப்படும் நேரத்தில் அதை உண்ணாமல் ஒதுக்குவது தவறல்ல. நபி (ஸல்) அவர்கள் முன்னே உடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவில்லை. இதைக் கண்ட காலித் இப்னு வலித் (ரலி) இது ஹராமா? என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள் “இல்லை” (இது) என் குடும்பத்தில் நான் காணாத உணவாகும். அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறியவுடன், காலித் இப்னு வலித் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, தன்னருகே அதை இழுத்துக்கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள். அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

முஅத்தா. நின்றுகொண்டு நீர் அருந்தக் கூடாது நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு குடிப்பதை தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்.
தண்ணீரில் மூச்சுவிடவோ, ஊதவோ கூடாது. குடிக்கும் பாத்திரத்தில் மூச்சுவிடுவதையும் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா.
உங்களில் எவரும் இடதுகையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில், சைத்தான்தான் இடது கையால் குடிக்கிறான், சாப்பிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: முஸ்லிம் முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ.

முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்கள் முஸ்லிமல்லாதவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது அவர்களின் பாத்திரங்களில் உண்ணலாமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களோடு நாங்கள் போரிலிருந்த சமயம் இணை வைப்போரின் பாத்திரங்கள் கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள் உபயோகித்தோம். அது விஷயமாக நபி (ஸல்) அவர்களால் நாங்கள் குறை கூறப்படவில்லை. அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்.

முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதும், அதில் சமைப்பதும் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. என்றாலும் தூய்மையான உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களையே சாதாரணமாக பயன்படுத்தலாம்.
பன்றி இறைச்சி போன்றவை சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், மது அருந்தப் பயன்படும் குவளைகள் ஆகிய பாத்திரங்களில் உணவு தரப்படுமானால், அதை நன்றாகக் கழுவிய பின் உண்ணலாம், பருகலாம். இதைப் பின்வரும ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அபூஸல்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் வேதமுடையோரின் அருகில் வசிக்கிறோம். அவர்கள் தங்களின் சமையல் பாத்திரங்களில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள்.
அவர்களின் பாத்திரங்களில் மது அருந்துகிறார்கள் (அந்தப் பாத்திரங்களை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டார். அவர்களின் பாத்திரங்கள் அல்லாத (வேறு) பாத்திரங்கள் கிடைத்தால் அதில் உண்ணுங்கள், குடியுங்கள். அவர்களிடம் மட்டுமே பெற்றுக்கொண்டால் தண்ணீரால் கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.

நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டுவாசலை நபி (ஸல்) அடைந்ததும், விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார்.
நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் விரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்.

இதையும் பார்க்க:-
                               * மதம் மாறினால் மரண தண்டனையா?
                              * மறுமை நாள் - ஒர் நினைவூட்டல்
                              * ஹஜ்ஜு என்னும் அருள்மாதம்
                              * கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்!
                              * "எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது...

 

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள்.

அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல


்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.

இறுதித் தூதுவராக வருகை தந்த நபிகளார் அவர்கள் இறைத்தூதுப் பணிக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தார்கள். அவர்களைப் பற்றி திருக்குர்ஆனின் பின்வரும் கருத்து அவர்களின் அழகிய நற்குணத்திற்குச் சிறந்த சான்றிதழாகும்.


நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். அல்குர்ஆன் 74:4

அழகிய குணங்கள் நிறைந்த நபிகளார் நமக்கு சிறந்த முன்மாதிரி. அவர்களைப் பின்பற்றி நடப்பது முஃமின்களின் கடமையாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

எனவே அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி நபிமொழிகளில் கூறப்பட்டிருப்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

நபித்துவத்திற்கு முன்னால்…

நபிகளார் இறைத்தூதராவதற்கு முன்னால் இருந்த மக்களிடம் நல்லறங்களை விட தீமையான காரியங்கள் தான் அதிகம் இருந்தது.
மது, மாது என்று எல்லா கெட்டப் பழக்கங்களும் இருந்த கால கட்டத்தில் பிறந்த நபிகளார் அவர்களிடம் மிகச் சிறந்த நல்லறங்கள் நிறைந்திருந்தன.

(இறைச் செய்தி அருளப்பட்டவுடன் தமக்கு ஏதோ ஆகி விட்டது என்று பயந்த நபியவர்களிடம்) கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
நூல்: புகாரி 3

பொய் பேசியதில்லைஉண்மை, நேர்மையின் பிறப்பிடமாக நபிகளார் திகழ்ந்தார்கள். அவர்களிடம் பொய் பேசும் பழக்கம் இருந்ததில்லை என்று அன்றைய கால மக்களே சான்று பகர்ந்துள்ளனர்.

“(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும் (26:214 - ஆவது) இறை வசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்) அழைக்கலானார்கள்.


அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ட்ட குறைஷியர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?” என்று கேட்க, மக்கள் “ஆம். (நம்புவோம்); உங்கடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை” என்று பதிலத்தனர்.


நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்” என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், “நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?” என்று கூறினான்.
அப்போது தான் “அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்……” என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4770
ஹெராக்ளியஸ் மன்னர் நபிகளாரைப் பற்றி அபூஸுஃப்யான் அவர்களிடம் விசாரித்த போது அவர்களின் நேர்மைக்கு சான்று பகர்ந்தார்கள். அப்போது அபூஸுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களா?” என்று கேட்டார். நான் இல்லை’ என்றேன்…
“நான் உம்மிடம் அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா’ என்று கேட்டேன்.
அதற்கு நீர் இல்லை’ என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்” என்று ஹெராக்ளியஸ் மன்னர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 7
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள், நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள்’ என்று சொல்லப்பட்டது. அப்போது மக்களெல்லாம் அவர்களை நோக்கி விரைந்தார்கள். நானும் மக்களுடன் அவர்களைப் பார்க்கச் சென்றேன். அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன்.
அவர்களின் முகம் பொய் சொல்லும் முகமாகத் தெரியவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஸலாத்தை பரப்புக்குங்கள், (பசித்தவருக்கு) உணவளியுங்கள், மக்கள் உறங்கும் வேளையில் தொழுங்கள், மன அமைதியுடன் சொர்க்கம் செல்வீர்கள்’ என்பது தான் அவர்களின் பேசிய முதல் பேச்சாகும். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)                                   நூல்: திர்மிதீ 2409, இப்னுமாஜா 1323, தாரமீ 1424
அன்பின் பிறப்பிடம்“அவர்கள் (அறியாமைக் காலத்தில்) முரண் பிடித்துப் பேசியதும் இல்லை, சண்டையிட்டதும் இல்லை” என்று அவர்களின் அறியாமைக் கால நண்பர் ஸாயிப் பின் அபீ ஸாயிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அஹ்மத் 14956, அபூதாவூத் 4196, இப்னுமாஜா 2278
குர்ஆனே அவர்களின் குணம்இறைத் தூதரான பிறகு திருக்குர்ஆன் எந்த குணங்கள் இருக்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளதோ அந்த குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களாக அவர்கள் திகழ்ந்துள்ளாகள் என்பதற்கு அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் சான்றளிக்கிறார்கள்.
நான், “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “நீர் குர்ஆனை ஓதவில்லையா?” என்று கேட்டார்கள். நான் ஆம் (ஓதியிருக்கிறேன்)’ என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள். இதைச் செவியேற்ற நான் எழுந்து விடலாம் எனவும், இனிமேல் நான் இறக்கும் வரை எவரிடமும் எது குறித்தும் கேட்க வேண்டியதில்லை என்றும் எண்ணினேன். அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)  நூல்: முஸ்லிம் 1357
திருக்குர்ஆன் என்ன கட்டளையிட்டாலும் அதை உடன் செயல் படுத்துபவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். 110ஆவது அத்தியாயம், இறைவனைப் புகழவும், பாவமன்னிப்புக் கோரவும் கட்டளையிடுகிறது. அதை உடன் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதிலும் அதிகமாக சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பப்பாயாக!) என்று கூறி வந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 4968
கொடை வள்ளல்
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பேராசைப்படும் மக்கள் வாழும் இவ்வுலகத்தில் இருப்பதையெல்லாம் நற்காரியங்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக நபிகளார் திகழ்ந்தார்கள். இதனால் வறுமை ஏற்பட்டு விடுமோ என்று அவர்கள் அஞ்சியதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 6, 1902
சஹ்ல் (ரலி) அவர்கள் “ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் புர்தா – குஞ்சங் கட்டப்பட்ட சால்வை – ஒன்றைக் கொண்டு வந்தார்” என்று கூறி விட்டு, “புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட போது (அங்கிருந்தோர்) “ஆம்! புர்தா என்பது சால்வை தானே!” என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள், “ஆம்” எனக் கூறி விட்டு, மேலும், அப்பெண்மணி “நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்.

இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்” என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தபோது ஒருவர் “இது எவ்வளவு அழகாக இருக்கின்றது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்து விடுங்கள்” என்று கேட்டார்.

உடனே அங்கிருந்தோர் “நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே!” எனக் கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை; அது எனக்கு பிரேத உடை (கஃபன்) ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்” என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது” என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 1277
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹுனைன்’ போரிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள் விட்டார்கள். நபியவர்கன் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, “என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்கன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்கடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்: புகாரி 2821

தன்னை எதிர்ப்பதில் கடுமை காட்டிய கடும் எதிரிகளுக்குக் கூட கருணை காட்டியவர்கள் நபிகளார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த முஸ்லிம்களும் புறப்பட்டுச் சென்று ஹுனைன் எனுமிடத்தில் (ஹவாஸின்’ குலத்தாருடன்) போரிட்டனர். அப்போது அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியளித்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய தினத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவுக்கு (முதலில்) நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு இன்னும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு மேலும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்.

(முந்நூறு ஒட்டகங்களைப் பெற்றுக் கொண்ட) ஸஃப்வான் பின் உமய்யா, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்று தாராளமாக) எனக்கு வழங்கினார்கள். அப்போது அவர்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் வெறுப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எனக்கு நன்கொடைகள் வழங்கிக் கொண்டே வந்து மக்களிலேயே எனக்கு மிகவும் உவப்பானவர்களாய் ஆகி விட்டார்கள்” என்று கூறியதாக சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.நூல்: முஸ்லிம் 4631
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப்பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று சொன்னார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி),                                நூல்: முஸ்லிம் 4629

 

 

இதையும் பார்க்க:-

                               * மதம் மாறினால் மரண தண்டனையா?

                             * ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா..?

                             * விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்"

                             * பிறந்த நாள் கொண்டாடலாமா..?


 

 




ஈமானின் ஃபர்லுகளில் ஒன்று மறுமை நாளை நம்புவது. இன்று நாம் வாழ்கின்ற உலகம் ஓரு சோதனைக் கூடம், இது நிரந்தரம் அல்ல. இந்த உலகம் ஓரு நாள் அழிக்கப்படும். பின் மறுமை நாள் என்று ஒன்று உண்டு. அதில் நாம் இந்த உலகில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்றார் போல் இறைவன் தீர்ப்பு வழங்குவான். நன்மை தட்டு கனத்தவர்களுக்கு சுவர்க்கமும், தீமைத்தட்டு கனத்தவர்களுக்கு நரகமும் வல்ல இறைவனால் சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறுமை நாளின் வாழ்க்கையே நிரந்தரமானது. சுவர்க்க வாதிகளும், நரக வாதிகளும் அதில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஈமான் கொண்டால்தான் நாம் ஈமானில் பரிபூரணப்பட்டவர்கள் ஆவோம். இன்று மக்களிடத்தில் நன்மையை ஏவினாலோ அல்லது தீயசெயல் ஒன்றை தவிர்க்கச் செய்தாலோ எளிதாக அவர்கள் நாவிலிருந்து உதிக்கும் சொல்.. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் பாய்! என்பது தான். மறுமை நாள் வருவதற்கு இன்னும் பல 100 ஆண்டுகள் மீதமிருக்கிறதா? அல்லது 100 ஆண்டுகள் வாழ உத்திரவாதம் ஏதும் பெற்றிருக்கின்றோமா?

அல்லாஹ் தனது திருமறையில் மறுமையின் காரியம் இமை மூடித் திறக்கும் நேரத்திற்குள் அல்லது அதைவிட சமீபமாகவே தவிர இல்லை. நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையோன். (அல்குர்ஆன் - 16:77)

மேலும் மறுமை நாளின் நெருக்கத்தைப் பற்றி மாநபி (ஸல்) அவர்கள் கூறும் போது,

 நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம் என்று தனது சுட்டு விரலையும, நடு விரலையும் இணைத்துக் காட்டி கூறினார்கள்.  அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

நன்மையைப் புறக்கணித்து தீயச் செயலில் ஆர்வங்காட்டிக் கொண்டிருக்கும் தோழர்களே! மறுமை நாள் வெகு தொலைவில் இல்லை! 1400 ஆண்டுகளுக்கு முன்பே வெகு நெருக்கத்தில் உள்ளதென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நாமோ 1400 ஆண்டுகளையும் கடந்து வந்து விட்டோம். நாம் நன்மையை செய்ய முனையும் போது அல்லது தீமையைத் தடுக்க முனையும் போது ஷைத்தானின் உந்துதலில் நம் உள்ளம் நமக்குச் சொல்லும் போலியான ஆறுதல் வார்த்தை என்னவெனில், நமக்கு இன்னும் வாழ்நாள் மீதம் இருக்கிறது எல்லாத் தீமைகளும் செய்து முடித்துவிட்டு கடைசியில் ஒட்டு மொத்த தவ்பா செய்து கொள்வோம்... என்பதுதான். இந்த கணமே மறுமை சம்பவித்து விட்டாலோ! அல்லது மரணம் நம்மைத் தழுவிக் கொண்டாலோ! நம் நிலை என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரை மறுமை நாள் வராது. அவ்வாறு உதயமாகும்      பொழுது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரும் ஈமான் கொள்வார்கள். ஆனால் முன்னுமே இறை நம்பிக்கை கொண்டிராத அல்லது நல்லமல்களை முற்படுத்திக் கொள்ளாத எந்த ஓர் மனிதனின் நம்பிக்கையும் பலனளிக்காது. (ஆதாரம் : புகாரி)

அதாவது நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சலில் காலம் தாழ்த்தி மறுமை சம்பவிக்கும் போது ஈமான் கொள்பவரின் நம்பிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் கால அவகாசம் நமக்கு கிடைக்காது. மறுமை சம்பவத்தின் ஆரம்பம் முதல் சூர்(எக்காளம்) ஊதப்படுவது தான். உடனே மனிதனை மரணம் தழுவிக் கொள்ளும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்..

மேலும் சூர் ஊதப்படும், பின்னர் பூமியில் மற்றும் வானத்தில் இருப்பவர்கள் அனைவரும் மூர்ச்சையாகி வீழ்ந்து விடுவார்கள். அல்லாஹ் நாடியவரைத் தவிர. இரண்டாம் சூர் ஊதப்பட்டதும் பார்ப்பவர்களாக எழுந்திருப்பார்கள். (அல்குர்ஆன் : 39:68)

சூர் ஊதப்பட்ட பின் சற்றேனும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது. அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துவிடும். அன்று மனிதனின் நிலை மிகக் கடுமையானதாக இருக்கும்.

மறுமை திடீரென்று சம்பவித்து விடும். அதன் விரைவைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பேர் (விற்பனைக்காக) துணியை விரித்து இருப்பார்கள். அவர்கள் துணியை விற்பனை செய்திருக்கவும் மாட்டார்கள் சுருட்டியிருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும் ஓர் மனிதன் தனது மடி கனத்த ஒட்டகத்தி(ல் பால் கரந்து அப்போதுதா)ன் வீடு திரும்பியிருப்பார். அதை பருகியிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். உங்களில் ஒருவர் உணவை தனது வாயருகில் கொண்டு சென்றிருப்பார். அதைப் புசித்திருக்க மாட்டார், அதற்குள் மறுமை சம்பவித்துவிடும்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

மறுமை என்றவுடன் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம், ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் பின் வரிசையாக சுவர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ சேர்த்துவிடுவான் என்று. உலகத்தின் நிகழ்வுகளைப் போல தான் இருக்கும் என்றும் எண்ணுகிறோம். அவ்வாறல்ல  அல்லாஹ் தனது திருமறையில்...

மனிதர்களே உங்களுடைய இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மிக்க மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை மறந்துவிடுவார்கள். கர்ப்பம் சுமக்கும் ஒவ்வொரு தாயும் தனது சுமையை இறக்கிவிடுவார்கள். மேலும் மதி மயக்கம் கொண்டவர்களாக மனிதர்களைக் காண்பீர்கள். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியவர்களும் அல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும். (அல்-குர்ஆன் : 22:1-2)

ஆகவே, மறுமை நாளின் அதிர்ச்சியும் கடுமையும் நம் கற்பனைக்கு எட்டாதது. எந்த அளவுக்கென்றால் திக்பிரமை பிடித்து மதி மயங்கியவர்களாக இருப்பர். இன்று நாம் பார்க்கிறோம் நமது உடன் பிறந்தவர்கள், தாய், தந்தை பாசத்திற்குறிய பச்சிளம் குழந்தைகள் நம்மை விட்டு மரணிக்கின்ற பொழுது துக்கம் தாங்கவில்லை. அழக் கூட முடியாமல் மனம் இறுகி செயல்பாடுகள் ஸ்தம்பித்து, நினைவுகள் உறைந்து பார்த்த வண்ணமே இருக்கின்றோமே! இந்த நிலையைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். இதைவிட மறுமையின் நிலை பல ஆயிரம் மடங்கு கொடூரமானதாக இருக்கும். சூரியன் நெருங்கிவிடும். அதன் வெப்பமும், மறுமை நாள் நிகழ்வுகளின் பயமும் மனிதனை பீதியடையச் செய்யும். தீமைகளுக்கேற்றவாறு அதன் கடுமை இருக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் (அவர்கள் தலைக்கருகில் சூரியன் நெருங்கி வருவதினால்) வியர்வை ஊற்றெடுக்கும். அவர்களின் வியர்வை தரையிலும் 70 முழம் வரை சென்று பின் உயர்ந்து அவர்கள் வாயை அடைந்து இறுதியாக அவர்கள் காதுகளையும் அடையும்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி)

அல்லாஹ்வின் வேதத்தில் (மறுமை பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. அது நெருங்கிவிட்டால், நிராகரிப்போரின் கண்கள் திறந்தவாறே இருக்கும். (அப்போதவர்கள்) எங்களுக்கு நேர்ந்த கேடே! திட்டமாக நாங்கள் இதைப் பற்றி மறந்தவர்களாகவே இருந்துவிட்டோம். அதுமட்டுமில்லாது நாங்கள் அநியாயக்காரர்களாகவும் இருந்துவிட்டோம். (எனக் கூறுவர்) எனவே மறுமை நாளை நம்பாது நிராகரித்துவிட்டவர்களின் நிலை, கண்கள் விழித்தவாறே தாங்கள் செய்த துர்ச்செயலை எண்ணி நொந்து கொண்டவர்களாக பிரம்மை பிடித்தவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் யாவரும் நரக நெருப்பின் விறகுகளே ஆவர்.
(அல்குர்ஆன் : 21: 97,98)

மறுமையை நம்பி இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடந்த நல்லடியார்களின் நிலை சந்தோஷகரமானது.

அல்லாஹ் தன் திருமறையில்... நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடத்திலிருந்து நன்மைகள் முந்தி விட்டதோ அவர்கள் நரகத்தை விட்டு தூரமாக்கப்பட்டவர்கள். அன்றியும் அவர்களின் மனம், தாம் விரும்பியவற்றில் நிரந்தரமாக இருக்கும். (மறுமை நாளில்) மாபெரும் திடுக்கம் அவர்களை கவலைக்கு உள்ளாக்காது. மேலும் மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்த அந்த நாள் இதுதான் (என்று கூறுவர்)  (அல்குர்ஆன் : 21: 101-103)

எனவே மறுமை நாள் நல்லோர்க்கு மிகச் சந்தோஷமான நாளாகும். அவர்கள் இம்மையில் தன் இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவன் மறுமையில் சித்தப்படுத்தி வைத்துள்ள நிரந்தர சுவர்க்கத்தை அடைவதற்கு பேராவல் கொண்டதன் காரணமாக வல்ல இறைவன் அவர்களை சுவர்க்கத்தில் புகச் செய்து அதில் நிரந்தரமாக தங்கச் செய்து விடுவான். அதே நேரம், மறுமையை நம்பாத உலகமே நமக்கு நிரந்தரம், அல்லது பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று போலிச் சமாதானம் கூறியவர்களும், உலகத்தில் சொற்ப இலாபத்திற்காக பணம், காசு, பெண் மோகம் என்று இம்மையை நேசித்து மறுமையில் வல்ல இறைவன் நமக்குத் தரக்கூடிய சுவர்க்கத்தை நிராகரித்து, செய்த தவறுகளுக்கு மறுமையில் நாம் வல்ல இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரணை செய்யப்படுவோம்.

நிச்சயமாக நாம் செய்த இந்த தீயச் செயலுக்கு பகரமாக மறுமையின் நரக நெருப்புக்கு விறகுகளாவோம் எனும் அச்சமின்றி அதை நிராகரித்தவர்களுக்கு வல்ல இறைவன் மறுமை நாளை கஷ்டமானதாகவும், கடுமையானதாகவும் ஆக்கி அவர்களை நரகத்தில் நிரந்தரமாக தங்கச் செய்துவிடுவான்.

ஆகவே, உலக வாழ்க்கை சொற்பமானதே! அதே நேரம் மறுமை வாழ்க்கை நிரந்தரமானது என்பதை உணர்ந்து, மறுமை நாள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வந்துவிடும். மரணம் நம் அருகாமையியே இருக்கிறது. மேலும் மறுமையின் நிகழ்வுகள், அதன் வேகம், வீரியம் போன்றவற்றை கருத்தில் கொண்டு நல்ல அமல்கள் செய்வதிலும், தீமைகளை தாமதிக்காது விட்டுவிடுவதிலும் செய்த தீமைகளை விட்டுவிட்டு உடன் தௌபாச் செய்து இனி இப்பாவத்தை செய்யமாட்டேன், எனச் சபதம் ஏற்போம். இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.
 

இதையும் பார்க்க:-
                                 * தும்மல் - இஸ்லாமிய ஒழுங்குமுறை..
                                * ஸியாரத் என்றால் என்ன...?
                                * ஆஷுரா நோன்பின் சிறப்புகள்
                                * வலீமா புறக்கணிப்பு சரியா...?
 
 

                              தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

"ஸஜ்தா திலாவத்"தைத் தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் போன்று செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்குத் தொழுகைக்காக நாம் செய்யும் ஒளுவைப் போன்று ஒளு செய்ய வேண்டிய தேவை இல்லை....!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி ஸஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு ஸஜ்தாச் செய்யக்கூட இடம் கிடைக்காது. தொழுகையல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது! அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) (நூலகள்: புகாரி, 1075. முஸ்லிம், 1006)



 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் பெயரால்..
                                                                   தும்மல் - இஸ்லாமிய ஒழுங்குமுறை..

தும்மல் என்பது மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்குக் கூட ஏற்படக்கூடிய ஒரு செயலாகும். மிருகங்களைப் போன்று மனிதர்களும் தம் தும்மலை அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதால்தான் தும்மும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை இஸ்லாம் சொல்லிக் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்)
நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் மீது எச்சில்கள் பட வாய்ப்புள்ளது. இது அருவறுப்பையும், பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். அதே போன்று தும்மலால் ஏற்படும் சப்தம் அருகில் உள்ளவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம். இவைகளைத் தவிர்க்கவே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முறையை கடைபிடித்துள்ளார்கள்.

தும்மல் இறைவன் புறத்தில் நின்றும் உள்ளதாகும் என்பது நபி மொழி. அபஹுரைரா (ரலி) (நஸயீ, இப்னு ஹிப்பான், ஹாக்கிம்)
தும்மலை அல்லாஹ் விரும்புகிறான் என்பதும் நபி மொழி - அபூஹுரைரா (ரலி) திர்மிதி.

தும்மும் போது மனிதர்கள் எவ்வளவோ புத்துணர்வு பெறுகிறார்கள். சுவாசக் குழாய்களில் இருக்கும் அடைப்புகள் கூட வெளியேறுகின்றன. தும்மலினால் மனிதர்களுக்கு பல நன்மைகள் விளைவதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கின்றது. இஸ்லாம் தும்மலை விரும்புவதற்கு இப்படி பல காரணங்களைக் கூறலாம்.

தும்மலால் ஏற்படும் இவ்வளவு நன்மைகளும் இறைவன் புறத்திலிருந்து வருவதால் தான் தும்மல் என்ற அந்த சுகத்தைப் பெற்றவர்கள் இறைவனைப் புகழ வேண்டும் என்கிறது இஸ்லாம்.

உங்களில் எவரேனும் தும்மினால் 'அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்' (எல்லா நிலைகளிலும் இறைவனுக்கே புகழனைத்தும்) என்று கூறட்டும். இவ்வாறு கூறியதை செவியேற்கக்கூடியவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) என்று பதில் கூறட்டும். பிறகு தும்மியவர் 'யஃபிருல்லாஹு லீ வலகும'; (இறைவன் உங்களையும் என்னையும் மன்னிப்பானாக!) என பதில் அறிவிக்கட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். (ஹிலால் பின் யஸார் (ரலி) திர்மிதி.)

'யஃபிருல்லாஹு லீ வலகும'; என்பதற்கு பதிலாக 'யஹ்தீகுமல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (இறைவன் எங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலைமையை சீர்செய்வானாக) என்று கூறட்டும் என்று நபிமொழி அலி (ரலி), அபூஅய்யூப் (ரலி) வாயிலாக அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அருகில் ஒருவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் கூறினார். நபி (ஸல்) 'யர்ஹமகல்லாஹ்' என்றார்கள். அவர் மீண்டும் தும்மினார். உடனே நபி (ஸல்) இவருக்கு ஜலதோஷம் பிடித்துள்ளது என்றார்கள். ஸலாமா (ரலி) அறிவிக்கும் இந்த செய்தி முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றள்ளது

தும்மியவருக்கு மூன்று முறை பதில் கூறு. தொடர்ந்து தும்மினால் பதில் கூறுவதோ, கூறாமல் இருப்பதோ உன் விருப்பம் என்ற ஒரு நபி மொழி திர்மிதியில் இடம் பெறுகிறது. இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் இஸ்ஹாக் என்ற அறிமுகமில்லாதவர் இடம் பெறுவதால் இது பலவீனமான ஹதீஸாகும்.

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு பதில் கூறலாமா?
நபி (ஸல்) அவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என்று கூற வேண்டும் என்பதை எதிர்பார்த்து யூதர்கள் வேண்டுமென்றே நபி (ஸல்) முன்னிலையில் தும்முவார்கள். யூதர்கள் எதிர்பார்ப்பது போன்று நபி (ஸல்) கூறாமல் 'யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்களை சீர்படுத்துவானாக) என்று கூறி விடுவார்கள். (அபூமூஸா (ரலி) அபூதாவூத், திர்மிதி, நஸயீ)
 
இதையும் பார்க்க:- 
                              * மதம் மாறினால் மரண தண்டனையா?
                              * மன அமைதிக்கு மனைவி அவசியம்
                              *  திருக்குர்ஆனை தொடக் கூடாதாமே?!!
 
 

தூக்கம் என்பது வாழ்வின் எந்த அளவுக்கு இன்றியமையாத தேவை என்பதை நாம் அறிவோம்
ஒரு முஸ்லிம் தூக்கத்தை அல்லாஹ் தன் அடியாருக்கு வழங்கிய அருட்கொடையாகவே கருத வேண்டும்

அவன் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருப்பது அவன் அருட்கொடைகளில் ஒன்று தான். இரவை நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதர்க்காகவும் பகலை அவனுடைய அருட்கொடையை தேடவேண்டும் என்பதர்க்காகவும் (28:73)

எனவே இறைவன் நமக்கு அழிக்கக்கூடிய அருட்கொடைகள் ஒவ்வொன்றிர்க்கும் நாம் நன்றி செலுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும்

எனவே ஒரு முஸ்லிம் தான் தூங்கும் போது பின் வரும் ஒழுக்கங்களைப் பேணுவது இந்த அட்ருட்கொடைக்கு நன்றி செலுத்துவதாக அமையும்.

தூங்குவதின் ஒழுங்கு முறைகள்:

தூங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

1.படுக்கைக்கு செல்வத்ர்க்கு முன்பு தொழுகைக்கு உழு எடுப்பதைப் போன்று உழு எடுத்துக்கொள்ள வேண்டும் (புஹாரி)

2.நாம் அணிந்திருக்கக்கூடிய ஆடையின் ஓரத்தைக் கொண்டு படுக்கவிருக்கும் விரிப்பை மூன்று முறை தட்டி விட வேண்டும்(புஹாரி)

 
3.தூங்குவத்ர்க்கு முன் திருக்குர்ஆனின் 2வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் (ஆமன ரஸூலு) என தொடங்கும் 285,286 ஆகிய வசனங்களை ஓதிக் கொள்ள வேண்டும் (புஹாரி)
4.பின் திருக்குர் ஆனின் சூரத்துல் இஹ்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் ஆகிய சூராக்களை ஓதி இரண்டு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும் (புஹாரி)

5.திருகுர்ஆனின் சூரத்துல் பகராவின் 255 வது வசனமான ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் இவ்வாறு ஆயத்துல் குர்ஸியை ஓதக்கூடியவர்களுக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹுவதாலா அன்றைய இரவு முழுவதும் நமது பாதுக்காப்பிற்க்காக ஓர் மலக்கை நியமிக்கின்றான் (புஹாரி)
6.பின் 33 ஸுப்ஹானல்லாஹ், 33 அல்ஹம்துலில்லாஹ், 34 அல்லாஹுஅக்பர் என்று தஸ்பிஃஹ் செய்தல் (புஹாரி)
7.படுப்பதர்க்கு முன் அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா என்று ஓதி விட்டு படுக்க வேண்டும் இதன் பொருள் “யா அல்லாஹ் உன் பெயரைக்கொண்டு மறனிக்கின்றேன் உன் பெயரைக்கொண்டு உயிர்வாழ்கின்றேன் .(திர்மிதி)

8.நீங்கள் உறங்குவதர்க்கு முன் விளக்குகளை அனைத்து விடுங்கள்,கதவுகளை தாள்பாழிட்டுவிடுங்கள் உணவையும் பாணத்தையும் மூடி வையுங்கள் (புஹாரி)

9.இவை அனைத்தும் முடித்து படுத்தப் பிறகு இறுதியாக இந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்

அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ இலைக், வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக், வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய இலைக், லா மல்ஜஅ

வலா மன்ஜா மின்க இல்லா இலைக், ஆமன்த்து பி கிதாபிகல்லதி அன் ஜல்த்த, வ பி நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த.

பொருள்: யா அல்லாஹ் நான் என் மனதை உன்பால் சரணடையுமாறு செய்துவிட்டேன் மேலும் என் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் மேலும் எனது முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன்

மேலும் எனது முதுகையும் உன் பக்கம் ஒதுக்கிவிட்டேன் உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்..! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை விட்டு விரண்டோடும் இடமோ உன் அளவிலே தவிர வேறில்லை!

நீ இறக்கியருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன். (இவ்வாறு ஓதிவிட்டு தூங்கி அதே நிலையில்) நாம் மரணம் அடைவோமேயானால் (இன்ஷாஅல்லாஹ்) தூய்மையானவர்களாகவே மரணிப்போம். (புஹாரி)

தூங்கி விழிக்கும் போழுது சொல்ல வேன்டியவை:

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஃதமா அமாத்தனா வ இலைஹின் நுஷுர்

பொருள்:-எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ! அவனே நம்மை மரணம் எண்ணும் தூக்கத்தில் ஆழ்த்திய பின் உயிர் பெற்றெழச்செய்தான் மேலும் (நாளை மறுமையில்) மீண்டும் எழுப்பப்பட்டு அவனிடமே செல்ல வேண்டியுள்ளது)

தூக்கத்தில் கெட்ட கனவு கண்டால்:
கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு கீழ்கண்ட துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹுவிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

அல்லாஹ் கூருகின்றான்:

ஈமான் கொண்டவர்களே அல்லாஹுவை அதிகமதிகமாக
திக்ரு(தியானம்) செய்யுங்கள் இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதியுங்கள் 
(33: 41,42)
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கின்றேன் எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (2: 152)
அல்லாஹுவை அதிகமாக நினைவுக்கூரக்கூடிய ஆண்கள்-பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பபையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் (32: 35)

னவே அன்புச் சகோதரர்களே நம் வாழ்கையின் ஒவ்வொறு விஷயங்களையும் குர்-ஆன்,ஹதீஸின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு என்னேரமும் இறை நினைவோடு கூடிய ஓர் சீரான வாழ்கையை வாழ நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.....!

இதையும் பார்க்க:-
                              * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…
                              * விபச்சாரம் பற்றி இஸ்லாம்
                              * இஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434
                              * பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)
                              * வரதட்சணை வன்கொடுமைக்கு யார் காரணம்?


                               

"இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை

மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,

அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்." (திருக்குர்ஆன் 24;31)
அழகு முழுமையாக வெளிப்படும் இடம் முகம்
பித்னாவுடைய இடம் முகம்

"கால்களின் அழகை வெளிபடுத்த வேண்டாம்" என கட்டளை இட்ட அல்லாஹு முகத்தை வெளிக்காட்ட அனுமதி அளிப்பானா??
உலகில் தான் படைத்தவற்றிலே மிகவும் கவர்ச்சியான படைப்பாக அல்லாஹு கூறுவது பெண்களைத்தான்

"இவ்வுலகில் ஆண்களுக்கு நான் விட்டு செல்லும் முதல் பித்னா பெண்கள்தான்" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..( புகாரி சரீபிலே பதிவாகி உள்ள ஹதீத் )

ஆண்களுக்கு மிகப் பெரிய சோதனை பெண்கள்தான்...

நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)
பெண்களை படைத்து அவளுக்கு அழகை கொடுத்து அதை வெளிப்படுத்தும் ஆசையை கொடுத்து அதை மறைக்கும் படி கட்டளை இடுபவனும் அல்லாஹு தான். இது பெண்களுக்கு உரிய சோதனை....

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, (திருக்குர்ஆன் 79:40)நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும். (திருக்குர்ஆன் 79:41)

சோதனைகளில் வெற்றிபெறும் பொருட்டு நாம் பல தியாகங்களை செய்ய வேண்டும் அவற்றுக்குரிய மேன்மையான கூலி அல்லாஹுவிடம் இருக்கிறது

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (திருக்குர்ஆன் 33:32)
நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (திருக்குர்ஆன் 33:33)

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (திருக்குர்ஆன் 33:59)
பெண்கள் வெட்கத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும், பெண்களின் கண்ணியம் நாணத்தில்தான் உள்ளது!

அல்லாஹு நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்....


இதையும் பார்க்க:-
                                  * குழந்தைகளு​க்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்…
                                  * முஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..? துயரமா...?
                                  * இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...
                                  * 'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...
                                  * ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!


 

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

இறுதித் தூதராக முஹம்மத் நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் அகில உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

'இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).



இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது சட்டமா...? இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..?ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள். ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக,


                                    தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!

ஸியாரத் என்ற அரபுச் சொல்லுக்கு சந்தித்தல் என்பது பொருள். ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும். அவர்கள் மறுமை வாழ்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மண்ணறைகளுக்குச் சென்றுவர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கப்ருகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகைகள் உள்ளன.

சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.
எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: முஸ்லிம் 4320

இறைவனுக்கு இணையானவராகக் காட்டும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) “மன்னாதி மன்னன்’ எனப் பெயரிடப்பட்ட மனிதர் தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),                                                  நூல்: முஸ்லிம் 4339, புகாரி 6205
 
என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் “அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி),
நூல்: அஹ்மத் 16944

ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டி அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ் தான் “ஹகம்” (நீதிபதி) ஆவான். அவனிடம் தான் “தீர்ப்பு” உள்ளது. நீர் ஏன் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “இது அழகானதல்ல” எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார்? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஷுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி “அபு ஷுரைஹ்” (ஷுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள்.
நூல்: அபூதாவூத் 4304 நபியவர்களின் புனைப் பெயர்

நபியவர்களின் புனைப் பெயரை மற்றவர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற “அபுல் காசிம்’ ஆவேன்.அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4323

ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அது குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரான முஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரை வைப்பது கூடாது என்று தான் தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்’ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: அஹ்மத் 9226

மேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரை வைப்பதற்குத் தடை விதிக்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் “அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) “நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார்கள். நூல்: புகாரி 2120
இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது.எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.

ஒருவரை தீயவராகக் காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதை வெறுத்துள்ளார்கள்.

என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள்) நபி (ஸல்) அவர்கüடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) “சஹ்ல்’ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்கüல்) முரட்டுத்தனம் நீடித்தது.
அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி),
நூல்: புகாரி 6190
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆஸியா’ (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
நூல்: முஸ்லிம் 4332
இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா என்பது அய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.
அலிஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்னுடைய மனைவி அன்னை ஆசியா (அலை) அவர்களின் பெயராகும்.
நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த நபர்களில் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் “அஸ்ரம்’ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள், இல்லை. நீ “சுர்ஆ” (விளைவிக்கும் பூமி) என்று கூறி (அவருக்கு பெயர் சூட்டி)னார்கள்)
அறிவிப்பவர்: உஸாமா பின் உஹ்தர் (ரலி), நூல்: அபூதாவூத் 4303

மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்ற பெயர் கொண்ட ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினார். நபியவர்கள் அவரின் பெயரை முதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள். அவருக்கு பெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தை தழுவ மாட்டார்; கட்டுப்படுபவர் தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும் குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

மக்கா வெற்றி நாளின் போது நபி (ஸல்) அவர்கள் கூற முதீவு (ரலி) அவர்கள் செவியேற்றார்கள்: (நபியவர்கள் கூறினார்கள்) இந்த நாளுக்குப் பிறகு குரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு) மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை “(முதீவு)” தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை.
அவரின் பெயர் “ஆஸி” (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “முதீவு” (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள்.
நூல்: அஹ்மத் 15446
பஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்.
அறிவிப்பவர்: பஷீர் (ரலி), நூல்: அஹ்மத் 20950

தன்னைத் தானே பரிசுத்தப்படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4335

நான் என் புதல்விக்கு “பர்ரா’ (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு “பர்ரா’ என்ற பெயரே சூட்டப் பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருக்கு “ஸைனப்’ எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 4337
சில பெயர்கள் அழகிய பொருளுடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறி அழைக்கும் போது, அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகிய தன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைத் தடை செய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டு கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 4334

சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்
நூல்: முஸ்லிம் 4328
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
“இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை’ என்று பதில் வரும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றை விடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம். அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி),
நூல்: முஸ்லிம் 4330

நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதைக் கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்) என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.
அறிவிப்பவர்: ஸலாமா (ரலி), நூல்: அஹ்மத் 16542
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள். நூல்: முஸ்லிம் 4331

நம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது மேற்கண்ட அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.
ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல் இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபிப் பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. இவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.
மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச் சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குப் பெயர் சூட்டும் போது எந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்து தான் வைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். நபியவர்கள் அப்படி எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.
ஒருவர் விரும்பினால் தன்னுடைய மகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன் இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பது தான் சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது தவறாகும்.....


இதையும் பார்க்க:-
                                    * பெர்முடா முக்கோணம் (சைத்தானின்முக்கோணம்)
                                    * இன்சூரன்ஸ்" - சுருக்கமாக ஓர் விளக்கம்!
                                    * புறம் பேசுதல் என்றால் என்ன?
                                    * பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)
                                   

 

                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
நிய்யத் எனும் எண்ணம்.

ஒருவர் எந்த அமலைச் செய்தாலும் அந்த அமலைச் செய்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு இருக்க வேண்டும். அந்த எண்ணமில்லாமல் வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது. ஒருவர் சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றார்.



                                        தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...!
 
உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள்அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன.

இலங்கையின் தலை நகர் கொழும்பில் இருக்கும் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம் (Galle Face) காலி முகத் திடல்.
ஆசியாக் கண்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகவும் இந்த காலி முகத்திடல் கருதப் படுகிறது.ஆசியாவின் மிகப் பிரபலமான கடற் கரையாக தமிழகத்தின் மெரீனா கருதப் படுகிறது.அதற்கடுத்த இடம் காலி முகத்திடலுக்குத்தான்.
 
காலி முகத்திடல் எப்போதும் மக்கள் வெள்ளத்தினால் நிறைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே!
உலகின் பல நாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பிரயாணிகள் ஒரு முறையேனும் இந்த காலி முகத்திடலுக்கு சென்று வருவது வழக்கம்.
இலங்கையின் ஆட்சி செய்யும் அரசாங்கள் தங்களின் முக்கியமான நிகழ்ச்சிகளை இந்த இடத்தில் தான் பெரும்பாலும் நடத்துவார்கள்.
 
அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)
 
புனிதமிக்க ரமழானும் புனிதம் கெட்ட முஸ்லீம்களும்.
ரமழானின் ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரவு நேரங்களில் இந்த காலி முகத்திடல் மக்கள் கூட்டத்தினால் நிறைந்து காணப்படுவது வழக்கம்.
இம்முறையும் அதே நிலை தொடர்ந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.இருந்தாலும் அங்கு நடக்கும் நிகழ்வுகளும் நமது சமுதாய மக்களின் நிலைமையும் தான் மிகவும் கவலைக்குறியதாகும்.
அதாவது காலி முகத்திடலுக்கு இரவு நேரங்களில் வரும் முஸ்லீம் சகோதர சகோதரிகளில் பெரும்பாலும் குடும்பத்தினருடன் வருபவர்களும் உண்டு இதே நேரம் தனியாக அல்லது நண்பர்கள் சகிதம் வருபவர்களும் உண்டு.
 
ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)
”உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)
 
இவர்களில் பெரும்பாலான முஸ்லீம் ஆண்கள் நடந்து கொள்ளும் முறைகள் மற்ற மதத்தினராலேயே கடுமையாக விமர்சிக்கப் படுவதுதான் மிக கவலையான விஷயமாகும்.
ஆபாசமான சினிமாப் பாடல்கள் தொடங்கி அசிங்கமான சிங்களப் பாடல் வரை ஒரு முஸ்லிமுக்கே இல்லாத அனைத்து காரியங்களையும் இவர்கள் செய்கிறார்கள்.
பெண்களை கிண்டலடிப்பது தகாத வார்த்தைகளால் அவர்களை வர்ணிப்பது அவர்களுக்கு கெட்ட வார்த்தைகளால் பேசுவது போன்றவை இவர்களின் இரவு நேர பொழுதுபோக்கு.(?)
 
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.அல் குர்ஆன் (33 : 59)
 
காற்றில் பரப்பது பலூன்களா முந்தானைகளா?
இரவு நேரத்தில் காலி முகத்திடலுக்கு செல்லும் பெண்களில் ஒரு பகுதியினர் சரியான முறையில் சென்று வந்தாலும் பெரும்பகுதியினர் மார்க்கத்திற்கு முரனான காரியங்களில் சர்வ சாதாரனமாக ஈடுபடுகின்றனர்.
ஆண்களுடன் சேர்ந்து இரவுக் குழியல் போடுவதும் கும்மாளமடிப்பதும் ஆண்களுக்கு நாங்கள் சலித்தவர்கள் இல்லை என்பது போல் அனைத்து அனாச்சாரங்களிலும் கலந்து கொள்வதும் இவர்களிடம் மார்க்கத்தின் வாடை கூட இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
முந்தானைகள் மூலம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளையெல்லாம் அன்னிய ஆண்களுக்கு முன் வெளிக்காட்டிக் கொண்டு திரிகின்ற இத்தகைய பெண்கள் தங்கள் நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் அத்துடன் இறைவனிடம் இதற்கு கடும் தண்டனை உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)
 
கெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:
”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)
 
றைவனின் கட்டளையைப் பாருங்கள்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள் தமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது)
 
நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.(24:31)
காலி முகத்திடல் போன்ற பொது இடங்களுக்கு செல்லும் முஸ்லீம் சகோதரிகள் இஸ்லாமிய முறைப்படி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
இதையும் பார்க்க:-
                       * விபச்சாரம் பற்றி இஸ்லாம்

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget